ஞாயிறு, 12 ஜூலை, 2020

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக 26 வயது ஹர்திக் பட்டேல் நியமனம்.. சோனியா அதிரடி முடிவு!


Shyamsundar  - tamil.oneindia.com :அஹமதாபாத்: குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று அதன் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
நாடு முழுக்க மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சியின் பிரிவுகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன் ஒரு படியாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது அந்த கட்சியின் தலைவராக அமித் சாவ்டா உள்ள நிலையில் ஹர்திக் பட்டேல் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.
இவருக்கு 26 வயதுதான் ஆகிறது. இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார்.

தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.v> ஆனால் 2015 குஜராத் கலவர வழக்கில் இவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இவருக்கு குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: