Thambirajah Jeyabalan :
நேற்று அண்ணனும் தற்கொலை!
பிரித்தானியாவில் கொவன்றி என்ற இடத்தில் பிள்ளையார் கோவிலில் பணியாற்றிய தீபன் ஐயா என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று யூலை 4 தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட லூசியம் சிவன் கோவில் ஐயா கோபி சர்மாவின் சகோதரரே தீபன் ஐயா எனத் தெரியவருகிறது.
ஆலயம் செல்லும் பக்தர்களோடு இருவருமே நல்ல உறவுகளைக் கொண்டிருந்த போதும் இத்துரதிஸ்டமான முடிவு நிகழ்ந்துள்ளது. திருமணமாகாத கோபி சர்மா டிக் டாக் போன்ற சுவாரஸ்யமான பதிவுகளை வெளியிட்டு பலர் மத்தியிலும் அறிமுகமான ஒரு உள்ளுர் பிரபல்யம்.
இவர் தற்கொலை செய்வதற்கான காரணங்கள் இருக்கவில்லை என்றே சொல்லப்பட்டது.
மலேசியாவில் இருக்கும் தன் காதலிக்கு நாடகம் செய்ய முயன்று அது விபரீதத்தில் முடிந்துவிட்டதாக கோபி சர்மாவின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் ஆலயத்தில் கயிறு எடுத்து வந்து கயிற்றைக் கட்டி தொங்கியது அனைத்தும் ஆலயத்தின் சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. இவரை ஆலய நிர்வாகி ஒருவர் கண்டபோது உடல் தரையில் வீழ்ந்து கிடந்தது.
தீபன் ஐயாவும் முன்னர் லுசியம் ஆலயத்தில் பணியாற்றி பின்னர் கொவன்றி பிள்ளையார் கோயிலுக்கு சென்றிருந்தார்.
பிற்காலத்தில் இவர் மதுவிற்கு அடிமையாகி அவருடைய குடிப்பழக்கம் காரணமாக கோயிலில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மினிகப் சாரதியாக இவர் பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் அவருடைய மினிகப் லைசன்ஸ் உம் பறிபோனதை அடுத்தே இத்தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீபன் ஐயாவுக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர்.
புலம்பெயர்ந்த நாடுகளிலும் இலங்கையிலும் கூட தற்போது மதுவுக்கு அடிமையாதல் ஒரு பெரும் பிரச்சினையாகவே உருவாகி வருகின்றது.
இவ்வாறான பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களும் குடும்பங்களும் அடையாளம் காணத் தவறுவதுடன் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்கள் தகுந்த ஆலோசனைகளையும் பெறத் தயங்குகின்றனர். தங்களுக்கு இவ்வாறான ஒரு பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் எவ்வாறு அதற்குத் தீர்வுகாண முடியும். அதனால் சமூகமும் இவ்வாறான பிரச்சினைகளை வைத்து மற்றையவர்களுக்கு முத்திரை குத்துவதற்குப் பதிலாக ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு தயாராக வேண்டும்.
2004இல் மருத்துவ மனநிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அகிலன் கோபலகிருஸ்ணனின் நினைவாக அவருடைய தந்தை கோபாலகிருஸ்ணனை அவருடைய மகனின் சார்பில் ஒரு உளவியல் ஆலோசணை சேவையை உருவாக்க சில நண்பர்களும் ஊக்குவித்தார்கள். மகன் அகிலனின் பெயரில் பல்வேறு சமூகசேவைகளையும செய்துவருகின்ற கோபாலகிருஸ்ணன் 'ஜோதி' என்ற உளவியல் சேவையொன்றை தொலைபேசியூடாகச் செய்து வருகின்றனர்.
தங்களுடைய பெயரைக் குறிப்பிடாமலேயே அனாமதேயமாக ஆலோசணைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி உரையாடலுக்குப் பின் நேரடியாகச் சந்தித்து சிகிச்சை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக