நக்கீரன் : சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர்
பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி,
விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி,
கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை
கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும்
கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 7.5 சதவீதம் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர்
பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி,
விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி,
கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை
கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும்
கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு
மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
7.5 சதவீதம் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில்
நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக எந்த தகவலும்
வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக