திங்கள், 22 ஏப்ரல், 2019

மதம் ஒரு சவம் என்றார் நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால்பாட்ஷா .. ..

ஆலஞ்சியார் : மதம் ஒரு சவம் என்றார் நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால்பாட்ஷா .. ..
உன் மதம் உயர்ந்ததென்று பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துகிற பேடித்தனத்தை தான் மதம் போதித்ததா..? எல்லா மதங்களும் அன்பை தானே போதிப்பதாய் சொல்லி திரிகிறீர் எப்படி வெடிகுண்டோடு மனிதர்கள் மத்தியில் வெடிக்கிறீர்
தனிபட்ட பகையல்ல நீண்டநாள் திட்டமிட்டு குறிப்பிட்ட ஒரு சாராரை கொல்வது எந்தவகை நியாயம் மதம் தீவிரவாதத்தை தான் சொல்கிறதென்றால் மதம் துறந்து மனிதனாக வா....
நெஞ்சு பதறுகிறதே.. எப்படி இவர்களால் இப்படி செய்ய முடிகிறது .. தாக்குதலில் ஈடுபடுவோரை கவனித்தால் இளம்வயதினராக இருக்கிறார்கள் அவர்களுக்கு பணம், மதத்தின் மீதான வெறி தாக்குதல் நடத்தினால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாமென மூளைச்சலவை செய்து இளைஞர்களை வழிகெடுக்கிறார்கள் குறிப்பிட்ட மதம்(இஸ்லாம்) தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களில் அதிகம் ஈடுபடுகிறது .. நான் கண்டவரை இஸ்லாம் வன்முறையை போதித்தாக அறிவில்லை .. வரலாற்றில் சில விடயங்களில் அதிகார பசிக்காக நடந்ததெல்லாம் மதத்தின் பெயரால் இல்லை .. பிறகு எங்கிருந்து வந்தது
பக்கத்துவீட்டுகாரனை கூட சிநேகத்தை கொண்டு பார் என்கிற மதத்தில் அப்பாவிகளை கொன்று குவிக்க சொல்லியிருக்கிறதா .. சில மதபோதகர்கள் செய்கிற மூளைச்சலவை இ்ஸ்லாத்தின் காவலர்களாக தங்களை எண்ணிக்கொள்கிறவர்கள் உண்மையில் மனிதமற்ற மகாபாவிகள் ..


..
இந்த தாக்குதலை இலங்கையில் உள்ள தேசிய தஹ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமியஅமைப்புதான் என்று சந்தேகிக்கிறோம். இந்த அமைப்புக்கு ஏராளமான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது கொழும்பு குண்டு வெடிப்பை நிகழ்த்திய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின் பெயரை விசாரணைகளின் முடிவில் இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.. சிலர் உடனே இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.. சிலர் முஸ்லிம் அமைப்புகள் செய்கிற செயலுக்கு எப்படி பொறுப்பேற்க முடியுமென சப்பைகட்டாதீர்கள்
இப்படிபட்ட கொடூரசெயலை செய்தவர்களை கண்டித்து பாதிக்கபட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், கொழுப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமென்று குரலை உயர்த்தி சொல்வோம் .. வன்முறை எதற்கும் தீர்வாகாது தோக்கு (துப்பாக்கி) தூக்கியவன் தோக்காலேயே சாவான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது இலங்கை இன பயங்கரவாதத்திலிருந்து மீண்டு மத பயங்கரவாத்தின் பிடியில் கிடக்கிறது .. பச்சிளங்குழந்தை என்ன பாவம் செய்தது தானே அறியாமல் மதத்தின் மீது நின்றது பாவமா
பாவிகளே ..கடவுள் மன்னிப்பாரென்றெல்லாம் நினைக்காதீர் இல்லாத ஒன்றுக்காக இரக்கமின்றி திரியாதீர்
மதம் பிடித்து அலையாதீர்
..
மதம்
மனிதனை மடையனாக்கும்
பிற மதத்தவரின் மீது வன்மத்தை வளர்க்கும்,
மதம் கடந்து மனிதம் வளர்ப்போம்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: