ஆனால், சபரிமலையில் செயற்கையாக மனிதர்கள்தான் நெருப்பை பற்றவைத்து வெளிச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை முதன்முதலில் நாத்திகர்கள்தான் அம்பலப்படுத்தினார்கள். அப்படியும்கூட, செயற்கையாக உருவாக்கப்படும் அந்த வெளிச்சத்தை இப்போதும் பரவசமாகப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்களின் முட்டாள்தனத்தைத்தான் கடவுளின் பெயரால் காசு சம்பாதிக்கும் கூட்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் திருவண்ணாமலையிலும் இறைவன் ஜோதி வடிவத்தில் காட்சி அளிப்பதாக கட்டிவிடப்பட்ட கதையையும் நாத்திகர்கள்தான் அம்பலப்படுத்தினார்கள். மலையில் அந்த வெளிச்சத்தை ஏற்படுத்த எவ்வளவு எண்ணையும் திரியும் செலவு செய்கிறார்கள் என்ற உண்மை வெளியான பிறகு, இப்போது ஜோதியை தீபமாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
அப்படி என்றால் இப்படி என்பார்கள். இப்படி என்றால் அப்படி என்பார்கள். பார்ப்பனர்களின் புரட்டுகளை நம்பும் கூட்டம் இன்னும் இருக்கிறது. அந்தக் கூட்டம் இருக்கும் வரை பார்ப்பனர்களின் வயிறு நிரம்புவதில் எந்த தடங்கலும் ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக