ஞாயிறு, 13 டிசம்பர், 2020

குருமூர்த்தி : ரஜினி இன்னமும் எனது கண்ட்ரோலில்தான் இருக்கிறார்

ddd

Image may contain: 2 people, text that says 'திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம் ரஜினி சகோதரர் #Rajinikanth #RajiniBrother #Sathyanarayanan Translate Tweet திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம் ரஜினி சகோதரர் polimernews.com'

nakkheeran.in : சென்னைக்கு வந்த அமித்ஷாவை ரஜினி சந்திக்காததற்கும், அமித்ஷா சென்ற பிறகு திடீரென கட்சியை ஆரம்பிப்பதாக ரஜினி அறிவித்ததற்கும் காரணம், டெல்லியிலிருந்து ரஜினிக்கு வந்த ஒரு மெசேஜ் தான். அந்த மெசேஜ் என்ன என்று நக்கீரனுக்கு கிடைத்தது. அதை அப்படியே வாசர்களுக்குத் தருகிறோம்.

நம்முடைய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி சமீபகாலமாக குருமூர்த்தியை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.            இதற்கு பல காரணங்கள் உள்ளன. குருமூர்த்தி பல சந்தர்ப்பங்களில் தனது தனிப்பட்ட லாபத்திற்காக பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தினார்.                     அதன்மூலம் அவர் பெரிய பெரிய லாபங்களை அனுபவித்தார். ஆகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மத்திய அரசிலுள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் குரு மூர்த்தியிடமிருந்து நீண்ட தூரம் விலகியிருக்குமாறு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே குருமூர்த்தி ஒரு புதிய தந்திரத்தை மேற்கொள்கிறார்.

அதாவது, ரஜினிகாந்த் குருமூர்த்தியின் முழு கண்ட்ரோலில் இருக்கிறார். அவர் எந்த முக்கியமான முடிவு எடுப்பதாக இருந்தாலும் குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்கிறார்.             ரஜினிகாந்த் மத்திய அரசுக்கும், பா.ஜ.க கட்சி மேலிடத்திற்கும் எதையாவது சொல்ல விரும்பினால் குருமூர்த்திதான் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாக பேசுகிறார். அதனால் பா.ஜ.க மேலிடம் குருமூர்த்தி சொல்வதை கேட்கிறது.            ரஜினிகாந்தின் அடுத்த நகர்வுகள் குறித்து அறிந்துகொள்ள குருமூர்த்தியையே பா.ஜ.க மேலிடம் நம்பியிருக்கிறது.                 பா.ஜ.க மேலிடத்திடம் குருமூர்த்தி, ரஜினிகாந்த் அவரது குடும்ப பிரச்சனை, தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றிற்கு என்ன செய்யவேண்டும் என என்னை கேட்கிறார் என சொல்லிவருகிறார். இந்த காரணத்திற்காக டெல்லி, ரஜினிகாந்தின் அனைத்து அசைவுகளுக்குமான மொத்த குத்தகைதாரராக குருமூர்த்தியை நம்புகிறது.

 

அவர் செய்யும் அனைத்து அசைவுகளையும் மீடியாக்களுக்கு சொல்கிறார். அதன்மூலம் அனைத்து அரசியல் கட்சிகளும் அவருடைய கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கவேண்டும் என நினைக்கிறார். இதன்மூலம் அரசாங்க டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பெறுகிறார். தமிழகத்திலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பங்கள் இவரை மத்திய, மாநில அரசுகளில் நடக்க வேண்டிய வேலைகளுக்காக அணுகுகின்றன. அதன்மூலம் குருமூர்த்தி பெரிய லாபத்தொகையை பெறுகிறார். இதுபோல பொய்களை சொல்லி ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரு பெரிய நெட்வொர்க்கை குருமூர்த்தி உருவாக்கியிருக்கிறார். இதன்மூலம்தான் அவர் பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

 

ரஜினிகாந்திற்கு டெல்லி தற்பொழுது முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ரஜினிகாந்த் குருமூர்த்தி மூலமாகத்தான் எதையும் பேசுவார் என்று குருமூர்த்தி சொல்லி வருகிறார். ரஜினிகாந்த் பெயரை வைத்துக்கொண்டு அமித்ஷா போன்ற உயர்மட்ட தலைவர்களை குருமூர்த்தி சந்திக்கிறார். அதை அவரே மீடியாக்களுக்கு சொல்லி வருகிறார். ஆகவே ரஜினிகாந்த் மூலம் குருமூர்த்தி பிரதமர் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில் தான் இழந்த செல்வாக்கை மறுபடியும் பெற முயற்சிக்கிறார் என்பதுதான் டெல்லியிலிருந்து ரஜினிக்கு வந்த மெசேஜ். இந்த மெசேஜை படித்த ரஜினிகாந்த், டென்ஷன் ஆனார். இது உண்மையா என விசாரித்தார். ஆகவே குருமூர்த்தி ஏற்பாட்டில் அமித்ஷாவை சந்திப்பதை ஒட்டுமொத்தமாக ரஜினிகாந்த் தவிர்த்தார் என்கிறது ரஜினிக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான வட்டாரங்கள். 

 

அமித்ஷா உடன் ரஜினியை சந்திக்கவைக்க எல்லா ஊடகங்களிடமும் சொல்லிவிட்டு 11.00 மணிமுதல் 01.30 மணிவரை லீலா பேலஸ் ஹோட்டலில் குருமூர்த்தி காத்திருந்தார். இதன்மூலம் ரஜினி -பா.ஜ.க ஆகியோருக்கு உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி ரஜினி, பா.ஜ.க வலையில் வீழ்ந்துவிட்டார். நான் தான் ரஜினியை பா.ஜ.க வலைக்கு கொண்டு வந்தேன் என குருமூர்த்தி காட்ட நினைத்தார். அன்று ரஜினிகாந்த் குரு மூர்த்தியின் ஃபோனை எடுக்கவில்லை. மறுநாள் அமித்ஷா நேரடியாக ரஜினிகாந்தின் ஃபோனில் வீடியோ காலில் பேசினார். அவரிடம் ரஜினி அவரது உடல்நிலையை சொல்லி, நான் எனது பேரக் குழந்தைகளை தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை என விளக்கினார். இதனைக் கேட்ட அமித்ஷா குருமூர்த்தியை கடிந்துகொண்டார் என்கிறது பா.ஜ.க வட்டாரங்கள்.

 

ddd

 

குருமூர்த்தியின் ஆபரேசன் ஃபெயிலியர் ஆனது பற்றி அறிந்துகொண்ட நரேந்திர மோடி, ரஜினியின் உடன்பிறந்த அண்ணன் சத்யநாராயணா கெய்க் வாட்டிடம் மராட்டியத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பேச வைத்தார். நிதின் கட்கரியின் பேச்சை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டார். ரஜினியை பொறுத்தவரை அவருக்கு அரசியல் ஆர்வம் நீறு பூத்த நெருப்பு. அவரது குடும்பத்தினர் அவரது உடல் நிலையைக் காட்டி அவரது அரசியல் ஆர்வத்திற்கு தடைபோட்டு வந்தனர். நிதின்கட்கரி ரஜினியிடம் கட்சி தொடங்குவது பற்றியும், அதன் சாதகபாதகங்களையும் பற்றி பேசினார். அத்துடன் நிதின் கட்கரிக்கு நன்கு தெரிந்த அர்ஜூன மூர்த்தியை, ரஜினியை சந்திக்க நிதின் கட்கரி அனுப்பிவைத்தார். அர்ஜுன மூர்த்தி, ரஜினி, அவரது அண்ணன் சத்யநாராயணா, நிதின் கட்கரி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏற்பட்ட முடிவுகளின்படி தனது குடும்பத்தாரிடம் (மனைவி லதா, மகள் சௌந்தர்யா) விவாதித்த ரஜினி, அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் இருவரையும் வைத்துக்கொண்டு அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார்.

 ரஜினி கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியனுக்கு கடைசிவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளளரான அர்ஜுனமூர்த்தி யார் என்றே தெரியாது. பா.ஜ.கவிலிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் கணிணித் துறை சார்ந்த தொழிலதிபரான அர்ஜுன மூர்த்தி, இந்தியாவின் பெரும்பான்மையான தொழிலதிபர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் நிதின் கட்கரியால் அனுப்பி வைக்கப்பட்டு பா.ஜ.கவிற்கும் ரஜினிக்குமான இணைப்பு பாலமாக செயல்பட வைத்திருக்கிறார்கள்.

 தற்பொழுதுவரை பா.ஜ.கவுடன் நேரடி கூட்டணி எதுவும் இல்லை என தனக்கு ரஜினிகாந்த் வாக்குறுதி தந்துள்ளார் என தமிழருவி மணியன் சொல்லி வருகிறார். குருமூர்த்தியை பொறுத்தவரை, அமித்ஷா போன பிறகு ரஜினியை அவர் வந்து சந்தித்தார். குருமூர்த்தியிடம் தனது மருத்துவ ரெக்கார்டுகளை தூக்கிப் போட்டு விளக்கமளித்த ரஜினிகாந்த், 

நிதின் கட்கரி சொன்னதைப் பற்றி அவரிடம் எதுவும் பேசவில்லை. நேரடியாக கட்சி அறிவிப்பு பற்றி மீடியாக்களில் பேசிவிட்டார் என நடந்ததை விளக்குகிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும் குருமூர்த்தி ரஜினி இன்னமும் எனது கண்ட்ரோலில்தான் இருக்கிறார் என்று மீடியாக்களிடம் சொல்லிவருகிறார் என்கிறார்கள் ஊடகத்தை சேர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: