புதன், 15 ஜூலை, 2020

கவிஞர் வைரமுத்து .. ஆர் எஸ் எஸ் கோணியில் புலிப்பாணியும் தலித்தாணியும் யாழ்ப்பாணியும் .. சமுகவலை விவாதங்கள் ..

George RC : · Poetic licence என்பதை... Self-proclaimed கவிப்பேரரசு James Bondன் Licence to kill மாதிரி... தப்பாக விளங்கிக் கொண்டிருப்பாரோ?
 Kalai Selvi தமிழுக்கு ஆற்றுப்படை கண்ட கவிஞர் - கவியரசாகி, கவிப்பேரரசு ஆன கதை.
விகடன் நேர்கணால்
கேள்வி -
“கவிஞர் என்ற பொதுவான அடையாளங்களைத் தாண்டி, கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ போன்று பெயருக்கு முன் இட்டுக்கொள்ளும் அடையாளங்கள் எல்லாம் முடியாட்சிக் காலப் பழைமைகளின் எச்சங்கள். இவை ஜனநாயக காலத்துக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?”

பதில்-
“ஜனாதிபதி சாரட் வண்டியில் வருவதுகூட முடியாட்சியின் எச்சம்தான். மாற்றிவிடலாமா? தமிழ்நாட்டில் கலைஞர்கள்மீது ஒரு கொஞ்சுதல் உண்டு. இதுதான் இங்கு அடிப்படையான விஷயம். தமிழர்கள் கலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்ப்பார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் கொஞ்சுவார்கள் அந்தக் கொஞ்சுதல் என்பதுதான் கலைஞர்களுக்கான ஊக்கம். இந்தப் பட்டங்கள் எல்லாம் நாங்கள் தேடிப்போனதல்ல. ‘கவியரசு’ என்பது தமிழ் வளர்ச்சி மன்றம் என்னைக் கொஞ்சிக் கொடுத்தது. ‘ ‘கவியரசு’ என்ற பட்டம் கண்ணதாசனுக்குத்தான் உரியது, நீ எப்படி இட்டுக்கொள்ளலாம்?’ என்று கேட்டார்கள். ‘ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் என்று சொல்வதுபோல நான் இரண்டாம் கவியரசாக இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று வேடிக்கையாகச் சொன்னேன்.



 அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. சரி வேண்டாம், ‘கவியரசு’ கண்ணதாசனுக்கு மட்டுமே உரியது என்று பட்டத்தைத் துறந்துவிட்டேன். கலைஞர் அப்போது முதலமைச்சராக இருந்தார். ‘அதை ஏன் துறந்தீர்கள்? அது நீங்களாகப் போட்டுக்கொண்ட பட்டமில்லையே... உரியவர்கள் கொடுத்ததுதானே?’ என்று சொன்னார். ‘இல்லை அய்யா, சிலருக்கு அதில் விருப்பமில்லை; வருத்தப்படுகிறார்கள். கவிஞன் ஒரு சமூகத்துக்கு மகிழ்ச்சி அல்லவா தர வேண்டும். ஆகவே, நான் அதைத் துறந்து அவர்களுக்கு மகிழ்ச்சி தந்துவிட்டேன்’ என்றேன். அதற்குப் பிறகு, ‘பெய்யெனப் பெய்யும் மழை’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது கலைஞர் அரங்கத்தில். என் மனைவி முன்னுரை சொல்கிறார். பின் நான் கவிதையை அரங்கேற்றுகிறேன். கலைஞர் பேச வருகிறார். ‘இந்தச் சபையில் துணைவேந்தர்கள் இருக்கிறீர்கள், நீதியரசர்கள் இருக்கிறீர்கள், அதோ அப்துல் ரகுமான் இருக்கிறார், ஈரோடு தமிழன்பன் இருக்கிறார், கவிஞர் குலோத்துங்கன் இருக்கிறார், பெரும் புலவர்களும் தமிழறிஞர்களும் இருக்கிற இந்தச் சபையில் உங்களுடைய வாழ்த்துகளோடு நான் வைரமுத்துவுக்கு ஒரு பட்டம் தருகிறேன். இன்று முதல் அவர் ‘கவிப்பேரரசு’ ’என்றார். சபையோர் கைதட்டினார்கள். கலைஞர் கொஞ்சிக் கொடுத்த பட்டம் அது. ‘கவிப்பேரரசு’ என்று இட்டுக்கொள்வது, எனக்கு ஒரு பெருமை என்பதற்காக அல்ல. கொடுத்தவர் கலைஞர்... அதை மதிக்க வேண்டும் என்பதற்காக நான் அதைப் போற்றி வைத்திருக்கிறேன்.

George RC   :  இந்த அரசியல் தொடர்பு தான் இணங்க மறுத்த பெண்களை மிரட்ட வைத்திருக்கிறது!

Kalai Selvi என்னதான் ஒழித்து ஒழித்து விளையாடினாலும் பார்ப்பனீயத்தின் கள்ள குழந்தைதான் முற்போகுகள்

 George RC : i குற்றம் சாட்டப்படும் குற்றவாளிகள் ஏன் மற்றவர்களை கூண்டில் ஏற்றவில்லை என்று வாதம் செய்ய முடியாது. கேள்வி குற்றவாளியா? சுற்றவாளியா? என்பது தான். குற்றம் சாட்டியது ஒருவரல்ல. பலர்! தனது கணவன் ஏகபத்தினி விரதன் என்று மனைவி கூட சொல்லவில்லையே?

 George RC Kalai Selvi புலிவால் கூட்டம் சொல்வதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

 Kalai Selvi :  பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வரை பாட்டெழுதியோர் தனிமனித ஒழுக்கத்தில் சுழியம் தான் ; திறமைக்கும் தனிமனித ஒழுக்கத்திற்கும் முடிச்சு போட்டுத் தான் பாடல்களை போற்ற முடியும் என்றால் ஒருத்தர் கூட தேறமாட்டார்கள்! எழுத்தையும் எழுத்தாளரையும் கவிதைகளையும் கவிஞரையும் பிரித்துப் பார்க்க கற்றுக்கொள்வதே மேம்பட்ட சமூகத்திற்கு அழகு! அந்த வகையில் தமிழாற்றுப்படை எனும் சிறந்த நூலை ஆக்கித்தந்த வைரமுத்து அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Kanimozhi MV

 George RC :  பார்ப்பனியத்தின் முற்போக்கு குழந்தை என நீங்கள் குற்றம் சாடுவது எதன் அடிப்படையில்? வைரமுத்து என்ற கவிஞனா? மனிதனா? உங்களாலேயே பிரித்து பார்க்க முடியுவில்லை. எங்களை பிரித்து பார்க்க சொல்கிறீர்களே!?

Kalai Selvi :  வைரமுத்து பற்றி ஏதாவது நாராசாமா பேசினா செலவில்லாம விளம்பரம் கிடைக்கும்! இன்றைய தேதியின் trend அதுதானே? என்னதான் ஒழித்து ஒழித்து விளையாடினாலும் பார்ப்பனீயத்தின் கள்ள குழந்தைதான் முற்போகுகள் என்பதை கவிஞர் தனது மௌன கவிதையால் காட்டி கொடுக்கிறார் .. அதென்னப்பா அப்படி ஒரு ஒற்றுமை ... அத்தனை பார்ப்பானும் அத்தனை புலம் பெயர் தமிழ் தேசியரும் முற்போக்கரும் சொல்லி வைத்தது போல வைரமுத்து கோரசை ஆரம்பித்து விட்டார்கள்?.. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ ? உன்னை பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ... எப்போதும் தமிழ் பாடும்! தமிழாற்று படை தோரணம் கட்டி பாடும் .. தடை உடைத்து பாடும் ! . Radha Manohar


George RC :  இதைத்தான் இன்றைக்கு புலிக் கூட்டம் சொல்லிச்சு. புலியெதிர்ப்பு புராணத்துக்கு மார்க்கெட் இருக்கிறது என்று. ஒரு கடைந்தெடுத்த அயோக்கியனை பற்றி எழுதித்தான் நாங்கள் பெயர் பெற வேண்டிய நிலையா?

George RC  : Kiruba Munusamy  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பெரியாரிய, திராவிட கொள்கைகளை ஆதிரித்து பேசி வரும் நான், பல பெண்கள் பாலியல் குற்றசாட்டிய வைரமுத்துவை ஆதரிப்பது குறித்த ஒரு கேள்வியை பெரியாரியவாதிகளிடமும், திராவிட கழகத்திடமும் கேட்டதால் "பார்ப்பனிய ஆதரவாளர்" ஆகிவிட்டேன். இவ்வளவுதான் உங்கள் பகுத்தறிவு!

 Kalai Selvi : திருமாவளவனை பேச மாட்டாங்களோ? அந்த கள்ள மெளனத்தின் அரசியல் தான் என்ன?பாலியல் குற்றச்சாட்டு திருமாவளவன் மீதும் உண்டு பொதுவெளியிலே தன்நியாயத்திற்க காக போராடின பாதிக்கப்பட்ட பெண்களின் காணொளிகளே உண்டு, அதை ஏன் யாரும் பேசவில்லை

George RC :   இதே அளவுக்கு நீங்கள் பேசினாலும் அவரை இதே அளவுக்கு நியாயப்படுத்தவோ , திராவிட கைக்கூலி என்றோ சொல்ல போவதில்லை.

Kalai Selvi எதிர்க்கின்ற சிந்தனையில் நேர்மை வேண்டும் அளவுகோல் வித்தியாசப்படக் கூடாது. சிந்தனை நேர்மைwற்றவர்களிளது அரசியல அல்ல அது அவதூறு.

 George RC  : i அதை நீங்களும் கைக்கொள்ள வேண்டும். புலிப்பாணியில் துரோகி என்று ஆரம்பிக்க கூடாது.


 Kalai Selvi   :  நான் கூற வே இல்லை எப்போ கூறினேன் நீங்கதான் நான் போட்ட பதிவையும் Delete செய்தவர் (சாவித்திரி கண்ணன் பதிவு) காலச்சுவடு கணையாழி ஜூனியர் விகடன் ஆனந்த விகடன் படித்தவர்களெல்லாம் முற்போக்குகள் என முத்திரை குத்தி தனித் தீவாக & சீமான் காணொளி பார்த்தல்லாம் நான் அரசியல் பேச மாட்டேன் ,

George RC  :  எந்த பதிவை அழித்தேன்?

 Kalai Selvi உங்களுக்கே தெரியும் என் பின்னூட்டத்தை

 George RC :  இப்போதா? பழைய பதிவா?

 Kalai Selvi : இந்த விவாதத்திலே

 George RC :  i நான் எதையும் அழிக்கவேயில்லை. என்னை பற்றி எழுதிய தூஷண வார்த்தைகளை கூட அழிப்பதிலை. விரும்பினால் திரும்பவும் பதிவு செய்யுங்கள்.
 Kalai Selvi தேவையில்லை ஒரு முறை அழித்ததை ?

George RC :  நான் அழிக்கவேயில்லை என்று சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நான் எப்படி ஜநம்ப வைப்பது? உங்கள் மற்ற பதிவுகளை விட்டு அதை மட்டும் அழிக்க, என்னை மடக்க அப்படி என்ன அதில் இருக்கிறது?

 Kalai Selvi : அது வைரமுத்து குறித்த பின்னுன்னூட்டம் உங்களை மடக்க என நான் போடவில்லை உங்களின் நேர்மையற்ற சிந்தனை விமர்சன எதிர் ப்பிற்கு போட்ட பதிவு அது

 George RC :  சரி, அப்படி என் நேர்மையற்ற சிந்தனையை அது எப்படி எதிர்க்கிறது என்று பார்க்க கூடாதா?

Kalai Selvi:  இரண்டு முறை அழித்தீர் அதே பின்னுட்டத்தை, So, இது உங்களது சுவர் உங்கள் உரிமை. இனிமே நான் பின்னுட்டமே இடப் போவதில்லை Bye

George RC Kalai Selvi நான் அழிக்க வேயில்லை என்ற பின்னாலும் நம்ப மறுக்கும் உங்கள் பிடிவாதத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? போட்ட கருத்துக்கள் ஒவ்வாததாக இருப்பின் உள்பெட்டியில் சொல்வேனே தவிர அழிப்பதில்லை. என்னை புரிந்து கொண்டவர்களுக்கு இது தெரியும்!


George RC :  இதை அழிப்பதற்கு அப்படி என்ன இருக்கிறது?

Chandru Kandiah :  kalai selvi why are you hiding your face on Facebook.?

 Nilavinian Manickam :  Chandru Kandiah Firstly, you should have asked this question with George?


 Nilavinian Manickam :  எப்படி இவர்கள் செலக்டிவா கேள்வி கேக்கிறார்கள்.. வைரமுத்துமீது எப்படி ஜார்ஜ் செலக்டிவா குற்றம் சாட்டுறாரோ,அதே போல இவரும் ஜார்ர் அவர்களை முதலில் கேட்க வேண்டிய கேள்வியை விட்டுவிட்டு விட்டு உங்களை மட்டும் நோக்கி அற்புதமான கேள்வியை கேட்டாரே.. அங்கேயிருக்கிறது #நடுநிலை #முற்_போ_ங்கு

 Kalai Selvi   :  கொரோனாவை விட கொடியநோய் புலம் பெயர் புலிஸ்ட்களின் + முற்போக்குகளின் திராவிட ஒவ்வாமை, கலைஞர் ஒவ்வாமை !!

 Kalai Selvi  :  கடைந்தெடுத்த அய்யோகியன் என கவிபேரரசு வை' சிந்தனை நேர்மையற்று விமர்சிப்பதுதான், அதை விட அய்யோக்கியத்தனம்!

Kalai Selvi : திருமாவளவன் மீது & சீமான் மீது 8 பாலியல் குற்றச்சாட்டு வழக்குப் போட்ட கவிதா &விஜயலட்சுமி என்ற பெண்களுக்க்காக வாய திறக்காத பெரியாரிய பெண்ணிய புலி ஸ்ட்கள், பெண்ணிய தலித்திய கம்யூனிச ஈயம் பித்தளை இந்திய, தமிழக புலம் பெயர் முற்போக்குகள் I வழக்கே போடாத சின்மயிககாக மாத்திரம் பொங்கி பிரவாகிப்பதேன் ? வேறென்ன? சிந்தனை நேர்மையற்ற  விமர்சன கள்ளத்தனம். உள்ள மெல்லாம் கள்ளமாக  ஆரிய மாயை,

Krish Saishankar  :தமிழில் கவி என்பது குரங்கையும் குறிக்கும் என்று படித்த ஞாபகம்

Parathan Navaratnam  :வைரமுத்து எவ்வளவு பெரிய கவிஞன் .நாலு பேரை பல வந்தப்படுத்துவதில் என்ன தப்பு. கவிதைக்கு பலவித அனுபவங்கள் முக்கியம் ஜோர்ச்😡அவர் கேட்க போகாட்டி பலவந்தப்படுத்துவார்தானே

Nilavinian Manickam நீங்க என்னவா விளங்கிகிட்டு இருக்கீங்க?

 Nilavinian Manickam  பாலியல்_சீண்டலும்  என்  கருத்தும்...
 
Ravi_Kumar  : பத்திரிக்கையாளர்  அரசியல்  விமர்சகர் திரைத்துறையாளர் நான் பல செக்சுவல் ஹராஸ்மெண்ட் வழக்குகளில் பெண்கள் பக்கம் நின்று போராடுகையில்...வழக்கு முன்னேறும் போது... அவர்கள் ஹராஸ் செய்தவரோடு சமாதானமாய்ப் போனதைப் பார்த்துக் கொதித்திருக்கிறேன்.இம்மாதிரியான 90% வழக்குகள் உள்நோக்கம் கருதிப் போடப்படுபவையே.அப்படி வழக்கும் போடாமல் வைரமுத்துவைத் தூக்கில் போடு என்பதெல்லாம் படு போங்கு. வழக்குப் போடுங்கள். குற்றவாளி என நிரூபியுங்கள்..என்ன தண்டனையோ கிடைக்கட்டும்.அது வரையிலும்..அவர் ஒரு காமக்கொடூரன் செக்ஸ் மேனியாக் என்பதெல்லாம் டூ மச். ***பல உச்ச நடிகர்கள் என்ன வெல்லாம் செய்வார்கள் எந்தெந்த ஹோட்டலில் எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பதெல்லாம் என் காதுக்கு வரும்..நான் அவற்றை எழுதியதில்லை. நடிகனின் நடிப்பை மட்டுமே விமர்சிப்பேன்..லக்‌ஷ்மிகாந்தன் அல்ல நான்.
 ******சினிமாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அங்கேயே கொட்டை போட்ட எனக்கு நன்றாகத் தெரியும்.
 *****நான் பெரும் படங்களில்.. நாயகியைத் தேர்வு செய்யும் இடத்தில் இருந்த போது...உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க வையுங்கள் எனப்..பிற்காலத்தில் பிரபலமான பல நடிகைகள் என்னிடத்தில் கூறியதுண்டு..சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்வேன். உன்னுடைய சொத்தே உன் தன்மானம் தான்..அதை இழந்தே விடாதே.அப்றம் போற வர நாயெல்லாம் உன்ன விடாது என.
*****எந்த விதத் தொடர்பும் இன்றி..Just as a professional சிம்ரன், லைலா, பூஜாகுமார், ஜெயா சீல், ஷ்வேதா ஷெட்டி( மாளவிகா) போன்றோர் நாயகிகள் ஆகக் காரணமாய் இருந்தவன் நான்.. நடிக்க வந்த புதிதில் டிஸ்கோ சாந்தி, பபிதாவுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தவன்..எந்த எதிர்பார்ப்பும் இன்றி. மரியாதை மனதில் இருந்தால் போதும்.. நன்றியைக் கூட எதிர்பார்க்காதவன் நான்...
 *****கத்தி மேல் நடக்கும் வாழ்க்கை அது.கொஞ்சமும் பிசகாமல் நடப்பவன் நான்.என்னுடைய பொறுப்பை என்றும் துஷ்பிரயோகம் செய்ததில்லை.. கொஞ்சம் சபலப் பட்டிருந்தாலும் Trap செய்து மீடூ என்பார்கள்...
 *****நாம் நெருப்பாய் இருந்தால்...அண்ட மாட்டார்கள்.செருப்பாய் இருந்தால்...மிதிக்கத்தான் செய்வார்கள். ரெபெல்ரவி 13/07/2020

 சாவித்திரி கண்ணன்   : 
பார்ப்பனிய குசும்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்!
இந்து தமிழ் திசையில் வைரமுத்து குறித்த புகழ் கட்டுரைகள் பெண்ணியவாதிகளை கொந்தளிக்க வைத்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது! அதில் இருக்கும் அறச்சீற்றத்திற்கு தலை வணங்குகிறேன்!
ஆனால்,மாலன் நாராயணனும்,காலச்சுவடு கண்ணனும் செய்யும் குசும்பு இருக்கிறதே! அந்த வைரமுத்து எதிர்ப்பு பதிவுகளுக்குள் நுழைந்து பின்னூட்டம் இட்டும்,அந்தப் பதிவுகளை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்தும், முடிவில் இந்து நிர்வாகத்தையே ’’வைரமுத்து பற்றிய சிறப்பு பகுதி வெளியிட்டது பெரும் பிழை,இதை நேர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ பதிவிடச் செய்து அதை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டும் அலப்பறை செய்வதற்கு என்ன காரணம்?
வைரமுத்துவின் திராவிட இயக்க சார்பு அரசியல் தானே உங்களை கொந்தளிக்கச் செய்கிறது?
மாலனை கடந்த முப்பது ஆண்டுகளாக அறிந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.பெண்கள் விஷயத்தில் வைரமுத்து நடந்து கொண்டது குறித்து அறச் சீற்றம் கொள்ள தனக்குத் தகுதி இருக்கிறதா? என மாலன் தன் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும்.
வைரமுத்துவின் பாலியல் சீண்டல் தான் உங்கள் கோபத்திற்கு காரணம் என்றால்,அந்தக் கோபம் ஏன் அது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் மற்ற உங்களவாக்களான பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசை மேதைகள் போன்றோர் மீது வரவில்லை? நான் பட்டியல் தரட்டுமா? தாங்குவீர்களா? எவ்வளவு விவகாரங்களைக் கமுக்கமாக அமுக்கிவந்திருக்கிறீர்கள்…!
அவ்வளவு ஏன்? ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன்.
சங்கராச்சாரியார்களான ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திரரும் தங்கள் துறவுக்கு புறம்பாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது குறித்து உங்களுக்கெல்லாம் ஏன் அறச் சீற்றம் வரவில்லை?
கொலை குற்றத்தில் கைதாகி,சிறை சென்று, ’அரசியல் லாபி’ செய்து வெளிவந்த ஜெயேந்திரரிடம் இந்து தமிழ்திசை உள்ளிட்ட பிராமணப் பத்திரிகைகள் அனைத்துமே பண்டிகைகளின் போது அருளாசி உரைகளை வாங்கி போட்ட போதெல்லாம் நீங்கள் அமைதி காத்தீர்களே… எப்படி?
ஒரு கொலைகுற்றவாளியை, ஊர்,உலகறிந்த காமச் சாமியாரை மீண்டும் புனிதராக எந்த கூச்சமும் இல்லாமல் அங்கீகரிக்கும் ஒரு சமுதாயத்தில் வாய்ப் பொத்தி அமைதிகாத்துக் கொண்டு வைரமுத்து மீது கல்லெறிகிறீர்களே..இது எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது.
எந்த ஒரு குற்றம் செய்தவரையும் பிராமணர் என்றால் ஒரு அளவுகோலும், பிராமணர் அல்லாதார் என்றால் ஒரு அளவுகோலும் வைத்துப் பார்க்கும் மனு நீதி தர்மத்தை இன்னும் கூட சூட்சுமமாக செய்கிறீர்களே…? இது நியாயமா?
நீங்கள் பேசும் மனிதநேயம், எழுதும் இலக்கியம்,இயங்கும் தளம் என எல்லாவற்றிலும் பிராமண சமூக நன்மையையே உள்ளீடாகக் கொண்டு இயங்கும் நுட்பமான சாதியவாதிகளாகவும், ஆனால்,வெளித் தோற்றத்திற்கு பொதுமனிதர்களைப் போலவும் நடித்தாலும்,அவ்வப்போது இப்படி வெளிப்படத் தான் செய்கிறீர்கள்!
அடுத்ததாகச் ஜெயமோகன்! இவர் எழுதிய அறம்,இன்றைய காந்தி ஆகிய நூல்களை கொண்டாடியவன் நான்! இவ்வளவு உயர்வான விஷயங்களை பேசவும்,எழுதவும் திறனுள்ள இவர் தன்னை ஒரு அதிகார மையமாக நிலை நிறுத்திக் கொள்ள பார்ப்பனர்களின் நலம் விரும்பியாக சூசகமாக இயங்குகிறார் என்பதே என் வருத்தம்!
இந்து தமிழ் திசையை பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாய்கள் என்றும்,பத்திரிகையாளர்கள் ஆசைத் தம்பியையும்,செல்வபுவியரசனையும் மொண்ணைகள் என்றும் பாய்ந்து கடித்து குதறியுள்ளார். நாடறிந்த ஒரு மிகப் பெரிய இலக்கியவாதி பொதுதளத்தில் தன்னை நிதானமிழந்து இப்படி வெளிப்படுத்தும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது…?
வைரமுத்து எவ்வளவுக்கெவ்வளவு இகழ்வதற்கான காரணங்களை கொண்டுள்ளவரோ, அவ்வளவுக்கு புகழ்பாடவும் தகுதிவாய்ந்த படைப்பாளி தான்! இந்து தமிழ்திசை வைரமுத்துவின் பாலியல் சீண்டல்களை நியாயப்படுத்தி ஒன்றும் எழுதிவிடவில்லை, நீங்கள் கொந்தளிப்பதற்கு? வைரமுத்துவை சற்றே மிகைப்படுத்தி எழுதிவிட்டார்கள். அவ்வளவு தான்!
ஜெயமோகனுக்கு திராவிட இயக்கத்தின் மீதான வன்மம் வைரமுத்துவின் மீதான வன்மமாக மாறிவிட்டது.
நல்ல எழுத்தாளர்களான ஜெயமோகனும், மாலனும், சிறந்த நூல்களைக் பதிப்பித்து கொண்டு வந்திருக்கும் கண்ணனும் திராவிட இயக்க எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணச் சிறையில் உங்களை நீங்களே ஏன் அடைத்துக் கொள்கிறீர்கள்?
வைரமுத்துவும்,திராவிடர் இயக்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பங்களல்ல! பலம்,பலவீனம் இரண்டையும் கொண்டவர்களே! உலகில் யாரும் அல்லது எந்த ஒன்றும் முற்றிலும் வெறுக்கதக்கதல்ல! அப்படி ஒன்றுகூட கிடையாது.
ஒன்றின் பலவீனத்தை மட்டுமே பிரதானப்படுத்தி, பாசிடிவ்வான அம்சத்தை முற்றிலும் புறக்கணிப்பது நியாயமல்ல, போரிடுவதற்கும் ,எதிரியோடு மோதுவதற்கும் கூட ஒரு போர்க்கள தர்மம் என்று ஒன்று உண்டு தானே!
சரி,அதைவிடுங்கள்! குறைந்தபட்ச மானுட தர்மத்தையாவது பின்பற்றுங்கள்!
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: