Kandasamy Mariyappan : தமிழ்நாட்டில்...
இடஒதுக்கீடு, 1970க்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் எனது பார்வை.!
அதாவது 41% இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும். BC 25%, SC 15%, ST 1%, OC 59% என்ற நிலை வர வேண்டும்.
MBC முறை நீக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் BC உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு BC ஒதுக்கீட்டிலேயே வைக்க வேண்டும்.! அருந்ததியர்கள் உள் இடஒதுக்கீடு 2.5% என்று மாற்றி தொடர வேண்டும்.!
கிருஷ்ணசாமி உருவாக்கிய புதிய வேளாளர்கள் உட்பட அனைத்து வேளாளர்கள் (முதலியார் BC, பிள்ளைகள் BC, கார்காத்த, கவுண்டர், சோழிய, துளுவ, etc.), செட்டியார்கள் BC, உடையார்கள், அகமுடையார்கள் (தேவர்கள்) அனைவரையும் பொதுப் பட்டியலுக்கு (OC) கொண்டு வர வேண்டும்.!
இரண்டு தலைமுறைக்கு மேலாக இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களை பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.! இதுதான் அந்த சாதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவரை உயர்த்தி விட வழி வகுக்கும்.!
ஒருவேளை இடஒதுக்கீடு உள்ள குறிப்பிட்ட பிரிவில் தகுதியான ஆட்கள் இல்லையென்றால்.., அதே பிரிவில் உள்ள பொதுப் பிரிவினரை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.!
இந்த மாற்றம் செய்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து வைத்துக் கொள்ள உதவும்.!
இல்லையென்றால் வலதுசாரிகள் மக்களிடம் வெறுப்பை உருவாக்கி, இடஒதுக்கீட்டை மொத்தமாக நீக்கி விடுவார்கள் என்பது எனது பார்வை.!
நண்பர்களின் விவாதத்திற்கு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக