சனி, 19 டிசம்பர், 2020

ராஜனி திரணகமவின் கொலைக்கு திட்டம் வகுத்து அதை செயற்படுத்த தூண்டியது அன்ரன் பாலசிங்கம்

Rajini Thiranagama - Alchetron, The Free Social Encyclopedia
நட்சத்திரன் செவ்விந்தியன் : அத்தியாயம் இரண்டு ;

அன்ரன் பாலசிங்கம் வரலாறு 2

பிரபாகரன் போராட்டத்தில் தனக்கு போட்டியாக வரக்கூடிய தன்னைவிட திறமையான நேர்மையான மற்ற இயக்கத் தலைவர்களை எவ்வாறு கொன்றாரோ அதேபோல அன்ரன் பாலசிங்கமும் புலிகள் இயக்கத்தில் தனது ஆலோசகர் என்ற பதவிக்கு போட்டியாக வரக்கூடியவர்களை கனகச்சிதமாக திட்டமிட்டு ஓரங்கட்டி அவர்களை கலைத்தார். பாலசிங்கம், பிரபாகரன் என்கிற இரண்டு அரக்கர்கள் ஒருவரையொருவர் இட்டுநிரப்பி வந்ததுதான் புலிகளின் பாசிசம். 

பிரபாகரன் இல்லாமல் பாலசிங்கமும் பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனும் தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அரக்கர்களாக வந்திருக்கமுடியாது. பாலசிங்கம் தம்பதியர் பிரபாகரனை 1979, 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியாவில் சந்தித்து சில மாதங்கள் பிரபாகரன் அணியோடு தங்கியிருந்தனர். இவ்விரு தடவைகளிலும் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் தன்னை ஒரு இட்டு நிரப்பமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்தமுடியவில்லை. ஆனால் 1983 திருநெல்வேலித்தாக்குதல்/ஜூலைக் கலவரங்கங்களையடுத்து வந்த நிகழ்வுகளை அடுத்து பாலசிங்கம் தான் புகுந்துவிளையாடவந்த தகுந்த சந்தர்ப்பத்தை மிகச்சாதுரியமாக பயன்படுத்தினார். 

1983 ஆகஸ்டில் சென்னைக்கு பாலசிங்கம் மனைவியோடு வருகிறபோது பிரபாகரன் ஈழத்தில் வன்னிக்காடுகளிலிருந்தார். 1982 சென்னையில் நடந்த பிரபாகரன், உமாமகேஸ்வரன் துப்பாக்கிச் சண்டையின் விளைவாக சென்னையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் நீதிமன்ற உத்தரவைமீறிச்சென்றுதான் 1983 திருநெல்வேலித்தாக்குதலை நடத்தியிருந்தார். அப்போது பிரபாகரன் ஒரு லோக்கல் மாபியாக்காரன் போலவே சிந்தித்து இயங்கினார். பிரபாகரன் ஒரு லோக்கல் மாபிக்காரனின் "றேஞ்சி"லேயே இக்காலத்தில் சிந்தித்தார். சீலனின் கொலைக்கு பழிவாங்க இலங்கை படையினர்மீது தாக்குதல் செய்யவேண்டும். புளட் செய்த ஆனைக்கோட்டை பொலிஸ்நிலய தாக்குதலைவிட பலமான தாக்குதல் செய்து மக்களுக்கு படங்காட்டவேண்டும். இந்தவகையில் சிந்தித்த பிரபாகரனுக்கு ஒரு தேசியப் போராட்டத்துக்கான தொலைநோக்கு, முறைதிறன் எதுவும் கிடையாது. ஆனால் வெறும் பழிவாங்கலாக செய்த திருநெல்வேலித்தாக்குதலின் விளைவுதான் 1983 இலக்கலவரமே. 

இக்கலவரத்தின் பின் இந்திய அரசாங்கம் தமிழ்ப்போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளித்து உதவ தீர்மானித்தது. போராளி இயக்கங்களை ஆயுதப்பயிற்சிக்கு ஒருங்கிணைக்கும் பொறுப்பு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனிடம் வந்தது. ஒரு வழக்கறிஞரான அவர் இந்திய அரச பணித்துறையினரால் ஏற்கெனவே அறியப்பட்டவர். பிரபாகரன் உமாமகேஸ்வரன் துப்பாக்கிச்சண்டையின் பின் பிரபாகரன் தந்தை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தியாவந்தவர். நிலமையை மத்திய மாநில அரசுகளிடம் புரியவைத்து அவர்கள் இருவரையும் இலங்கைக்கு நாடுகடத்தாமலிருக்க நடந்த முயற்சிகளில் சந்திரகாசனின் பங்களிப்பு பெரியது.

              Like Saint like Father Like Son

               

                       சந்திரஹாசன் 

இந்திய அரசாங்கத்திற்கு நன்றியின்றி நீதிமன்ற உத்தரவை மீறிச்சென்றவர் பிரபாகரன் என்பதால் பிரபாகரனின் புலிகளுக்கு ஆரம்பத்தில் பயிற்சி வழங்கப்படவில்லை. பிரபாகரனும் தான் தமிழகம் வந்தால் கைதுசெய்யப்படுவேன் என்று இந்தியப்பயிற்சி எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் ஒரு லோக்கல் மாபிக்காரனின் "றேஞ்சி"லேயே இக்காலத்தில் சிந்தித்தார். சீலனின் கொலைக்கு பழிவாங்க இலங்கை படையினர்மீது தாக்குதல் செய்வேண்டும். புளட் செய்த ஆனைக்கோட்டை பொலிஸ்நிலய தாக்குதலைவிட பலமான தாக்குதல் செய்து மக்களுக்கு படங்காட்டவேண்டும். இந்தவகையில் சிந்தித்த பிரபாகரனுக்கு ஒரு தேசியப் போராட்டத்துக்கான தொலைநோக்கு, முறைதிறன் எதுவும் கிடையாது. 

பாலசிங்கமோ தான் பிரபாகரனை நெருங்க பிரபாகரன் தன்னை தவிர்க்க இயலாத ஆலோசகராக வைத்திருக்க இந்த வாய்பை பயன்படுத்தலாம் என்பதை அறிந்தார். பாலசிங்கம் ரோமன் கத்தோலிக்கர் அல்லாத யாழ்ப்பாண புறட்டஸ்தாந்து கிறிஸ்தவ புத்திஜீவித்துவ கல்விப்பாரப்பரியத்தில் காழ்ப்புணர்வு கொண்டிருந்தவர் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அந்தப்பாரம்பரியத்திலிருந்துவந்த சந்திரகாசன் மீதான வசைக்குற்றச்சாட்டு பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இதே தகுந்த தருணம் என்றறிந்தார் பாலசிங்கம். 

                 கலாநிதி சபா ராஜேந்திரன் 

வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கலாநிதி சபா ராஜேந்திரன் என்கிற சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும் புலிகளுக்கு இந்தியப்பயிற்சி வழங்குவதற்காக சந்திரகாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ராஜேந்திரன் படித்தவர். பண்பானவர். அவர் யதார்த்தமாக சிந்தித்து சந்திரகாசன் மூலமாக புலிகள் பயிற்சி எடுக்கலாமென பாலசிங்கத்துக்கு அறிவுறுத்தினார். பாலசிங்கம் தனக்கு புலிகளில் தொழில் நிரந்தரமாக இருக்கவேண்டுமென்று வந்தவரல்லவா. ராஜேந்திரனைப்பற்றி அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பரப்பி அவரை பிரபாகரனிடம் நெருங்கவிடாது ஓரங்கட்டினார். 

பின்னர் இந்திய உளவுத்துறையினருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பிரபாகரனையும் இந்தியாவுக்கு வருமாறு செய்தி அனுப்பினார் பாலசிங்கம். இந்தக்கட்டத்தில் பிரபாகரன் பாலசிங்கத்தின் ஆலோசனையைக்கேட்காது விட்டிருந்தால் புலிகள் மேலாதிக்கத்துக்கு வந்திருப்பது சிரமமானதாகியிருக்கும்.  

 இந்தியப்பயிற்சியை உடனடியாகவே ஏற்றது TELO இயக்கம்தான். இதனால்தான் சந்திரகாசன் TELO வுக்கு நெருக்கமானார். பாலசிங்கமோ TELO இந்திய உளவுப்படையால் வளர்க்கப்பட்டவர்கள் என்றுதொடங்கி இந்திய அரசின் கைக்கூலிகள் என்றதுவரை தனது பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார். உண்மைகளைத்திரித்து தனக்கும் தான் சார்ந்த இயக்கத்தின் நலனுக்குமாக மகாபுனைவான பிரச்சாரங்களை செய்வதில் பாலசிங்கத்து நிகர் யாருமில்லை. ஈழப்போராட்டத்தில் நடந்த அனைத்து படுகொலைகள், சிங்கள மக்கள் மீதான படுகொலைகளுக்குமான பழியை R&AW உளவுப்படையில் போடும் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. ஆதாரமற்ற உண்மையில்லாத இந்த பொய்ப்பிரச்சாரத்தின் மூலவர் பாலசிங்கம்தான். சந்திரகாசன் மீதான பாலசிங்கத்தின் காழ்ப்புணர்வும் பொய்ப்பிரச்சாரங்களும் பாலசிங்கம் எழுதிய நூல்களில் வெளிப்படையாகவே உள்ளன.

 விடுதலை இயக்கங்களில் புலிகள் ஆரம்பத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் மிகச்சிறிய இயக்கமாக இருந்தது. பிரபாகரன் குறுகிய நோக்கில் தன் கரையாரச்சாதியினரை சேர்ந்தவர்களையே பெருமளவில் சேர்த்தார். மிகப்பெரிய இயக்கமான புளட்டில் அதன் தலைவர் வெள்ளாளர் என்பதால் பல வெள்ளாளர் சேர்ந்தனர். ரெலோ இயக்கத்தில் அதன் ஆதி தலைவர்கள் கரையார்கள் என்பதால் கரையார ஆதிக்கம் இருந்தது. EPRLF, EROS இயக்கங்களில் இடதுசாரியப்பின்புலத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சனத்தொகையில் வெறும் 10 வீதமான கரையாரச்சாதிப்பின்புலத்திலிருந்து வந்த 9ம் வகுப்புவரை மட்டுமே படித்த பிரபாகரனின் புலிகள் பிரபாகரனின் திறமையால் மட்டும் மற்ற இயக்கங்களை அழித்து ஏகபோக பாசிஸ்டுகளாக வரவில்லை. புலிகள் மேலோங்கியதற்கு பாதிக்காரணந்தான் பிரபாகரன். மீதிக்காரணம் பாலசிங்கம்.

 புலிகள் மேலாதிக்கத்துக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கப்பால் சர்வதேச சந்தையில் சுயாதீனமாக ஆயுதக்கொள்வனவு செய்து அதனை வெற்றிகரமாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தமைதான். இதற்குரிய பணத்தை புலிகள் பெறுவதற்கும் அப்போதைய தமிழக முதலமைச்சர் MGR இன் செல்லப்பிள்ளை இயக்கமாக புலிகள் வருவதற்கும் காரணமாக இருந்தவர் பாலசிங்கம்தான். பாலசிங்கம் மிகத்திறமையாக சீட்டு விளையாடக்கூடியவர். நல்ல சீட்டு விளையாட்டுக்காரன்தான் நல்ல ராஜதந்திரியாக  வரமுடியும் என்பது உண்மை.

 TELO, PLOTE முதலிய இயக்கங்கள் இந்திய வெளிவிவகாரக்கொள்கை இந்திய மத்திய அரசின் கையிலிருப்பதால் புது தில்லிக்கு நெருக்கமாக இருக்கவே வேலைசெய்தன. இவ்வியக்கங்கள் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தில் வலுவை குறைத்து மதிப்பிட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் மத்திய அரசின் பங்காளியாக இருக்கக்கூடிய ஒருவரின் முடிவே இந்திய மத்திய அரசின் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதை இவை கணிக்க தவறின. பாலசிங்கம் அதனை கனகச்சிதமாக கணித்தார். பாலசிங்கத்தால் புது தில்லியை நெருங்கமுடியவில்லை என்பதும் உண்மை. 83 இறுதிப்பகுதியில் ஒருநாள் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் வந்து பணம்பெற்றுக்கொள்ள அறிவித்தார். பணத்தொகை மிகச்சிறியதுதான். புலிகளும் புளட் இயக்கமும் இந்தப்பணத்தைப் பெறச்செல்லவில்லை. இதனை புலிகள் முதலமைச்சர் MGR ஐ நெருங்கும் வாய்ப்பாக பாலசிங்கம் பயன்படுத்தினார். அவர் எதிர்பார்த்தபடியே MGR இடமிருந்து அழைப்புவந்தது. பாலசிங்கம் புலிகளின் குழுவுக்கு தலமைதாங்கிச்சென்று புலிகளை MGR ன் செல்லப்பிள்ளையாக்குமளவுக்கு புளட் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தமது சொந்த உறுப்பினர்களையே சித்திரவதை செய்பவர்கள் என்று "கதை" சொல்லி( இதில் உண்மை இருந்தாலும் புலிகளும் தமிழ்நாட்டில் தம் சொந்த உறுப்பினர்களை சித்திரவதை/கொலை செய்தனர்) அவரிடமிருந்து கோடிக்கணக்கான இந்தியப்பணம் பெற வழிசெய்தார். டாலசிங்கம் மனிதர்களை அவர்களின் பலம் பலவீனம் பயம் ஆசாபாசம் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை மிகக்கறாராக மதிப்பிடக்கூடிய விண்ணன். அக்காலத்தில் MGR பாரிசவாதத்தால் பாதிகாகப்பட்டு இருந்தவர். அவர் பேசும்போது வாயால் வீணி வழியும். தன்னைமீறி கலைஞர் ஈழவிடுதலை இயக்கங்களை தன் செல்லப்பிள்ளைகளாக்குகிறார் என்பதே MGR ன் பயமும் கோபமும். இவற்றுக்கெல்லாம் கனகச்சிதமாக MGR க்கு தீனிபோட்டார் பாலா. துரும்பை அடித்தார் பாலா. பாலா உங்களின் சாதாரணமான Mortgage Broker அல்ல. அவர் "போராட்டத்தை" ஈடு வைத்து கடன் பெற்றுக்கொடுக்கும் Super Mortgage Broker.(பிரேமதாசாவிடம் பின்னாட்களில் பணமும் ஆயுதங்களும் கடனாக வாங்கியவரல்லவா பாலா) மயங்கிய MGR 4 கோடி முற்கட்டமாக கொடுக்க முன்வந்தார். இந்த பணத்தில்தான் புலிகள் சர்வதேச சந்தையில் சுயாதீனமாக இந்தியாவிடமிருந்துபெற்ற ஆயுதங்களைவிடச் சக்திவாய்ந்த(Fire Power) ஆயுதங்களை கொள்வனவு செய்தார்கள். MGR ன் கிருபையால் இந்த ஆயுதங்களை தமிழக துறைமுகத்துக்கும் கொண்டுவந்து சேர்த்தார்கள். இந்த ஆயுத பலத்தால்தான் TELO, PLOTE, EPRLF ஆகிய இயங்கங்களை அழித்து மேலாதிக்கம் எடுத்தார்கள்.( இதே காலத்தில் புளட் சர்வதேச ஆயுத சந்தையில் ஆயுதம் கொள்வனவுசெய்து தமிழக துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்த்தபோதும் தமிழக அரசின் ஆதரவின்பையால் கைக்கெட்டியதை வாய்க்கெட்ட வைக்க புளட் இனால் முடியவில்லை.

 ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுக்கள். ரெலோ இத்திய றோவின் சீடர்கள் என்று. ரெலோவை யாழ்ப்பாணத்தில் அழித்து புவிகள் சனனதமாடியபோது பிரபாகரன் இந்தியாவில்தானே இருந்தார். றோவின் சீடர்களான ரெலோவை அழித்த புலிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதா?

உருளைக்கிழங்கும் மார்க்சிசமும் யாழில் விழையாது என்று சொன்ன சிவநாயகம் 


S.சிவநாயகம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த Saturday Review ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர். இலங்கையின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகைகளில் பத்திரிகையாளராக இருந்தவர். தன் பல்கலைக்கழகப்படிப்பையும் சட்டப்படிப்பையும் நிறைவுசெய்யாதவராக இருந்தாலும் மிகத்திறமையான ஆங்கிலப்பத்திரிகையாளர் என்று பெயரெடுத்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் படித்துவந்த இவர் அன்ரன் பாலசிங்கம் காழ்ப்புகொண்டிருந்த அசல் யாழ்ப்பாண புறஸ்டஸ்தாந்து கல்விநிறுவனப்பாரம்பரியங்களிலிருந்து வந்தவர். 1983ல் Saturday Review ஜெயவர்த்தன அரசால் தடைசெய்யப்பட்டதால் இவர் உயிருக்குப்பயந்து புலிகளின் படகில் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றார். சிவநாயகம் தனது தொழிலுக்கு ஆப்புவைத்துவிடுவாரோ என அஞ்சிய பாலசிங்கம் தமிழகத்தில் இவரை அழைத்து சந்தித்தார். புலிகளிடம் இணைந்து வேலைசெய்யலாமே என நாசூக்காக கேட்டார். இது பாலசிங்கத்தின் ராசதந்திரம். இந்தக்கேள்விமூலம் சிவநாயகத்தின் நோக்கங்களை அறிவது. சிவநாயகம் மாத்தையா போன்ற வேறு புலித்தலைவர்கள் மூலம் உள்ளே வருவதைவிட தன்மூலம் உள்ளே வந்தால் தன்னால் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் ஓரங்கட்டக்கூடியவராகவும் இருப்பார் என்பவையே பாலசிங்கத்தின் தந்திரங்கள். சிவநாயகம் இக்கட்டத்தில் புலிகளில் இணைவதை விரும்பவில்லை. ஆனால் மாத்தையா, சங்கர், திலகர் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். சிவநாயகம் தனது முதலாளியான TRO கந்தசாமியின் தமிழர் தகவல் மையத்தில் இக்காலத்தில் பொறுப்பாளராயிருந்தார். பிறகு இல.இந்திய ஒப்பந்த காலத்தில் R&AW informer ஆகவும் ஆலோசகராகவும் இருந்து பின் கந்தசாமியை புலிகளுக்காக EROS கொன்றபின் 90களில் பிழைப்புக்காக புலிகளின் அடிமை பத்திரிகையாளரானார்.

நிர்மலா, நித்தியானந்தன் தம்பதியர்கள் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து உதவிசெய்தவர்கள். காயப்பட்ட புலிப்போராளிகளை தமது வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததற்காக கைது செய்யப்பட்டு பின் 83 ன் பின் சிறைமீட்கப்பட்டு இந்தியாசென்று புலிகளோடு இணைந்தவர்கள். இதில் நிர்மலா பாலசிங்கம் காழ்ப்புகொண்டிருந்த யாழ்ப்பாண பறட்டஸ்தாந்து மேட்டுக்குடி கல்விப்பாரம்பரியத்திலிருந்து வந்தவர். குறித்த மேட்டுக்குடி செல்வாக்கு/சலுகை காரணமாக 18 வயதிலேயே அமெரிக்காவுக்கு புலமைப்பரிசில் பெற்றுச்சென்று பின் ஊர்திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில போதனாசிரியராக கடமையாற்ற அவர் கணவரான நித்தியானந்தன் அங்கு பொருளியல் விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தவர். 31 வயதில் தன் இளமையின் உச்சத்தில் இருந்ததுடிப்பான பெண் நிர்மலாவுக்கென்றே தனிப்பட்ட ஒரு சிறையுடைப்பை புலிகள் செய்து அவர் மீட்கப்பட்டதால் நிர்மலா ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ஒரு வீராங்கனையாக இருந்தார். இந்த அலையைப்பாவித்து பாலு மகேந்திராவும் நிர்மலாவின் சிறையுடைப்பை வைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். நிர்மலா நித்தியானந்தன் தம்பதியரின் தனிப்பட்ட வாழ்வும் அவர்களது அரசியல் வாழ்வும் மிகச்சிக்கலான நிலையிலிருந்த காலம். இந்திய வம்சாவழி மேட்டுக்குடி கங்காணி பின்புலத்திலிருந்துவந்த மொட்டை வெள்ளாளரான நித்தியானந்தன் வசீகரமானவர்(Charismatic). ஆனால் நிர்மலாவிடமிருந்த துடிமதிநுட்பம்(Acumen) நித்தியானந்தனிடம் கிடையாது. தம்பதியர்களைவிட பாலசிங்கம் வயசிலும் துடிமதிநுட்பத்திலும் உற்சாகத்திலும் பலபடிகள் மேலே. இடதுசாரிகளாய் அரசியலில் இருந்த நிர்மலா தம்பதிகளும் இடதுசாரியான பாலசிங்கத்தைப்போல வலதுசாரி புலிகளில் சேர்ந்தது அதிசயம். நிர்மலாவும் அவர் காரணமாக நித்தியானந்தனும் பிரபாகரனோடு முரண்படத்தொடங்கியதற்கு தம்பதிகள் எதிர்பார்த்த பொறுப்பான பதவி தமக்கு வழங்கப்படாமையா அல்லது கொள்கைகளா காரணம் என்பது விரிவான ஆய்வுக்குரியது. நிர்மலா பாலசிங்கத்தைப்போல பொறுமையாக தன் வாய்ப்புக்களையும் பலத்தையும் கனகச்சிதமாக மதிப்பிட்டு காய் நகர்த்த தெரியாதவர். வெளிப்படையாக பேசி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று போட்டு உடைக்கக்கூடியவர். இதற்கிடையில் பிரபாகரனின் விசுவாசியாக நீண்டகாலம் இருந்த இராகவனுக்கும்(சிவகுமார்) விரிசல் ஏற்படுகிறது. அதுவரையில் இடதுசாரியாக இல்லாமல் சீர்திருத்தவாதியாக இருந்த இராகவன் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகார மானுடவிரோத போக்குகளை எதிர்க்கிறார். இங்கு தம்பதியர்கள் எவ்வளவு ராகவனால் தூண்டப்பட்டார்கள்? ராகவன் எவ்வளவு தம்பதியர்களால் தூண்டப்பட்டார் என்பது ஆய்வுக்குரியது. நிர்மலா, நித்தியானந்தன், ராகவன் முதலியோர் ஏன் புலிகள் அழிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் தமது புலிகள் கால அனுபவங்களை புத்தகமாக எழுதாமல் தவிர்த்து வருகிறார்கள் என்பது பலரின் கேள்வி. பாலசிங்கம் தான் காழ்ப்புக்கொண்டிருந்த பறட்டஸ்தாந்து மேட்டுக்குடி பின்னணியில் வந்திருந்த நிர்மலாவையிட்டு பயந்தார். அவரது தொழிலுக்கு ஆப்பு நிர்மலா மையத்திலிருந்து வருகிறது. நிர்மலா தம்பதியர்கள் மட்டுமல்ல. ஏற்கெனவே பிரபாகரன் மீதான தன் அதிருப்தியை தனக்கு கடிதமாக எழுதிய ராகவன் தம்பதியர்களோடு சேர்ந்துவிட்டார். பாலசிங்கத்தால் முடியாததும் நிர்மலாவால் முடியும். பிரபாகரனைவிட ஓரிருவயது மூத்த நிர்மலா ஒரு பெண். பிரபாகரன் திருமணமாகாத இளைஞன். பாலசிங்கம் பயந்தது வேறு ருபத்தில் வந்தது. பிரபாகரனைவிட இளமையான ராகவனுடன் நித்தியானந்தனை விட்டு விலகி நிர்மலா சேர்ந்து வாழ்வது வரலாறானது. தம்பதியரின் குடும்பவாழ்வில் வந்ந ரென்சன்களுக்கு எந்தளவு தனது தனிப்பட்ட நலன்களுக்காக பாலசிங்கம் எண்ணெய் ஊற்றினார் என்பது முறையான தொழில்சார் Biography எழுத்தரின் ஆய்வுக்குரியது. ஏனெனில் தன் இறப்புவரை நித்தியானந்தனுடன் பாலசிங்கம் நட்பு பேணினார். தான் இலண்டனில் சாகமுதல் சந்திக்கவேண்டியவர்களில் பட்டியலில் நித்தியானந்தனின் பெயர் இருந்தது.

                   பாலா manuscript editing செய்த                                               முக்கோண காதல் கதை? 

பிரச்சனை நிர்மலாவுக்கும் பாலசிங்கத்துக்குமிடையில் முத்தியது. ஆங்கிலம் மட்டுமே பேசந்தெரிந்த அடேல் பாலசிஙாகத்துக்கும் சிறைமீட்கப்பட்டு வந்த நிர்மலாவுக்குமிடையில் பெண்கள் என்பதாலும் மொழியாலும் ஆரம்பத்தில் புரிந்துணர்வு இருந்தது. ஆனால் நிர்மலாவும் அடேலும் வேறுவேறு வர்க்கப்பின்னணியிலிருந்து வந்தவர். நிர்மலா யாழ் மத்தியதர மேட்டுக்குடி உயர்வர்க்கத்திலிருந்து வந்தவர். தன் 18 வயதிலேயே அமெரிக்காவுக்கு ஒரு புலமைப்பரிசிலை பெற்றுச்செல்லும் செல்வாக்கு நிர்மலாவுக்கு இருந்தது. வெள்ளை ஆஸ்திரேலியப்பெண்மணி என்றாலும் நிர்மலாவைவிட 2/3 வயது கூடிய அடேல் ஒஸ்றேலியாவிலேயே பல்கலைக்கழகம் சென்று படிக்க வசதியற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்.(அடேல் 1950 ல் பிறந்தவர். ஒஸ்றேலியாவின் முதல் சோசலிஸ பிரதமர் விற்லம் 1974 ல் கல்வியை இலவசமாக்குவதுவரை ஏழைகளுக்கு பல்கலைக்கழகம் போகும் வாய்ப்பிருக்கவில்லை) ஏழை கிராமத்து பெண் அடேல் மருத்துவ மாதுவாக லண்டன் சீமை போயே பாலசிங்கத்தை சந்திக்கிறார். நிர்மலா பேசிய ஆங்கிலம் அடேலுக்கு புரியும். நிர்மலாவின் அரசியல் புரியாது. அடேல் ஒரு விசுவாசமான மனைவியாகவும் ஒற்றராகவும் நிர்மலா பேசியதை கணவரிடம் கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார். இதனுடைய விளைவாக நிர்மலா வழியாக ரஜினி திராணகமவிடம் சென்ற அடேல் அப்பாவி பற்றிய விபரணம் முறிந்த பனை நூலில் உள்ளது. பாலசிங்கம் இதைப்படித்து பெருஞ்சினம் கொண்டு தீட்டியதுதான் ராஜினி திராணகம கொலை. உண்மையில் ராஜனி திரணகமவின் கொலைக்கு திட்டம் வகுத்து அதை செயற்படுத்த தூண்டியது பாலசிங்கம். இந்த தொடரின் மூன்றாவது பகுதியின் தலைப்பு: "பாலசிங்கம்; ராஜனி திராணகம கொலையின் சிற்பி" என்ற தலைப்பில் வரும். வெள்ளை கிராமத்து பெண்ணை எப்படி கையாளுவது என்பது நிர்மலாவுக்கு தெரியாதது. பாலசிங்கம் நிர்மலாவை ஒரங்கட்டும் தனது கேம் பிளானை கனகச்சிதமாக வடிவமைத்தார். 

 1, நிர்மலாவை தனிமைப்படுத்துவது.

 2. இதற்கு உவப்பாக நித்தியானந்தன், அடேல், ராகவன் ஆகியோரை முடிந்தவரை தன் உளவாளிகளாக பயன்படுத்துவது. 

 இதற்கமைய தானும் நிர்மலாவின் விமர்சனங்களை ஏற்று புலிகளை விட்டு விலக தயாராக இருப்பதாக நாடகம் ஆடினார்( பார்க்க Palmyrah Fallen by Rajan Hoole) நிர்மலாவும் தன்னை நம்புமளவுக்கு சீன் போட்டார் பாலா. எல்லாவற்றையும் விசுவாசமான ஒற்றர் படைத்தலைவன் போல பிரபாகரனிடம் ஒப்புவித்தார். பாலசிங்கம் ஒருபோதும் தன் பிரபாகரனின் "ஆலோசகர்" பதவியைவிட்டு வெளியேற தயாராக இருக்கவில்லை.. 


பாலாவின் திறமுறை வென்றது. நிர்மலா வெளியேறவேண்டிய கட்டாயம். தம்பதியரின் உறவுச்சிக்கலும் பாலசிங்கத்தின் டிசைன். ராகவனும் வெளியேற பாலசிங்கம் அடையாறு ஷொக்கேசனில் அரிய சிங்கிள்மோல்ற் ஸ்கொச் விஸ்கியும் சுருட்டும் நிலவிரவில் அனுபவித்து கொண்டாடினார். 

 பாலசிங்கம் ஆசாபாசம், அதிகார ஆசை போட்டி பொறாமை கொண்டவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் பாரிஸ் இலிருந்து பின்னாட்களில் சர்வதேசப்பொறுப்பாளர் திலகரின் ஆளாக இருந்து Hotspring என்கிற புலிகளின் ஆங்கில பிரச்சார மாத சஞ்சிகையை வெளியிட்டுவந்த S.சிவநாயகத்தை இரண்டாம் தடவையாகவும் ஓரங்கட்டியது. 1983ன் பிற்பகுதியில் முதல்தடவையாக ஓரங்கட்டியது இக்கட்டுரையின் முற்பகுதியிலுள்ளது. 1996 ன் இறுதிப்பகுதியில் பாரிஸ் இல் ஈழமுரசு ஆசிரியர் நாதன் என்பவரையும் கஜன் என்பவரையும் புலிகளே கொன்று பழியை இலங்கை அரசாங்கத்தில் போட்டார்கள். இது புலிகளின் பெரிய நாடகமொன்றின் காட்சிகள். பிரபாகரன் போன்ற பாசிச சர்வாதிகள் தம் அதிகாரத்தை தக்க பயன்படுத்தும் பொறிமுறைகள் தமது கீழ்மட்ட தளபதி/பொறுப்பாளர்களை

 1. பிரித்தாளும் தந்திரம் 

2. அவர்களுக்குள் போட்டி பொறாமைப்படுவதை ஊக்குவிப்பது 

இதனால் ஒவ்வொரு தளபதி/பொறுப்பாளர்கள் பற்றிய தகவல்கள் மற்ற தளபதி/பொறுப்பாளர்கள் வழி பிரபாகரனைச் சென்று சேரும்.

 இந்த தகவல்களை பிரபாகரன் தன் மதிநுட்பம், பயங்கள் என்பவற்றுக்கேற்பவோ பாலசிங்கத்தின் ஆலோசனைக்கேற்பவோ மதிப்பிட்டு பதவி மாற்றங்களில் முடிவு செய்வார். இதன்படி சர்வதேச பொறுப்பாளர் திலகர், சர்வதேச ஆயுத முகவர் KP ஆகியோர் பதவிவிலக்கப்பட்டு காஸ்ரோ சர்வதேசப்பொறுப்பாளராக எடுக்கப்பட்ட முடிவை செயற்படுத்த பணிய மறுக்கும் ஒரு தளபதிக்கு(KP) சேதி சொல்ல செய்யப்பட்ட கொலைகள்தான் நாதன், கஜன் கொலைகள். இதையடுத்து திலகர் வன்னிக்கு அழைக்கப்பட்டார். திலகரின் சுவிஸ் வலது கரமான நடராஜா முரளிதரன் பதவியிழந்து கனடாவுக்கு ஓடி தஞ்சம் கோருகிறார். KP குமரன் பத்மநாதன் வன்னிக்கு போகமறுத்து/பயந்து தென்கிழக்காசியாவிலேயே தனித்து போகிறார். 

 1999 ல் நோய் முற்றிய பாலசிங்கத்தை புலிகள் கடற்கரும்புலிகள் அணி புடைசூழ முல்லைத்தீவிலிருந்து தாய்லாந்து வழியாக லண்டனுக்கு அனுப்புகிறார்கள். நோய் தேறியதும் பாலசிங்கம் செய்த காரியங்களிலொன்று S.சிவநாயகத்தை தன் வீடடுக்கழைத்து உரையாடியது. திலகர் ஓரங்கட்டப்பட்டபின் Hot Spring பதிப்பிக்கப்படுவது புலிகளால் தடுக்கப்படுகிறது. சிவநாயகம் இதனை பாலசிங்கத்திடம் முறையிட்டு உதவி கேட்கிறார். பிரபாகரனோடு சேர்ந்து பாலசிங்கம் எழுதிய நாடகமல்லவா.(90 களின் ஆரம்பத்தில் பிரபாகரனோடு முரண்பட்ட மாத்தையா படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு கடைசியில் பொய்க்குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆபத்தை உணர்ந்து கடைசிநேரத்தில் மாத்தையா தனக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் பாலசிங்கம் வீட்டில் வந்து அங்கு உண்ணாவிரதமிருக்க அனுமதி கேட்டார். பாலசிங்கம் அறவான் அல்லவே. மாத்தையாவையும் அவர் மெய்பாதுகாவலர் அணியையும் நாசூக்காக பேசி கலைத்துவிட்டார். புலிகளில் எக்காலத்திலும் ஒரு மாறிலி ஆக ஊக்கி(catalyst) ஆக இருந்த தன்னோடு கேம் கேட்ட மாத்தையாவினதும் பின்னாளில் திலகரதும் சீடனாக இருந்த சிவநாயகம் இப்போது தன்னிடம் உதவி கேட்கிறார். சிவநாயகம் அன்றிரவு அடேல் சமைத்த உணவைப்புசிக்கும்போது அவர் கை கிறுக்க அரித்த ஒரே வசனம்

 "Balasingham is a sadist".

சிவநாயகம் ஒரு கிறுக்கனும் கூட. நித்திய புகையிலை பிரியன். பாலசிங்கம், வரதராஜப்பெருமாள் ஆகிய பெரும் சுருட்டுக்காரர்களுடன் புகைத்து அனுபவித்து கான்சர் வந்து செத்துப்போன அற்புதமான பத்திரிகையாளர். தன்னை புலிகளுக்கு விற்றுப் பிழைத்தாலும் நமக்கு அற்புதமான இரண்டு நூல்களை தந்து போயிருக்கிறார். அவரது இரண்டாவது நூலை புலிசார்பாளர்கள்தான் வெளியிட்டதால் பாலசிங்கம் தனக்கு இரு தடவை முதுகில் குத்தியதை வெளிப்படையாக அவரால் சொல்லமுடியவில்லை. வரதராஜப்பெருமாள் மீது சேறடித்த அவரால் EPRLF பத்மநாபா மீது சேறடிக்க முடியவில்லை. புலிகள் வெளியிட்ட புத்தகத்திலேயே பத்மநாபாவுக்கு "நேர்மையான மகத்தான புரட்சியாளன்" அவர் கொடுத்த சான்று சாகும்போது கொஞ்ச நஞ்ச உண்மையோடு செத்தார் என்பதற்கான ஆதாரம். 

முதல் அத்தியாயம் படிக்க

https://www.jaffnafashion.com/2020/05/blog-post_24.html

கருத்துகள் இல்லை: