புதன், 16 டிசம்பர், 2020

கேரள உள்ளாட்சி தேர்தல் பாஜக படுதோல்வி!. : இடதுசாரிகள் கூட்டணி 516 இடங்களில் முன்னிலை . காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 22 இடங்களிலு்ம முன்னணயில்

மாலைமலர் : கேரள மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு  வெற்றி காங்கிரஸ் இரண்டாவது இடம் .. பாஜக  படுதோல்வி!.

 கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 8-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், 14-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரிகள் கூட்டணி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் 2-வது இடத்திலும், பா.ஜனதா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது..... 941 கிராம பஞ்சாயத்து இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 516 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 22 இடங்களிலு்ம முன்னணயில் உள்ளது.  


ஆறு மாநகராட்சி இடங்களில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தநிலையில பத்திரிகையாளர்களை சந்தித்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ‘‘இந்த வெற்றி கேரள மாநில மக்களின் வெற்றி. இந்த தேர்தல் முடிவு கேரளாவை அழிக்க முயற்சி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அரசின் ஸ்திரதன்மையை சீர்குலைக்க மத்திய ஏஜன்சிஸ் மூலம் நடந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு யுடிஎஃப்-வின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு கேரளாவில் இடம் கிடையாது என்பதை காட்டியுள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை: