பபிரான்ஸ் அதிபர் அவசர ஆலோசனை: ிரான்ஸில் புதிய கட்டுப்பாடு நடவடிக்கையை அறிவிப்பது குறித்து அதிபர் எமானுவேல் மக்ரோங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறையை அவர் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
நெதர்லாந்தில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பகுதியளவு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வைரஸ் தொற்று எண்ணிக்கை
ஐரோப்பாவின் பல நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட பல நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஒரே நாளில் 5,000 தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு இதுவரை பதிவான மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 913 ஆகும்.
ஸ்பெயினில் என்ன நடக்கிறது?
ஐரோப்பாவிலேயே மிக அதிக வைரஸ் தொற்றுள்ள நாடாக விளங்கிய ஸ்பெயினில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளது. அங்கு சுமார் 90 ஆயிரம் தொற்றுகளும் 33 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த கோடை காலத்தில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட கேட்டலோனியா பிராந்தியத்தில் இரண்டாவது அலை வைரஸ் தோன்றுவதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்சிலோனாவில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக