திங்கள், 30 நவம்பர், 2020

யாழ்ப்பாண நாடார்களும் தமிழக நாடார்களும்

Rare Pix of Ayya Kamarajar with Martin King - Picture of Kamarajar Mani  Mantapa Monument, Kanyakumari - Tripadvisor
காமராஜர் - மார்ட்டின் லூதர் கிங்

செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கையின் வடக்கே உள்ள ஜாதிகளின் தொகை அடிப்படையில் நடுவில்  கொஞ்சம் பக்கங்களை காணவில்லை என்றுதான்  கூறவேண்டி இருக்கிறது! . பெரும்பான்மையான ஜாதி என்று எதுவும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான் உள்ளது .. 

ஏனெனில் அங்கு ஜாதி கணக்கெடுப்பு கிடையாது . அது தேவையும் இல்லை.  இலங்கை அரசிமைப்பு சட்டம் பல விடயங்களில் பௌத்த சாசனத்தை பின்பற்றி உள்ளது பௌத்தம் ஜாதிக்கு எதிரானக உருவான மதம்தானே . தமிழகத்தில் உள்ள அநேகமான ஜாதிகள் இலங்கையிலும் உண்டு . காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டும் உள்ளது . 
உதாரணமாக ஏராளமான சிறு சிறு ஜாதிக்குழுமங்கள் தங்களை வெள்ளாளர் என்று அழைத்து கொண்டு அந்த கூட்டத்தில் சேர்ந்து விட்டார்கள் . 
 
பல தாழ்த்தப்பட்ட சாதியினரே தாங்கள் உயர்குடி வெள்ளாளர் என்று கூறிக்கொண்டு இதர ஜாதிகள் மீது கொஞ்சம் ஏளன மனப்பான்மையுடன் இருப்பது தெரிந்தத்தே . இவர்கள் எல்லோரும் தாங்கள் குடிசன அடிப்படையில் பெரும்பான்மை என்று கூறிக்கொண்டு அரசியலில் மற்றும் சமூக விடயங்களில்  ஆதிக்கம் வகிக்கிறார்கள். . 
உதாரணமாக 77 தேர்தலில் t u l f பெற்ற 18 எம்பிக்களில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை தமிழர் என்ற  ஜாதியை  ( நாடார்) சேர்ந்தவர் .
அதுவும் ஏதோ மனம் கசிந்துருகி அருள் புரிந்ததாக அப்போது கருதப்பட்டது.
 
 உண்மையில் வடக்கு இலங்கை தமிழர்களில் மூன்று பிரதான் ஜாதிகள் ஓரளவு சம பலத்தோடு இருப்பதாக தெரிகிறது
நாடார்கள் வெள்ளாளர்கள் கரையர்கள் ஆகிய ஜாதிகளின் சரியான விகிதாசாரம் எவருக்கும் தெரியாது .
நாடார்கள் மீதும் இதர தாழ்த்தப் பட்ட ஜாதியினரின் மீதும் கண்ணில் மண்ணை தூவவும் மேல்தட்டு ஜாதியினர் கண்டு பிடித்த வார்த்தைதான் சிறுபான்மை தமிழர் என்ற பதமாகும் . ( இவர்களை இழிவு படுத்தும் ஒரு சொல்லாக நளவர் என்ற சொல்லை கண்டு பிடித்துள்ளார்கள் ஆதிக்க ஜாதியினர் .

தமிழரே சிறுபான்மை .ஆனால் அதற்குள் எப்படி இன்னொரு சிறுபான்மை என்று குறிப்பிட்ட ஜாதிகளை அழைக்க முடியும் என்று யாரும் அன்று கேட்கவில்லை . 
அவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று முன்வந்த உயர்ஜாதி கம்யுனிஸ்டுகளின் வார்த்தை ஜாலமாக அது இருக்கலாம் . அதிலும் நுட்பமாக கவனிக்க வேண்டிய சதி ஒன்று உள்ளது .. 
ஏனெனில் நாடார்களை ஊர் வழக்கில் குறிப்பிடும் நளவர்  என்ற சொல் மிகவும் இழிவான தொனியில்  கூறபடுகிறது ,.
 
அவர்களை நாடார்கள் என்று குறிப்பிட்டால் அவர்கள் தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் ஒரு பலம் வாய்ந்த ஜாதி என்ற உண்மை அப்பாவியான வடக்கு சிறுபான்மை தமிழர்களுக்கு தெரிந்து விடும் . 
 
இந்த காலத்தில் ஜாதியை யார் பார்க்கிறர்கள என்று கூறுவோர் அத்தனை திருமண விளம்பரங்களிலும் இன்னும் ஜாதியை குறிப்பிடுகிறார்களே? 
குறிப்பாக உயர்குடி வெள்ளாளர் மணமகன் மணமகள் என்று இன்னும் குறிப்பிடுகிறார்கள். 
இதன் காரணமாக இதர ஜாதியினர் மீதான ஒரு உளவியல் தாக்கமாக இது இருக்கிறது என்றுதான் கருதவேண்டும்.
இலங்கை வெள்ளாள ஜாதியினர் தங்களின் ஜாதி வறட்டு பெருமையை தூக்கி பிடிக்கிறார்கள் . 
இதை தமிழ் தேசியமோ புலி தேசியமோ அல்லது முற்போக்கு இடது சாரிகளோ மறுக்க முடியாது.
பூசி பூசி மெழுகும் வேலையைதான் இதுவரை காலமும் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். 
இதன் காரணமாகத்தான் யாழ்ப்பாண ஆதிக்க ஜாதியினர் திராவிட கருத்தியலை முழு மூச்சாக எதிர்க்கிறார்கள் . திராவிடம் என்றால் ஜாதி  இல்லை என்று அவர்களுக்கு தெரியும்.
 
யாழ்ப்பாணத்தில் அநேகமாக வெள்ளாள ஜாதி மட்டுமே ஏனைய ஜாதிகள் மீது ஒரு ஆதிக்க மனோபாவத்தில் நடந்து கொள்கிறது.
இந்த ஒற்றை ஆதிக்கத்தை எதிர்கொண்டாலே யாழ்ப்பாண ஜாதீய கட்டுமானம் ஆட்டம் கண்டுவிடும் என்று கருதுகிறேன் .

இதற்கு முதல் படியாக யாழ்ப்பாண நாடார்கள் ( நளவர்கள்) தங்களை சிறுபான்மை தமிழர்கள் என்று கூறிக்கொள்ளாமல் நாடார்கள் என்று கூறிக்கொள்ளலாம்.  
அப்படி அவர்களின் அடையாளம் நாடார்கள் என்றாகிவிட்டால் அவர்கள் தமிழக நாடார்களோடு ஒரு உளவியல் அடையாளம்  பெற்று விடுவார்கள் .
இது யாழ்ப்பாண வெள்ளாள ஆதிக்கத்தின் வறட்டு கௌரவத்தை ஓரளவாவது நிவர்த்தி செய்து விடும் என்று கருதுகிறேன் .

யாழ் நாடார் சமுகம் தமிழக நாடார் சமுகத்தின் ஒரு அங்கம் என்ற செய்தியை யாழ்ப்பாண உயர்குடிகளுக்கு அறிய தருவது காலத்தின் தேவை என்று கருதுகிறேன் . 
ஜாதி ஒரு நோய் என்பதில் சந்தேகம் இல்லை இலங்கையில் ஜாதி மெதுவாக அருகி கொண்டு வருகிறது என்பதுவும் உண்மைதான
 
உடனே யாழ்ப்பாணத்தில் நாடார் சங்கம் அமைக்கமாறு அல்லது அங்குள்ள சிறுபான்மை தமிழர் சபைகளின் பெயர்களை நாடார் சபைகள் என்று மாற்றுமாறு நான் கூறவரவில்லை .. 
 
ஆனால் தேர்தல்களில் ஜாதி ரீதியான புறக்கணிப்புக்கள் இருக்க கூடாது சமுக உளவியல் ரீதியான சிந்தனைக்கு கொஞ்சம் வேலை கொடுக்க வேண்டி இருகிறது.
.
தமிழகத்தில் நாடார் சமுகத்தின் தற்போதைய நிலை பற்றிய சிறு விளக்கத்தை கீழே உள்ள தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம் : 
 
இவை பெரிதும் விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும்!
 

 தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அளப்பரியது. 

 நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.
ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைகள்/இதழ்கள் தினத்தந்தி தினகரன் மாலைமுரசு  மாலைமலர் ராணி ராணிமுத்து .தந்தி டிவி
பிரபலமானவர்கள் காமராசர் - தமிழக முதலமைச்சர்
சௌந்தர பாண்டியன் – நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்
ம. பொ. சிவஞானம் - தமிழரசுக் கழக நிறுவனர், சிலம்பு செல்வர்
சி. பா. ஆதித்தனார் - தமிழக சட்டமன்றத் தலைவர்
நேசமணி -நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்
பொன் ராதாகிருஷ்ணன் - முன்னாள் மத்திய மந்திரி
தனுஷ்கோடி ஆதித்தன் - முன்னாள் மத்திய மந்திரி
ராதிகா செல்வி - முன்னாள் மத்திய மந்திரி.  
 
 பி. எச். பாண்டியன்- முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், ex M L A, மற்றும் நடிகர் தமிழிசை சௌந்தராஜன் - பாஜக தேசிய செயலாளர்
சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர் (நாம் தமிழர் கட்சி)
தனபாலன் -பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்
குமரி அனந்தன் - முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்
எர்னாவூர் நாராயணன்- நாடார் பேரவை தலைவர், M L A (அஇசமக)
ஆலடி அருணா - முன்னாள் சட்டத்துறை அமைச்சர்
கராத்தே டேவிட் செல்வின் நாடார் - காமராஜர் ஆதித்தனார் கழகம் வெங்கடேச பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை சு.பா.உதயகுமார் - சமூகப் போராளி
மா.பா.பாண்டியராஜன் - தமிழக சட்டமன்ற உறுப்பினர்
ராஜாத்தி அம்மாள் (கலைஞர் மனைவி . எம்பி  கனிமொழியின் தாயார்)
 சி. பா. ஆதித்தனார் - தினத்தந்தி நாளிதழ்
கே.பி.கந்தசாமி - தினகரன் பத்திரிகை நிறுவனர்
சிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றவர். HCL Technologies
அட்மிரல் சுசில்குமார் - முன்னாள் இந்திய இராணுவ தலைமை அட்மிரல் சுனில்குமார் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல்
Oscar Stantley தாசன் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி
 Dr.R.R.டேனியல் விஞ்ஞானி, பத்மபூஷண் விருது
A.E. முத்து நாயகம் - முன்னாள் ISRO தலைமை
 F.V அருள் I.G வால்டர் தேவாரம் D.G.P சைலேந்திர பாபு I.P.S தேவசகாயம் I.P.S (I.G) நீயுட்டன் தேவசகாயம் I.P.S (D.I.G) ரவி ஆறுமுகம் I.PS ( I.G)
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஏ. ஆர். முருகதாஸ் - திரைப்பட இயக்குனர்
ஹரி திரைப்பட இயக்குனர்
ராபின் சிங் - கிரிக்கெட்
ராஜராத்தினம் - இந்திய கபடி அணி தலைவர் (Won Asia Gold)
விஜய் அமிர்தராஜ் - பிரபல டென்னிஸ் வீரர்
மானுவல் ஆரோன் - முதல் சர்வதேச செஸ் மாஸ்டர்
 ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன் -தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர். பிரபஞ்சன் - எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)
 டாக்டர் மத்தியாஸ் - மருத்துவர் அய்யா நாடார் - இந்தியாவில் பட்டாசு தொழிலை அறிமுகப்படுத்தியவர்
எம்.ஜி.முத்து - தொழில்துறை MGM Dizzee World
அர்.ஜி.சந்திரமோகன் - தொழில்துறை Arun Ice Gream
 செல்வரத்தினம் - தொழில்துறை சரவணா ஸ்டோர்ஸ்
வி.ஜி.பன்னீர்தாஸ் - தொழில்துறை
V.G.P செல்வராஜ் - தொழில்துறை Queens Land, chennai
 கணபதி நாடார் - தொழில்துறை DOSAPLAZA
ராஜகோபால் நாடார் - தொழில்துறை சரவணபவன் உணவகம் 
ஜேக்கப் சகாயகுமார் - சமையல் கலை நிபுணர் 
அய்யா வைகுண்டர் - அய்யாவழி

கருத்துகள் இல்லை: