வியாழன், 16 ஜூலை, 2020

கந்தசஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி அதிரடி கைது

கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெற்ற சொற்கள் பலவும் ஆபாசாமான சொற்கள் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே உள்ளது தெரிந்ததே .. இந்த ஆபாசத்தை கறுப்பர் கூட்டம் என்ற youtube தளத்தில் விமர்சித்து ஒரு காணொளி வெளியானது . இது இந்துத்வாக்களுக்கு ஏற்புடையது இல்லையாம் .. எல்லோராலும் பாடப்பட்டு கொண்டிருக்கும் பாட்டின் பொருளை ஒருவர் சொன்னால் அது எப்படி சட்டவிரோதம் ஆகும் ? இது பாஜக . அதிமுக ஆட்சியின் பாசிச போக்கை காட்டுகிறது



Devi Somasundaram : · கந்தர் சஷ்டி கவசத்தில் "சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட" என்ற ஒரு வரி வருகிறது.
சண்டாளர்கள் என்பவர்கள் பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. (10.16. From a Sudra spring in the inverse order (by females of the higher castes) three base-born (sons, apasada), an Ayogava, a Kshattri, and a candala, the lowest of men; ) கந்தர் சஷ்டி கவச விருத்தி உரையில் சண்டாளங்கள் என்பதற்கு "புலைத் தன்மை பொருந்திய பேய்கள்" என்கிறார் திரு அமிர்தம் சுந்தரநாதபிள்ளை அவர்கள்.
புலையர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள்.
அரசமைப்புச் சட்ட பிரிவு 17 தீண்டாமையை கடைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. ( Article 17 of our Indian Constitution says "Abolition of Untouchability Untouchability is abolished and its practice in any form is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law" ) இப்போது கந்த சஷ்டி கவசம் பாடுவது தீண்டாமையை கடைபிடிப்பது ஆகுமா! சட்ட நிபுணர்கள் கருத்து என்ன?
குறைந்த பட்சம் இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்." தோழர் திருநாவுக்கரசன். #BanKanthaShastiKavasam


வெப்துனியா : இந்த நிலையில் இந்த யூடியூப் சேனலுக்கு இந்து அமைப்புகள் உள்பட அனைத்து மத தலைவர்களும், முருக பக்தர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் இந்த  விமர்சனத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்

இந்த நிலையில் இது குறித்து தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கந்த சஷ்டி கவசத்தை  விமர்சனம் செய்த யூடியூப் சேனலில் நிர்வாகி செந்தில் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் கந்தசஷ்டி கவசம் மற்றும் முருகப் பெருமானையும் விமர்சனம் செய்த யூடியூப் சேனலில் பேசியவரும் அவரது மனைவியும் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த நிலையில் அதன் யூடியூப் நிர்வாகியின் பெயரும் கடவுள் முருகனின் பெயர்களில் ஒன்றான செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: