Radha Manohar :முத்தையா முரளிதரன் மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒரு அடையாள சின்னம் அவர். முத்தையா முரளிதரன் புலிகளின் அத்தனை தில்லுமுல்லுகளையும் அறிந்திருந்தார் . அவர் மட்டுமல்ல வேறு எந்த மலையகத்தவர்களையும் கேட்டு பாருங்கள் கூறுவார்கள் கதை கதையாக .
மலையகம் என்றாலே தீண்டத்தகாதவர்கள் போல கருதும் வடக்கு மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இந்த முத்தையா முரளிதரன் எதிர்ப்பு என்பதை பார்க்கவேண்டி இருக்கிறது. இதுவரை எவ்வளவு மலையக இளைஞர்கள் புலிகளால் கட்டாயமாக பிடித்துகொண்டுபோய் கொலைக்கு கொடுக்கப்பட்டவர்கள் என்ற கணக்கு உண்டா? வடக்கு புலிகளால் மலையக அப்பாவி இளைஞர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டிருந்தும் இதுவரை இதைப்பற்றி புலி இயக்கமோ அதன் ஆதரவாளர்களோ மூச்சு விடுவதில்லை . மலையகத்தவர்களும் மௌனமாகவே கண்ணீர் விட்டனர் . ஏனெனில் அவர்களின் உறவினர்கள் பலர் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வாழ்கின்றனர் .
புலிகளின் தொடர்புகளால் மலையக லயன் குடியிருப்புக்களில் நேர்ந்த கொடுமைகள் ஏராளம் .
ஆரம்பத்தில் இருந்தே முரளீதரன் பெயரை கேட்டாலே புலிகளுக்கு மிகப்பெரிய எரிச்சல் இருந்தது உண்மை .
ஒரு தமிழனை உலகம் பூரா கொண்டாடுகிறதே என்ற புழுங்கல். அதுவும் அவர் ஒரு மலையக இளைஞனாக இருக்கிறாரே என்ற காய்ச்சல்.
மேலும் முரளிதீரன் வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வளவு தூரம் தனது நற்பணியை வழங்கி இருக்கிறார் என்ற உண்மையையும் மறைக்கப்படுகிறது
அங்கு சென்று பார்த்தால்தான் இது தெரியவரும்
புலிகளின் டிராமாக்களை உலகமே அறிந்திருந்தது . மக்களை தன்னிச்சையாக போக அனுமதித்திருந்தால் இந்த அழிவே நடந்திருக்காதே. மேலும் புலிகள் விடுதலை போராட்டத்தை ஒரு மாபியா ரவுடிசமாக மாற்றியதை எப்படி இலகுவில் கடந்து போகமுடியும்?
புலிகளின் அத்தனை சமூக விரோத மனிதகுல விரோத குற்றங்கள் சாதாரணமானதா?
இந்த திரைப்படத்துக்கு எதிராக புலி ஆதரவாளர்கள் சிலர் எழுப்பும் கூச்சல் வெறும் ஆற்றாமையால் எழுவது . தங்களின் முட்டாள்தனத்தை . தங்களின் மோசமான தோல்விக்கு தாங்கள் காரணமல்ல வேறு வேறு சக்திகள் அல்லது மனிதர்கள்தான் காரணம் என்று நிறுவ முற்படும் திருட்டுத்தனம்தான் ..
மேலும் ஒரு முக்கிய செய்தி போர் முடிவடைவதற்கு முன்பாகவும் அதற்கு பின்பாகவும் ஏராளமான முன்னாள் புலிகள் ராஜபக்ச கட்சியில் சேர்ந்து விட்டார்கள் .
ராஜபக்ச ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் கட்சியிலேயே பெரும்பாலோர் சேர்ந்துள்ளனர் .
ஏனிந்த முன்னாள் புலிகள் ஒருவரும் ரணில் கட்சியிலோ வேறு எந்த கட்சியிலோ சேரவில்லை? இது ஒரு பதில் கிடைக்காத கேள்வியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக