பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று !
நக்கீரன் செய்திப்பிரிவு
:
கடலூர் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைத்து அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புவனகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மட்டுமல்ல இதற்கு முன்பே பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது, சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விடமால் தடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக