முப்பதுகளில் ஆன்டன்பாலசிங்கம் |
லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகாரனின் கள்ளுக்கடை ஓத்த ரக பேச்சுக்கள்.
அன்ரன்
பாலசிங்கத்தை மதிப்பிட அவரின் சிறுவயது வரலாற்றிலிருந்து தொடங்குவோம். ஒரு
கரவெட்டி கத்தோலிக்க வெள்ளாடிச்சிக்கும் மட்டக்களப்பு சைவக்குருக்களின்
மகனுக்கும் பிறந்த பாலசிங்கம் கத்தோலிக்கராக தாயால் கரவெட்டியில்
வளர்க்கப்பட்டவர். தந்தை சிறுவயதிலேயே பாலசிங்கத்தின் தாயைவிட்டு
பிரிந்துவிட்டார். கரவெட்டி அம்பம் சிறு ஆஸ்பத்திரியில் Mid wife ஆக தொழில்
செய்து கஸ்ரப்பட்டுத்தான் தாயார் பாலசிங்கத்தையும் உடன்பிறப்புக்களையும்
வளர்த்தார். நெல்லியடி St Anthony's church அக்காலத்தில் வெள்ளாள
கத்தோலிக்கர் ஆதிக்கம் மிக்கது. தாயார் வெள்ளாடிச்சி என்றாலும் ஒரு
மட்டக்களப்பானை கட்டியவர் என்பதால் பாலசிங்கம் குடும்பம் வெள்ளாள
கத்தோலிக்க குடும்பங்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டது. பாலசிங்கம் குடும்பம்
தேவாலயத்துக்கு வருவது மட்டுந்தான். இவர்கள் சக வெள்ளாள குடும்ப
நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை.(முக்கியமான இத்தகவலை எனக்கு தந்தது
இப்போது புலம்பெயர்ந்து வாழும் அதே கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த
பத்திரிகையாளர்)
(கரவெட்டி புனித அந்தோனியார்)
இந்த பாரபட்சம்தான் அன்ரன் பாலசிங்கத்தின் பொதுவாழ்வில் பின்னாட்களில் பெருந்தாக்கம் செலுத்தியது.
தேவாலயத்துக்கருகிலுள்ள Sacred Heart பாடசாலையில் அக்கால ஆங்கிலமுல matriculation சாதாரண தரம்வரைதான் பாலசிங்கம் படித்தார்.
வறுமையும்
சமுகப்பாரபட்சமும் குடும்பத்தை கடுமையாகப் பாதித்தது. இளவயதிலேயே
பாலசிங்கம் மதுவுக்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிவிட்டார். சிறுவயதிலேயே
மேற்படிப்பு படிக்காமல் பத்திரிகையாளராக வேலைசெய்ய கொழும்புபோனார். சுய
படிப்பு வாசிப்பு மூலமே புத்திஜீவியானவர் பாலசிங்கம். பாலசிங்கத்தின்
கொழும்பு புத்சிஜீவி நண்பர்களில் ஒருவர் பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக
தத்துவவியல் விரிவுரையாளரான சா.வே. காசிநாதன். மற்றவர் செய்தி என்ற வார
இதழின் ஆசிரியர். பாலசிங்கம் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக
ஆனபின்னரே அவர் வாழ்வில் திருப்புமுனையானது. இடையில் அவர் முதல் காதல்
மனைவி மரணம். இதோடு பாலசிங்கத்துக்கு லண்டன் போகவாய்ப்பு வருகிறது. ஆனால்
இதற்குமுதலே காசிநாதன் கலாநிதிப்படிப்புக்காக லண்டன் போய்விட்டார். தனக்கு
A/L படிப்பு பல்கலைக்கழக படிப்பு என்பன உரிய காலத்தில் இலங்கையில்
வறுமைகாரணமாக மறுக்கப்பட்டதும் கரவெட்டில் இருந்த பாரபட்சமும் அவரை ஒரு
நிரந்தரமான காழ்ப்புமிக்க மனிதனாக்கிவிட்டது. பின்நாட்களில் லண்டனில்
பாலசிங்கம் கலாநிதிப்படிப்புக்கு பதிவுசெய்த வாய்ப்பு வந்தபோதும் அவரது
காழ்ப்பு விலகவில்லை.
யாழ் குடாநாட்டை ஒரு
நாடாக உருவகித்தால் இவர் வளர்ந்த கரவெட்டி ஒரு Province ஆகிறது. யாழ்
நகரம் Cosmopolis. ஒரு provincial பாலசிங்கத்தின் காழ்ப்பிலிருந்து அவரது
Personal Agenda வருகிறது. ஈழ கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் தான்
பெரும்பான்மை என்றாலும் டச்சுக்காலத்திலிருந்து Cosmopolitan களான
அங்கிலிக்கன் மற்றும் ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்களே புலமைசார் செல்வம்சார்
மேட்டுக்குடிகளாக இருக்கிறார்கள். அமெரிக்கன் மிசன் ஆரம்பித்த அப்போது
பல்கலைக்கழகத்துக்கு சமனாக இருந்த வட்டுக்கோட்டை கல்லூரி, உடுவில் மகளிர்
கல்லூரி இவற்றை அடியொற்றி வந்த சீ.வை தாமோதரம்பிள்ளையிலிருந்து வந்த
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்(ஹண்டி பேரின்பநாயகம்), ராஜினி திராணகம, நீலன்
திருச்செல்வம்( இந்து ஆனாலும்) லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் ஹுல் வரையான
நவீன புலமைத்துவ பாரம்பரியத்தில் புலிகளுக்கிருந்த வெறுப்பு பிரபாகரனால்
வந்ததல்ல. பாலசிங்கத்தின் personal Agenda வின் ஆன விளைவு. பாலசிங்கம்
புலிகளின் சிந்தனையில் 1983 ஜூலையின் பின் தாக்கம் செலுத்தமுன் புலிகள்
அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டிய துரையப்பா தியாகராஜா முதலியவர்களுத்தான்
கொன்றார்கள். பாலசிங்கத்தின் பின் தான் புலிகள் St.John's College அதிபர்
ஆனந்தராஜ், சாம் தம்பிமுத்து, ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம்,
கதிர்காமர் போன்றவர்களைக்கொல்கிறார்கள்.
புரியவில்லையல்லவா!
தெளிவாக விளக்குகிறேன். பாலசிங்கம் அசலான ஒரு புத்திஜீவி. தீலிரமான
வாசகர்/படிப்பாளி. லெனினையும் ஸ்ராலினையும் மாவோவையும் தெளிவாகப்புரிந்து
கடந்து இடதுசாரியத்தை புரிந்தவர் பாலசிங்கம் என்பதை அவரது புலி அரசியல்
சாராத கட்டுரைகளின் தொகுப்புமூலம் அறியலாம். அவரது எழுதி சமர்ப்பிக்கப்படாத
கலாநிதி பட்ட தலைப்பையும் ஆராய்ந்து பாருங்கள். சி.சிவசேகரம் போன்ற
கட்டுப்பெட்டி மார்க்சியர் அல்லர் பாலசிங்கம்.
பாலசிங்கம் பற்றி மிகத்தவறான
மதிப்பீடுகள் பத்திரிகையாளர்களிடமுண்டு. அவர் அசலான சுயாதீனமான இடதுசாரி
புத்திஜீவி. ஆனால் தார்மீகமில்லாத மோசமான மனிதர். தன்னை வஞ்சித்த
சமூகத்தில் காழ்ப்புகொண்ட பெரும் Ego கொண்ட மனிதன் அதே சமூகத்தில் தன்னை
அறத்தை அடகுவைத்து நிலைநிறுத்துவதே அவரை இயக்கிய தத்துவம்.
கரவெட்டியில்
அவரை வஞ்சித்த வறுமையையும் பிரதேச ஜாதீய பாரபட்சத்தையும் வென்று 70 களின்
ஆரம்பத்தில் லண்டன் சீமையில் பல்கலைக்கழக மாணவனாக கரையேறிய பாலசிங்கம்
லண்டனில் மறுபடியும் ஒரு பரம வைரியை காண்கிறார். அவர் வேறுயாருமல்ல. யாழ்
வெள்ளாளரும், என்ஜினியரும், கட்டுப்பெட்டி மார்க்சியருமான EROS ரட்ணசபாபதி.
ரட்னா
தன் லண்டன் பலஸ்தீன PLO தொடர்புகளால் ஈழப்புலிபோராளிகளையும் தன் EROS
போராளிகளையும் லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறார். ரட்ணா மார்க்சியத்தை
வெறும் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக மட்டுமே அறிந்தவர். பாலசிங்கமோ
மார்க்சியத்தை தத்துவ வரலாற்றுப்பின்னணியில் மேலும் மேவி அறிந்தவர்.
ரட்னாவுக்கு தன் மேதமையை புரியவைக்கும் அவா பாலாவுக்கு வருவது இயல்புதானே.
தானும் ஏதாவது செய்யவேண்டும். இதன் விளைவுதான் 1979ல் பாலாவின்
இந்தியபயணம்.
தன் பூர்வாங்க புலனாய்வுகளின்
விளைவாக பிரபாகரன் என்ற புலிகளின் தலைவரையே நேரே அணுகி அவரை protege/சீடன்
ஆக்கலாம் என்ற திட்டத்தோடு புதிய ஆஸ்திரேலிய காதல் மனைவியோடு சென்னை
வருகிறார்.
இந்த தருணத்தில் பாலா சிறிது பொறுமை காத்திருந்தால் அவசரப்படாமல் தன்
கலாநிதிப்பட்ட ஆய்வை செய்துமுடித்து ஒரு தத்துவப்பேராசிரியராக
வந்திருந்தால் வரலாற்றில் பாலாவுக்கு நல்ல இடம் வசமாகியிருக்கும்.
பிரபாகரனதும் புலிகளதும் Hegemony கூட வரலாற்றில் இல்லாமல் போயிருக்கும்.
இக்காலத்தில் கொடிகட்டிப்பறந்த சித்தாந்த கைலாசபதியைவிட அசலான புத்திஜீவி
கோட்டைவிட்ட துரதிஸ்ட தருணமிது.
பாலா ஏற்கெனவே
புகைக்கும் மதுவுக்கும் அடிமை. இடையில் ஜேம்ஸ் பாண்டின் "blonde" காதலிகள்
மாதிரியான ஒரு ஓஸ்றேலிய நாட்டுப்புறக்காதலியான அடேல் ஊர்வசி மேனகா ரம்பை
போல அவர் தவத்தை கலைக்க வந்திருப்பதையும் பாலா அறிந்திருக்க
வாய்ப்பிருக்கவில்லை.
(24 வயசு அடேல் குட்டி)
பிரபாகரனை
பாலா சந்தித்த முதல் 1979 பயணத்தில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் அணி
பிரிந்து PLOTE உருவாகியிருக்கவில்லை. ஆனால் பாலாவுக்கு உமாவை
பிடிக்கவில்லை. ரட்ணாவைப்போல உமா ஒரு மேட்டுக்குடி வெள்ளாளன். ஆங்கிலம்
அறிந்த உமா பிரபாகரனைவிட 10 வயது அதிகமான Surveyor. விவாதித்து
கேள்வியெழுப்பும் உமா பாலாவின் Protege ஆக வாய்ப்பில்லை. தலமைப்போட்டியில்
உமாமீது ஊர்மிளாவின் காதல் தொடர்பு பாவிக்கப்படுகிறபோது பாலா பிரபாகரன்
சார்பு எடுப்பதன் காரணம் இதுதான்.
1979 ல்
பிரபாகரனை முதலில் பாலா சந்திக்கிறபோது பிரபாகரனுக்கு இருந்த ஒரே மெடல்
அவர் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றது என்பதுதான். இது வலதுசாரி
அமிர்தலிங்கம் ஏவி நடந்து கொண்டாடிய விருது. துரையப்பா மேட்டுக்குடி
அங்கிலிக்கன்/மெதடிஸ்து வெள்ளாளன் என்றாலும் அவர் ஒடுக்கப்பட்ட தலித்
யாழ்நகர மாந்தரின் விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி
என்பதை நன்கு அறிந்தவர்தான் பாலா.
வரலாற்றில்
பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையிலான ஒத்த உறவை தேடி ஆராய்ந்தபோது
கிடைத்தது ஸ்ராலினுக்கும் போல்செவிக்குகளின் உளவுப்படையின் இரண்டாவது
தலைவன் Vyacheslav Menzhinsky க்குமிடையிலான உறவுதான்.
ஸ்ராலின் மண்டையில் போடாத ஒரேயொரு உளவுப்படைத்தலைவனும் மென்சின்ஸிகிதான்.
பாலாவும் மென்சின்ஸிடகியைப்போல இயற்கை மரணமடைந்தவர். மென்ஸின்ஸிகியின்
வரலாற்றைப்படித்தால் இவருக்கும் பாலாவுக்குமான பல ஒற்றுமைகள் புலப்படும்.
மனிதரைப்பற்றியும் தகவல்களைப்பற்றியும் மிகக் கறாரான மதிப்பீடுகளை
செய்யக்கூடியவராக இருந்தமைதான் மென்சின்ஸ்கியின் மிகப்பெரிய பலம். இதுதான்
பாலாவின் பலமும்.
(Vyacheslav Menzhinsky)
பாலசிங்கம்
ஏறத்தாழ தன்னை ஒரு Tallyrand ஆகவும் பிரபாகரனை நெப்பொலியன் ஆகவும்
உருவகித்து காய் நகர்த்தினார். இது அடிப்படையில் தப்பாக இருந்தாலும் சில
ஒற்றுமைகள் இருந்தன. தப்பு எங்கு இருநததென்றால் வரலாற்றில் முறையாக
இராணுவனாகப் படித்து வந்த புத்திஜீவித்தன்மைகள் கொண்ட நெப்போலியனையே
Tallyrand சுத்தினார். ஈழச்சூழலில் படிக்காத பிரபாகரன் பிச்சைக்காரன்
பாலாவை சுத்தினார். பிரபா பாலா முதல் சந்திப்பு நடக்க லண்டன் பாலா
தம்பதியர் சென்னை வரும்போது சென்னையில் நல்ல ஓட்டலில் தங்க தாம்
வசதியற்றிருந்ததை அடேல் அம்மையார் தன் விடுதலை வேட்கை புத்தகத்தில்
பதிந்துள்ளார்.
(Tallyrand)
பிரபாகரனை
மாற்றுவதற்குபதிலாக பிரபாகரன்தான் பாலாவை உருமாற்றினார். பிழைப்புக்காக
ஒரு இடதுசாரி தத்துவ அறிஞர் வலதுசாரி பாசிஸ்ட் பிரபாகரனின் Theoretician
ஆகவும் பேச்சாளராகவும் மாறினார். உண்மையில் பாலா புலிகளின் அறம்மிகு
ஆலோசகர் என்பதைவிட ஒரு உளவுப்படைத்தலைவர் போலவே இருந்தார். கூட்டமைப்பை
புலிகளின் ஊதுகுழலாக மாற்றிய திட்டத்தை வகுத்து அதனை உளவுப்படைத்தலைவர்
பொட்டனிடம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது பாலாதான்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக