அது மிகப் பெரிய தப்பு.உங்க சொந்த தொழிலை நீங்க செய்யணும்.அது மிக அருமையான தொழில்.காலையில் எழுந்ததும்உங்க மூட்டையைத் சுமந்து கொண்டு வருகிற கழுதை எப்படி இருக்குது? அதுக்கு ஆகாரம்
கொடுத்தமா ,என்பதைப் கவனிச்சு —அதை பேணி பாதுகாத்து அதற்கு மேலே மூட்டையைபோட்டுண்டு ஆறு குளம் போயி அங்கு துணியைச் நன்னா சலவை செஞ்சு காய வச்சுமடிச்சு கொண்டு வரணும்..
இதிலே இருந்து நீங்கள் மாறப்படாது.அதை நீங்க அப்படியே பின் பற்றணும்.
சில பேர் இங்கே பேசும் போது நாம மாறணும். நம்ம பிள்ளைகளை பள்ளி கூடம் அனுப்பணும் என்று பேசுவதை நான் கேட்டுண்டுதான் இருந்தேன்.
அந்த மாதிரி வழிகளெல்லாம் வேண்டாம்.காலம் கெட்டுடும் ‘கலிமுத்துது’என்பது இதையொட்டிதான் வருது.
அடுத்ததா சோடாக்காரம் வேணும் அதை அரசாங்கம் சலுகை விலையில் கொடுக்கணும்னு தீர்மானம் போடப் போறத சொல்லிக் கொண்டிருக்கேள்.
அது அறவே கூடாது.நீங்க உவர் மண்ணுலேயே சலவை பண்ணுங்க என்று பேசி விட்டு சென்றார்.
எண்ணிப் பாருங்கள்.திராவிடர் இயக்கமும்-
தலைவர் தந்தை பெரியாரும் அன்றைக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து மக்களிடம் எழுச்சியை உண்டாக்கி-அதன் எதிரொலியாய் காமராசரும் உட் கட்சிக்குள்
சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட இராஜினாமா செய்து விட்டு செல்ல
வேண்டிய நிர்பந்தம் ஏற்பட இராஜினமா செய்து விட்டு சென்றார் இராஜகோபாலாச்சாரி.
இன்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை
ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து—பழையபடியும்
இங்கு குல கல்வித்திட்டத்தை புதிய முறையில் கொண்டு வரத்தானே?காவிகளும்
காவியின் B’டீம்கள் மய்ய பார்ப்பனரும்,பார்ப்பாத்தியை மணந்த சிவாஜிராவ் கெய்குவாட்டுகளும்,வாங்கிய
காசுக்கு உரக்க கத்திக் கொண்டிருக்கும்
சூத்திர்ர்களும் ,முயன்று கொண்டிருக்கிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக