புதன், 8 ஜூலை, 2020

திருச்சி: `மாணவியின் பெயரை பச்சை குத்தியிருந்த வாலிபர்’ -சிறுமி மரணத்தில் திருப்பம்

எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்சிறுமியின் உடல்;எம்.திலீபன் - தே.தீட்ஷித் - விகடன் : அந்த வாலிபருடன் மாணவி நீண்ட நாள்களாகத் தொலைபேசியில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிந்து கண்டித்துள்ளனர்.
திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி முட்புதர் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்களின் அண்ணன் முறையான இருவரை போலீஸார் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். முறையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லையென்றால் நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று அவரது உறவினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள், 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டின் அருகிலுள்ள பாலத்தின் அடியில் பாதி எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமி உயிரிழப்பிற்கான காரணம் தெரியாததால் டி.எஸ்.பி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.



இந்நிலையில், மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அமரர் ஊர்தி மூலமாக அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு எரியூட்டப்பட்டுள்ளது. சரியான முறையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லை என்றால் நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று அவரது உறவினர்கள் போலீஸாரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.



சிறுமியின் தாய்



சிறுமியின் தாய்
இதுகுறித்து இவ்வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். ``சிறுமி முட்புதரில் சடலமாகக் கிடப்பதாகத் தகவல் தெரிவித்த சிறுமியின் உறவினர்களான இரண்டு பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். இருவரில் இறந்த சிறுமி அண்ணன் முறையான ஒருவருடன் பழக்கத்திலிருந்துள்ளார்.




அத்தோடு மாணவியின் பெயரை அந்த இளைஞர் நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும். அவருடம் நீண்ட நாள்களாகத் தொலைபேசியில் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிந்ததால் சிறுமியைக் கண்டித்துள்ளனர். இதற்குமேல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் முழுமையாகப் பேச முடியும்” என்று முடித்துக்கொண்டனர்.



போலீஸார்



போலீஸார்
இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் பேசினோம். ”எனது விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்து அச்சிறுமையைக் கொல்ல வாய்ப்பில்லை. எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த இருவர் மீதுதான். கொலையா? தற்கொலையா என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வரட்டும் முழுமையாகப் பேசுகிறோம்” என்று முடித்துக்கொண்டனர்.



சிறுமி



சிறுமி
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. `இவ்வழக்கு கொலையாக இருந்தாலும் தற்கொலையாக இருந்தாலும் விசாரணையை தீவிரப்படுத்துவோம்’ என்றிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: