இராமாயண நாடகத்தை தான் நடிகவேள் இராதா அவர்கள் தொடர்ந்து நாடகமாக நடத்தி வந்தார்.இராமயண நாடகத்தின் முதல் நாள் அரங்கேற்றத்தில் தந்தை பெரியார் தலைமை ஏற்று பாராட்டி பேசினார் . நேஷனல் பிக்ஸர்ஸ் பெருமாள் அவர்களும்,
இயக்குனர்-கிருஷ்ணன்-பஞ்சு அவர்களும்
கலந்து கொண்டனர்.திரு பெருமாள் அவர்கள்
பாராட்டி ஷீல்டுகள் வழங்கி ரூபாய் 2000/ம்
தங்கராசு அவர்களுக்கு பரிசாக அளித்தார். ஒருமுறை எங்கள் ஊரில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்,நான் தலைமை. பேசினார்
இன்றைக்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு சற்றேரக் குறைய 500/ஆண்டுகள்
அங்கே வானத்தை தொடும் புகை கூடுகள்—தொழிற்சாலைகள் உருவாகின
இங்கேயும் சிந்தனையிருந்தது ஆற்றல் இருந்தது,அறிவு இருந்தது.வானளாவிய கோபுரங்கள் எழுந்தன.அறிவு எதற்கு பயன் பட்டது என்பது தான் வித்தியாசம் என்றார்
அங்கே பூமியைத் தோண்டினான் கனிமப் பொருள்களை கண்டெடுத்தான்.இங்கேயும்
சிந்தனையிருந்தது.பூமியைத் தோண்டினான்
அது நிறைய தண்ணீரை விட்டான்.தெப்பம் ஆக்கினான்.அதில் தேரை விட்டு சவுண்டிகள் ஏறி அமர்ந்து கொண்டு, டேய் சூத்திரப் பயல்களா!இழுங்கடா என்றான்(தெப்பத் திரு விழா) நம்ம ஆட்களும் இழுத்தான் என்றார்
இராமாயாணத்தை தொடர்ந்து எட்டு நாட்கள்-எட்டுபேருடன் கதாகால சேப பாணியில்
ஒரே ஊரில் பிரச்சாரம் செய்வார்.பக்கத்தில்
அரை சாக்கு மூட்டை நிறைய புத்தகங்கள் இருக்கும் ஆதாரம் யாராவது கேட்டால் காட்டுவதற்கு.இராமயாணத்தோடு அன்றைய அரசியல் நிலவரங்களையும சேர்த்து சுவை குன்றாமல் சொல்வது அவருக்கே உரித்த அழகு.சமஸ்கிருத ஸ்லோகங்களை தொடர்ந்து அவர் சொல்லும் பொழுது எந்த
கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்றீர்கள் என்று கேட்டவர்கள் உண்டு.
திருச்சி கூட்டத்தில் திருச்சி செல்வேந்திரனை குறிவைத்து எறியப்பட்ட கல்
இவர் மீது விழ மண்டை உடைந்து,மண்டை ஓடு தெரிகிறார்ப்போல் காயம்,இரத்த வெள்ளம் .11 தையல்கள் போடப்பட்டு இரண்டு நாட்கள் ஆபத்தான கால கட்டத்தில் மருத்துவ மனையில் இருந்தார்.
இரத்த கண்ணீர்-பெற்ற மனம்-தங்கதுரை ஆகிய மூன்று படங்களில் வசன கர்த்தா.இவர் எழுத்துக்களில் திருஞான சம்மந்தர்,இராமயாண நாடகம்,கம்பனா?காமுகனா? என்ற புத்தகங்கள் சிறப்பு வாய்ந்தவை.இவர் நடத்திய பகுத்தறிவு மாத இதழில் சவுண்டிகள் சதஸ்’என்ற இவரின் எழுத்தின் ரசிகன் நான்.இவரின் இராமாயாண தொடர் சொற்பொழிவை கேட்டதில்லை நான்,.என் முக நூல் நண்பர் லால்குடி-இடையாற்று மங்கலம்-முத்து செழியன் அவர்கள் தன்னுடைய ஊரில் எட்டு நாட்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.
கலைஞர் கையால் தமிழக அரசின் பெரியார் விருதைப் பெற்ற இவர்-அந்த தொகையோடு தானும் ஒரு தொகையை சேர்த்து திருச்சியிலுள்ள-தந்தை பெரியார் குடில் என்ற பெயரில் நடக்கும் கல்வி நிறுவனத்திற்கு—கலைஞர் கையாலேயே அதை கொடுக்கச் செய்தார்.
வாழ்க பெரியாரின் உண்மைத் தொண்டன்
திருவாரூர் தங்கராசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக