ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வெளிவந்த பிறகு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அப்படி செய்யப்படாத பட்சத்தில், வங்கிகள் அதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஏடிஎமிற்கும் (ATM Machine) அனுப்பப்படும் நோட்டுகளை சரிபார்த்து, கணினியில் போலி நோட்டுகளை சேர்ப்பதைத் தவிர்ப்பது போன்றவை வங்கியின் பொறுப்பாகும். ஏடிஎம்கள் மற்றும் கவுண்டர்களில் பணத்தை சரிபார்க்கப்படுவதற்கான காரணம் இதுதான்.
இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் இருப்பதால், சில போலி நோட்டுகள் உண்மையான நோட்டுகளுடன் கலக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், வங்கியால் இந்த நோட்டுகளை அடையாளம் காண முடியவில்லை, அவை ஏடிஎம்-ஐ அடைகின்றன.
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கும் போது, இந்த நோட்டுகள் அவர்களின் கைக்கு செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழி என்னவென்றால், இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்த பிறகு, அங்கு இருக்கும் சி.சி.டி.வி (CCTV) முன் போலி நோட்டுகளை காட்டுங்கள். நோட்டின் முன் மற்றும் பின் பக்கங்களை கேமராவின் அருகே சென்று காண்பிக்க வேண்டும்.
இதற்குப் பிறகு, ஏடிஎம் பாதுகாப்புப் பணியாளருக்குத் (Security Guard) தெரிவிக்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்களிடம் இரண்டு சான்றுகள் இருக்கும். இந்த சான்றுகள் அடிப்படையில் ஏடிஎமிலிருந்து தான் போலி நோட்டுகள் வெளிவந்துள்ளன என்பதை வங்கியிடம் நிரூபிக்க முடியும். இதன் பின்னர், போலி நோட்டுகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளின்படி வங்கி சில நடைமுறைகளைப் பின்பற்றும், மேலும் அந்த போலி நோட்டுக்கு பதிலாக வாடிக்கையாளருக்கு அசல் ரூபாய் நோட்டு வழங்கப்படும். நீங்கள் வங்கிக்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பெற்ற ரசீதைக் காட்டினால், உரிமை கோருவது எளிதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக