ஞாயிறு, 11 அக்டோபர், 2020

தமிழகத்தில் பழங்குடியின(ST), பட்டியலின(SC), பிற்படுத்தப்பட்ட(BC/MBC) மக்கள் மேம்பாட்டுக்காக கலைஞர் மேற்கொண்ட 24 நடவடிக்கைகள்,,

 அ. வெ
ற்றிவேல்
:  தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மேம்பாட்டுக்காக கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
1. சமுதாய நலத்துறை அரசு ஆணை G.O.(MS) No.122 DT. 18. 2. 1972 பிரகாரம் தொழில் கல்வி கற்கும் SC/ST மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கடன் கொடுக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முதல் அமுலாக்கப்பட்டது.
2. அரசு ஆணை G.O.Ms.No. 477 Dated : 27 - 06 – 1975 பிரகாரம் வேறுவேறு சாதியை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் சாதிசான்று தந்தையின் சாதியாகவே இருந்த நடை முறையை மாற்றி அவரவர் விருப்பத்தின்படி தந்தை அல்லது தாய் இருவரில் யாருடைய சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி செய்கிறது.
3. அரசு ஆணை G.O.Ms.No.1414 Dt: August 01, 1989 பிரகாரம் ஆதிதிராவிட பழங்குடியினர் மற்றும் அதிலிருந்து மதம் மாறியவர் அனைவருக்கும் பட்டப்படிப்புவரை கல்வி இலவசம் ஆக்கப்பட்டது.
4. அரசு ஆணை G.O. Ms. No. 1597 Dt: September 27, 1990 பிரகாரம் புத்தமதம் மாறிய ஆதிதிராவிட பழங்குடி இன மக்களுக்கும் சலுகைகள் இலவச திட்டங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டது.
5. அரசு ஆணை G.O.Ms.No.44 Dt: May 20, 1998 தமிழக அரசு பணியிடங்களில் ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தைச்சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு சதவிகிதத்தை முழுமையாக்கி காலி இடங்களை நிரப்ப வகை செய்யப்பட்டது.
6. அரசு ஆணை G.O. (Ms). No. 50 Dt: April 29, 2009 பிரகாரம் அருந்ததிய இனமக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
7. Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) என்கின்ற நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கான எல்லா நலத்திட்டங்களும் இந்த அமைப்பின் மூலம்தான் செயல்படுத்தப்படுகிறது.
8. TAHDCO வைப் போன்று பிற்படுத்தப்பட்டவர்கள் நலனுக்காக TAMIL NADU BACKWARD CLASSES ECONOMIC DEVELOPMENT CORPORATION LIMITED ( TABCEDCO) உருவாக்கப்பட்டது.
9. நிர்வாகத் திறனுக்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 1969 லும் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 1989 லும் , மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 2௦௦7 லும் தனித்தனி துறைகளாக உருவாக்கப்பட்டன.
10. முதல் சட்டத்திருத்தத்தின்படி தமிழ்நாட்டில் பட்டியல் இனமக்களுக்கு
16% ம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25% கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருந்தது. அதனை 1971ல் முதன்முதலாக 19 % பட்டியல் இன மக்களுக்கும் 31 % பிற்படுத்தப்பட்டவருக்கும் என்று உயர்த்தியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.
11. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினருக்கு 20 % தனி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
12. மண்டல் கமிஷன் அறிக்கையை திரு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்தி வெளியிட்டு அமுல்படுத்தியது.
13. Tamil Nadu Vanniyar Public Properties Welfare Board தமிழ்நாடு வன்னியர் பொது சொத்து நலவாரியம் 2௦௦9 ல் உருவாக்கப்பட்டது.
14. Tamil Nadu Narikoravar Welfare Board தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் 2008 ஆண்டு உருவாக்கப்பட்டது
15. 1969 வரை ஆதிதிராவிடர் நலத்துறையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் இணைந்திருந்தது. 2.5.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை எனப் புதிய துறையை தனியே உருவாக்கி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காகவே செயல்படும் நிலையை உருவாக்கியது கழக அரசுதான்.
16. 2000ஆம் ஆண்டில் பழங்குடியினருக்குத் தனித்துறையை உருவாக்கியதும் கழக அரசுதான்.
17. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இருந்த 16 சதவிகித இட ஒதுக்கீட்டினை 1971ஆம் ஆண்டில் 18 விழுக்காடாக உயர்த்தி, பின்னர் 1990இல் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து, பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்க வழி செய்ததும் கலைஞர் தான்.
18. சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் கழக அரசு உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பிலும் 100 வீடுகள் கட்டப்பட்டு; அவற்றுள் 40 வீடுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 25 வீடுகள் மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 10 வீடுகள் இதர பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இதுவரை 172 சமத்துவபுரங்கள் திறந்து வைக்கப்பட்டு, அதில் அனைத்துப் பிரிவினரும் நல்லிணக்க உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மாதிரியான புரட்சிகரத் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
19. தமிழக அரசு சிறப்பு உள்ளடக்கத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக மாநில ஆண்டு திட்டத்திலிருந்து 19 சதவிகிதத்திற்கு அதிகமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிதி செல்லுமாறு திட்டமிடப்பட்டு, அது சரியாக செல்கிறதா என்று கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
20. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர் இலவச வீட்டு வசதிக் கழகம் 15.2.1974 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டம்தான் பின்னர் இந்திரா வீட்டுவசதித் திட்டம் என மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
21. சாதி வேறுபாடுகளை ஒழித்திட அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் எனும் திட்டம் கழக அரசில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் எனில் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.
22. அம்பேத்கரைப் போற்றுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பது கழக அரசுதான். அண்ணல் அம்பேத்கர் பெயரில் சென்னையில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
23. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக மாநில அரசின் திட்டப் பணிகளில் பிரித்தளிக்கக் கூடியவற்றில் - ஆதி திராவிடர் துணைக் கூறுத் திட்டத்திற்கென தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2005_06 ஆம் ஆண்டில் ரூபாய் 567 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு - 2009_10ஆம் ஆண்டு நிதியாண்டில் நான்கு மடங்காக அதாவது 2,615 கோடியாக உயர்த்தப்பட்டது.
24. இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழுவில் ஒரு தாழ்த்தப்பட்டோர் இருக்க வேண்டும் என்ற அரசாணை வெளியானதும் கலைஞர் ஆட்சியில் தான்.

கருத்துகள் இல்லை: