மாலைமலர் : வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை
குறைக்கும் வகையில் குவைத் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதாவால்,
இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தால் பிற நாடுகளை
போலவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், குவைத் அரசு சொந்த
நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
43 லட்சம் பேரை கொண்ட குவைத் மக்கள் தொகையில், வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறரை முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 முதல் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கஇந்தியர்களை போலவே மற்ற வெளிநாட்டினருக்கும் இந்த மசோதாவில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியர்களுக்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் எகிப்தியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக