Devi Somasundaram : · கேரள உள்ளாட்சி தேர்தல் நமக்கு உணர்த்தி இருப்பது ஒன்று தான்.. பி ஜே பி எதிர்ப்பை விட யாரை ஆதரிக்கனும் என்பதை தெளிவாக இருக்க வேண்டும் .
பீகார்ல ராஷ்ட்ரிய ஜனதா தள் 75 சீட், பி ஜே பி 74 தான்...ஆனா பி ஜே பி தான் ஆட்சியை பிடிக்குது ...எப்படி ? ..பி ஜே பிக்கு எதிரான வாக்குகளை ஆர் ஜேடியை நோக்கி குவியவிடாமல் பி எஸ் பி, ஓவைஸி, மற்றும் சில உதிரி கட்சிகள் என பிரிக்கிறது பி ஜே பி. தனக்கு பலம் இல்லை என்பதை நன்கு அறிவதால் எதிரியின் வலிமையை சிதறடிப்பதன் மூலம் தன் வெற்றியை கைக் கொள்கிறது பி ஜேபி . இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து எல்லா தேர்தலிலும் பி ஜே பின் தேர்தல் உத்தி இது தான். கேரளாவில் அந்த உத்தி செல்லுபடி ஆகவில்லை ..கம்யுனிஸ்ட்களுக்கு எதிரா எந்த வாக்கு வங்கி பிரிப்பையும் பி ஜே பி யால் உருவாக்க இயலவில்லை...அது தான் அங்கு கம்யுனிஸ்ட்களின் வெற்றியை உறுதியாக்கி உள்ளது .
வெறும் வாதம் தவிர்த்து ஆதார பூர்வமான நிருப்ணம் இல்லாத வரை நாம் வெற்றி தோல்விக்கு அதை காரணமாக சொல்ல முடியாது..
இரண்டு சந்தேகத்தை வைப்போம்.
EVM..சரியானது என்றால் ஏன் எந்த வெளினாடும்..டெக்னாலஜியின் உச்சத்தில் உள்ள அமெரிக்கா ,சீனா உட்பட எந்த நாடும் அதை பயன்படுத்த வில்லை..
2 .ஒரு வேளை EVM மூலமே வெற்றி சாத்தியம் என்றால் .பி ஜே பி இத்தனை கோடிகள் செலவு செய்து மாயாவதி, ஓவைஸி, ரஜினி ,கமல், என்று ஓட்டுகளை பிரிக்க ஆட்களை உருவாக்கத் தேவை இல்லை .
முதல் சந்தேகத்திற்கு அடிப்படையா ஒரு காரணம்...எல்லா கண்டுபிடிப்பும் வெளினாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு நாம் ஏற்போம்...EVM.ஒன்றே ஒன்று மட்டும் இந்தியாவில் டிஸைன் செய்யப்பட்டது ..ஆகவே அதன் நம்பகத்தன்மை ஏற்க தயக்கம் இருக்கலாம்..
ஆக ..EVM ..மூலம் மட்டுமே வெற்றி நிச்சயம் என்றால் RJD 75 சீட்களுக்கும் கீழாகவே பெற்று இருக்க முடியும்..கேரளாவில் பி ஜே பி வென்று இருக்க முடியும்..
பி ஜே பி கோடிகளை கொட்டி ஆட்களை விலைக்கு வாங்கி ஓட்டுகளை பிரிக்க அவசியம் இல்லாமல் EVM வைத்து மட்டுமே வென்று இருக்கலாம் ..அப்படி இல்லாமல் சும்மா கிடந்த குஷ்பூவலாம் மிரட்டி கட்சில சேர்க்க தேவை இல்லை..
ரஜினி , கமலுக்கு இத்தனை கோடி தர அவசியமில்லை .
ஆக EVM மட்டுமே காரணம் என்பதை ஆதாரம் எதுவும் இல்லாமல் ஏற்க இயலாது .
பி ஜே பியை தோற்கடிக்க அதன் எதிர்ப்பை ஒன்றாக்குவது மட்டுமே சரியான வழி ..கேர்ளா அதை சாதித்து உள்ளது..
ஒற்றுமை மட்டுமே வெற்றிக்கு வழி ..அதை சீக்கியர்களின் விவசாய உரிமை மீட்பு போர் நிறுபிக்கின்றது ..அங்க யாரும் ஸ்டாலின உள்ள விடல பாத்தியான்னு தனக்கு தானே ஆப்பு வச்சுகிட்டு அதுக்கே சிரித்துக் கொள்ளவில்லை.
அங்கயும் போட்டோ ஷாப்கள், பொய் பிரச்சாரம் வந்த போதும் மக்கள் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்ததால் நேற்று உச்சநீதிமன்றம் farmers law வை ஹோல்டில் வைக்க அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது ..
எப்படி சாத்தியமானது இந்த வெற்றி ..காரணம் ஒற்றுமை ..
ஹை ,நான் கேலி பண்ணிட்டேன் பாத்தியான்னு திமுகவை பார்த்து செய்கின்ற எல்லாக் கேலியும் அவரவர் அவர்களுக்கே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்பதை நினைவில் கொள்ளுஙகள் .
பி ஜே பி ஒழிக்கப் போவதாக சொன்ன வாரிசு அரசியல் என்பது நம் வாரிசுகளின் கல்வி உரிமை ஒழிப்பு , நம் வாரிசுகளின் வாழ்வாதார ஒழிப்பு என்பதை மனதில் கொள்ளுங்கள் .
நான் பெரிய முற்போக்கு கொம்பாக்கும் .எல்லாரையும் கலாய்ப்பனேன்னு காலர தூக்கி விடறது சோ ராமசாமிக்கு வேணா செட் ஆகும் ..அவ்ருக்கு எவன் தோத்தாலும் ஜெயித்தாலும் கவலை இல்லை.தன் இடத்துக்கு ஆபத்து வந்துடாதுன்னு அவருக்கு தெரியும்..
நாம செய்ற ஒவ்வொரு காமடியும் ந்மக்கு நாமே தோண்டிக்கிற குழின்னு புரியலன்னா கடைசி வரை பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.
.திமுக பதவிக்கு வர்லன்னாலும் அந்த கட்சி இருக்கும். அவர்களுக்கு ஒரு நஷ்ட்டம் இல்லை .மக்களுகான அரசியல பேசிக் கொண்டே இருக்கும்..ஆனா திமுக ஆட்சிக்கு வர்லன்னா இருக்கற கொஞ்ச நஞ்ச நம் உரிமைகளும் போய்டும்.சொந்த நாட்லயே அகதியா வாழ்வோம். மார்வாடி நம்ம எல்லா இடத்திலும் அதிகாரம் செய்வான்.
பி ஜே பி யை தோற்கடிப்பது என்பது எதிர்ப்பை ஒன்று படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம்...தமிழகத்தின் எதிர்காலம் திமுகவை ஆதரிப்பது என்ற ஒற்றை புள்ளியை நோக்கி இருப்பது மட்டுமே சரியான வழி ..
4 மாடு ஒரு சிங்கம் கதை குழந்தைல படிச்சு இருப்போம்..ஒற்றுமையா இருந்த மாடு கூட்டத்தை பிரிச்சு தனிதனியா அடிச்சு கொல்லும் சிங்கம். ..கேர்ளாவில் மாட்டு கூட்டத்தை சிங்கத்தால் பிரிக்க இயலவில்லை ...அந்த சிங்கம் வெறி கொண்ட பசியோடு தமிழகத்தை நோக்கி வரும்... ஒற்றுமையா இருந்து
தமிழகத்தை காப்போம்... திமுகவை ஆதரிப்போம்.
கலைஞர் உருவாக்கிய மாபெரும் கனவு கூட்டணி எதிர்த்து வாஜ்பய் பெற்றது 185 சீட் ..இந்த கூட்டணியை சில்லு சில்லா உடைத்து மோடி வென்ற சீட் 280 மட்டுமே ..பி ஜே பி வளரவும் இல்லை ...அதன் வெற்றி அதனுடையதும் இல்லை.நாம் பிரிந்திருந்தோம் .அவ்வளவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக