Kiruba Munusamy :
தமிழ்
சமூகத்தை போல மிகவும் பிற்போக்கான, கேடுகெட்ட ஒரு சமூகத்தை நான்
பார்த்ததேயில்லை. ஆடையில் கௌரவத்தை தூக்கி சுமக்கிறது இச்சமூகம். நான்
இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட
நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். குறிப்பாக, இந்த கொரோனா முடக்க காலத்தில், வாரத்திற்கு குறைந்தது நான்கு காணொளி நிகழ்ச்சிகளிலேனும் கலந்துக்கொள்கிறேன். அதில் ஒன்றிரண்டை தவிர பெரும்பான்மை ஆங்கில நிகழ்ச்சிகளே! எனினும், ஒரு நிகழ்ச்சியில் கூட என்ன ஆடை அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
ஏனெனில், குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதையும், பேச்சாளர்களின் பின்புலத்தில் இன, பாலின, ஜாதிய பன்முகத்தன்மையை பின்பற்றுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சூழலைப் பொறுத்தவரை ஜாதியெதிர்ப்பு களங்களில் பார்ப்பனரல்லாதோராக இருந்தால் போதும். பெண்ணுரிமை களங்களில் அதுவும் தேவை இல்லை.
ஜாதியெதிர்ப்பு மேடைகளில் பெண்ணின் பிரதிநிதித்துவத்தை கேள்வி கேட்கும் இப்பெண்கள் தான் ஜாதி-மத-இன ரீதியில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆங்கில சூழலில் பெண்ணியத்தில், மற்ற எல்லா கோட்பாட்டிலும் ஜாதியும் குறித்தும் பேச முடிவதும், ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் தலைமை குறித்து விவாதிக்கப்படுவது, முற்போக்குவாதிகளாக பெருமையடித்துக்கொள்ளும் தமிழ் சூழலில் புரிவது கூட இல்லை.
இப்படி ஆடைக்கட்டுப்பாடு குறித்து ஆங்கிலசூழலில் எவரேனும் கூறியிருப்பாரேயானால், அது பெரும் ஜாதிய-வகுப்புவாத பிரச்சனையாக விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் சமூகத்திலோ அக்கட்டுப்பாடு இருவருக்கும் தான் என்று விவாதத்திற்கு வராமலேயே முடித்துவிட்டார்கள். இது இன்னமும் மோசம்.
நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வெளிநாட்டவரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒரு சர்வதேச சட்ட மாநாட்டில் உலகப்புகழ் பெற்ற சட்ட வல்லுநர்கள், பேராசிரியர்கள் என பலரும் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவருமே நிகழ்ச்சிகளுக்கென்று ஆடை அளவில் மெனக்கெடவில்லை. மிகவும் இயல்பாக வீட்டில் அணியும் ஆடையோடு, கலைந்த தலைமுடியோடு, ஒருவர் அரைக்கால்ச்சட்டையோடு, மற்றொருவர் மனைவியை அருகில் அமரவைத்தும் கூட தான் பேசினார்கள். அவர்களுக்கு இல்லாத ஒழுக்கவாதம் நமக்கு இருப்பதற்கு காரணம் பார்ப்பனிய-ஜாதிய மனநிலையே!
ஜாதியின் அடிப்படையே தூய்மைவாதமும், தூய்மைக்கேடும் தான். அந்த தூய்மைவாதம் தான் முகம் மட்டும் தெரியும் காணொளி நிகழ்ச்சிகளில் கூட வீட்டில் அணியும் உடையை ஏற்க மறுக்கிறது. இதில் ஜாதியமும் வேரூன்றி இருக்கிறது. நாள்தோறும் காஞ்சிவரம் பட்டு அணிபவர்கள் தான் இந்த கட்டுப்பாட்டை விதிப்பவர்கள். உழைக்கும் வர்க்கத்தால் அத்தகைய ஆடம்பர உடைகளை உடுத்த முடியுமா? எங்கள் வீட்டு ஆண்களும் சரி, பெண்களும் சரி, உடுத்திக்கொண்டிருக்கும் லுங்கி, நைட்டியோடு தான் கடைக்கோ, பள்ளியில் பிள்ளைகளை விடவோ செல்வார்கள். இது ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் பண்பாடு. இதை காண்பதற்கு கூட உங்கள் கண்கள் கூசுமானால் அது தான் ஜாதிய மனோநிலை. இது நம் சமூகத்தில் போலியான ஒழுக்கத்தை கட்டமைப்பதைத் தவிர வேறு எந்த நல்லதையும் செய்யவில்லை.
பெண்கள் அரசியல்வாதியாகவோ, பயிற்றுவிப்பவராகவோ, பொதுப் பணிகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால் புடவை மட்டுமே ஒழுக்கமான உடை. அரசியலில், இருக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருப்பினும் வேட்டி தான் தகுந்த உடை. ஆனால், நம் அனைவருக்குமே தெரியும் அவர்கள் அனைவரும் கால்ச்சட்டை, டீ-ஷர்ட், சுடிதார் போன்ற உடைகளை அணிபவர்கள் தான். நாமும் அதே உடைகளை நாள்தோறும் அணிபவர்கள் தான். என்றாலும், ஒரு போலித்தன்மையை ஏற்றுக்கொள்ளும், அங்கீகரிக்கும் ஒரு பொய் சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். இதற்கு, விதிவிலக்கெனில், தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் தான். தேர்தலில் போட்டியிடும் போதும் சரி, பின்னாளில் மக்களவைக்கு செல்லும் போதும் சரி அவரது சராசரி உடையிலேயே இருக்கிறார்.
அதிலும் கூட, கருத்தரங்கம், விவாத நிகழ்ச்சிகளுக்கு வரும் ஆண்கள் வசதியான உடையை அணிந்துக்கொள்வதும், பெண்கள் புடவையோடு இருப்பதும் தான் கண்ணியம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், அப்பெண்களேனும் இப்போலித்தன்மையை உடைப்பார்கள் என்று நானும் எதிர்பார்த்தவண்ணமே தான் இருக்கிறேன். ஆனால், நடந்த பாடில்லை. இப்படியாக ஆடைகளில் போலி கௌரவத்தை தூக்கி சுமக்கும் நாம் தான், கௌரவக் கொலைக்கெதிராக கொந்தளிக்கிறோம்.
இந்த ஒழுக்கவாதமும், போலி கௌரவமும் தனிநபர் மனநிலை மட்டுமல்ல. சமூக மனோநிலையும் கூட. நவீன சமூகத்தில் ஆடை என்பதே ஆண்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது தான். உண்மையில், ஆடைக்கட்டுப்பாடு என்பது ஆணாதிக்கம், பார்ப்பனியம், ஜாதியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக