ஞாயிறு, 29 நவம்பர், 2020

அன்புதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் One Flew Over the Cuckoo's Nest - 1975

Netflix's Nurse Ratched TV Series Will Include Jack Nicholson's One Flew  Over the Cuckoo's Nest Character
Sridhar Raghunathan : இந்த படத்த பாக்கணும்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன் ... நேற்று வாய்ப்பு கிடைத்தது .... மிகவும் துயரமே உருவான அருமையான காவியம் ...... நம்ம ஊர் அன்பே சிவம் , மற்றும் முன்னாபாய் MBBS என்ற படங்கள் மாதிரி அன்புதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் .....
McMurphy என்கிற கதா பாத்திரத்தில் நம் Jack Nicholson வாழ்ந்துருக்காரு .... சிறு குற்றங்கள் செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக , மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து , மனா நலக்காப்பகத்துக்கு வருகிறார் ...
Exploring Setups: One Flew Over the Cuckoo's Nest [IndieWire] - YouTube
மனநல காப்பகத்துல இருக்குற எல்லா நோயாளிகளையும் இயல்பா காட்டுறாங்க ....McMurphy கிரிமினல் ரெக்கார்டு இருந்தாலும் , எல்லா மனா நோயாளிகளையும் அன்பாக பாக்கிறார் ..... அவர்களுக்கு தேவைப்படும் சிறிய சந்தோஷங்களை கொடுக்க நினைக்கிறார் ..... footbaal பார்க்கும் உரிமை , சீட்டு விளையாடும் உரிமை , தேவை இல்லாத சத்தமாந பாட்டு வேண்டாம் என்று பல விஷயங்களுக்காக போராடுகிறார் ...
ஆனா இதையெல்லாம் Louise Fletcher எங்கிற நர்ஸ் கொஞ்சம் கொஞ்சமா மறுத்து விடுகிறார் .... அந்த நர்ஸுதான் , அந்த வார்டு இன்சார்ஜ் ..... ...Jack Nicholson செய்யும் நல்ல காரியங்களை கொஞ்சம் கொஞ்சமா தடுத்து விடுகிறார் ,,,,, ரொம்ப கொடூரமான மனது கொண்டவள் ... ஆனா பேசும்போது ரொம்ப அமைதியா பேசுவாள் .... அவள் கொடூர காரி என்று யாருமே நினைத்துகூட பார்க்க மாட்டார்கள் ....
இந்த சமயங்களில் Jack Nicholson க்கு உண்மையான நண்பர் கிடைக்கிறார் .. அவர் செவ்விந்தியரான Will Sampson .. Chief அப்படீன்னு கூப்பிடுறாங்க .... இறந்து பெரும் கனடாவுக்கு தப்பித்து போறதுக்கு பிளான் பண்றங்க .... மிகுந்த நம்பர்கள் ஆகிறார்கள் ...
பல பல காட்சிகள் ....Jack Nicholson எல்லா நோயாளிகளையும் படகு சவாரி செய்ய வைக்கிறார் ..... இந்த மன நோயாளிகளில் ஒரு முக்கிய பாத்திரம் 21 வயதே நிரம்பிய ஒரு இளைஞன் ..... காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள நினைத்து , இங்கு மன நல காப்பகத்தில் மாட்டி கொள்கிறார் ... பெரு பில்லி .... Jack Nicholson கட்டத்தில் தன்னுடைய விலை மாதர் பெண்களை ( நண்பிகள் ) ஆஸ்பத்திரிக்கு கடத்தி வந்து , எல்லா நோயாளிகளுக்கும் ட்ரிங்க்ஸ் பார்ட்டி வைத்து , பில்லி எனும் இளைஞனை அந்த விலைமாதர் பெண்ணுடன் உறவு கொள்ள வைக்கிறான் ....
பேசிக்காJack Nicholson க்கு எல்லோரும் சந்தோஷமா இருக்கனும்ன்னு ஆசை .... ஆனா இந்த குழப்பத்தில் அந்த கொடூர நர்ஸ்Louise Fletcher செம்ம கடுப்பாகி , அந்த இளைஞன் பில்லியை கடுமையாக திட்ட , அவன் தற்கொலை செய்துக்குறான் ...கோபத்தில் நம்மJack Nicholson அந்த நர்ஸை குரல் வளையை நெரித்து கொள்ள பார்க்கிறான் .. கடைசி வினாடியில் அவள் காப்பாற்றப்படுகிறாள் ....
அந்த கொடுங்கோலி நர்ஸ் மீண்டும் வருகிறாள் .... கழுத்தில் காலர் மாட்டிக்கொண்டு வேலை பார்க்கிறாள் ... குரல் கொஞ்சம் கம்மி உள்ளது .... ரூல்ஸ் தளர்ந்து போகிறது .... நோயாளிகள் தடை இல்லாமல் சீட்டு விளையாடுகிறார்கள் .... மூல நாவல்படி அவளுக்கு குரலே போயிருது ... ஆனா இந்த படத்துல அவள் கொஞ்சம் பேசுற மாதிரி காட்டி இருக்காங்க ...
அப்புறந்தான் கொடுமையிலும் கொடுமை ...... எல்லோருக்கும் நல்லதே நினைத்த நம் Jack Nicholson யை , Lobotomy எனும் அறுவை சிகிச்சை மூலம் நடை பிணமாக மாற்றி விடுகிறார்கள் .. நம் மனசு வலிக்குது .... ரொம்ப வலிக்குது .... இதை பார்த்து கலங்கி போய் ,Jack Nicholsonனுடைய உயிர் நண்பர் செவ்விந்தியரான Will Sampson அவரை கருணைக்கொலை செய்து விடுகிறார் .... சிறையை விட்டு தப்பித்து விடுகிறார் ....
இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ரொம்ப நேரம் நெஞ்சு கனமா இருந்துச்சு .....
மென்மையும் , அன்பும் , சந்தோஷமும் , பொறாமையும் , அடுத்தவர்களை கீழ்மைப்படுத்துவதும் பழி வாங்கலும் அருமையாக சொல்லப்பட்ட படம்

.... ஆனா One Flew Over the Cuckoo's Nest , தலைப்புக்கான அர்த்தம் புரியல

 

Radha Manohar : ஆம் அந்த படம் பற்றிய தங்களின் விமர்சனம் மிகவும் சரியானதுதான் மனதை உறையவைக்கும் அந்த நேர்ஸ் பாத்திரம் .. ஜாக் நிக்கல்சன்ன்னுக்கு இயற்கையாகவே கொஞ்சம் குறும்பு மின்னும் கண்கள் . அது இந்த படத்துக்காக நன்றாகவே கைகொடுத்தது . இந்த படத்தை மலையாளத்தில் தாளவட்டம் என்ற பெயரில் படமாக்கி இருந்தார்கள் . வழக்கம்போல காபி அடித்ததுதான் . ஆனாலும் கொஞ்சம் நல்லாகவே காப்பி அடித்தார்கள் .மோகன்லால் சோமன் துடி நெடுமுடி வேணு கார்த்திகா போன்றோரின் நடிப்பில் வெற்றி படமாக அமைந்தது . இந்த இரண்டையும் பார்த்து தமிழில் பிரபு நடிப்பில் மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் கெடுத்திருந்தார்கள் . அவரின் பிற்காலத்து படம் As good as it gets இதுவும் அவரின் பெயர் சொல்லும் படம்தான் ஆஸ்கர் பெற்றது  

கருத்துகள் இல்லை: