Shalin Maria Lawrence : கடந்த 24 ஆம் தேதி இரவு எனது மொபைல் கீழே விழுந்து இரண்டாக உடைந்து விட்டது.
பின்பு 25 ஆம் தேதி காலை எனது இணையர் மனோஜ் அவர்களின் மொபைலில் எனது முகநூல் கணக்கில் நுழைய முற்பட்டபோது எனது கணக்கு நீக்கப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. எந்த காரணமும் இல்லை.தேதி அளவும் இல்லை.நீக்கப்பட்டு விட்டது .அவ்வளவே.
இப்பொழுது நான் இருக்கும் உடல் மற்றும் மன நிலையில் என்னை அது பெரிதாக பாதிக்கவில்லை.

சரி இந்த கணக்கு போனால் வேறோரு கணக்கு துவங்கி கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.
ஆனால் நேரம் போக போக நண்பர்கள் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கிய பொழுதுதான் இதன் பின்னணியில் இருக்கும் தீவிரத்தை புரிந்து கொண்டேன்.குறிப்பாக வடநாட்டு வலதுசாரி கும்பல் ஒன்று எவ்வளவு ஆராஜக போக்கை கைபிடிக்கிறது என்று தெரிய வந்தது.
சமூக செயற்பாட்டாளர்கள் மேல் இப்படி ஒரு வெறி தாக்குதல்கள் என்பது கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதற்கு பின் பொறுமை கொள்ள முடியாத காரணத்தால் நான் முகநூலுக்கு ஒரு மின்னஞ்சலை அவசரமாக 25 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அனுப்பினேன். அதில் " இந்த முகநூல் கணக்கை கடந்த 10 வருடங்களாக நான் உபயோகித்து வருகிறேன். என் எழுத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத வலதுசாரி விஷமிகள் எனது கணக்கு கும்பலாக சேர்ந்து report செய்து உள்ளனர் இது mob harrasment ல் வருகிறது.மேலும் இது என் அரசியலமைப்பு சட்டம் Article 19 1a ,எனக்கு வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை சுதந்திரதிற்கு எதிரானது .ஆகவே எனது முகநூல் கணக்கை எனக்கு மறுபடி திரும்ப செயல்படுத்தி கொடுக்க வேண்டும்"என்று கேட்டு கொண்டேன்.
ஒரு மூன்று மணி நேரத்தில் முகநூல் ஒரு மன்னிப்போடு கணக்கை திருப்பி activate செய்துவிட்டது.பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக கணக்கை இரண்டு நாட்களுக்கு நான் டிஆக்டிவெட் செய்து வைத்தேன்.
நமக்கு அண்ணலின் அரசியலமைப்பு எப்படிப்பட்ட பாதுக்காப்பு என்று இந்த நிகழ்வு மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.
The Constitution of India is my holy book
Article 15 இங்கே மறுக்க படும்போது Article 19 மிக முக்கியமாக தேவைப்படுகிறது.அண்ணல் அம்பேத்கர் எதையுமே விட்டுவைக்கவில்லை.
மேலும் மூன்று நாட்களாக எனக்கு தைரியத்தையும் ,அன்பையும் பொழிந்து எனக்கு ஆதரவாக இருந்த முகநூல் சொந்தங்கள் என் சகோதர சகோதரிகளுக்கு என் மாறா அன்பு.அத்தனை நெகிழ்ச்சி
பாசிசத்திற்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக