மானசீகன் : " இந்திய ராணுவத்தில் நாம் தமிழர் படை
ஒண்ணு இருக்கு.
அவங்க என்கிட்ட பேசுனாங்க ' அண்ணே நாங்க ஓய்வு பெற்ற பிறகு நெய்தல் படைக்கு பயிற்சியளிப்போம் . கடல் வழியே போய் இலங்கையைக் கைப்பற்றுவோம் ' " என்று சீமான் பேசுகிறார். வானைப் பிளக்கும் கைதட்டல்களோடு தம்பிகளின் விசில் பறக்கிறது .( அவருடைய மேடைகளில் இது ஒரு சாம்பிள்தான் . இது மாதிரி நூற்றுக்கணக்கான அபத்தமான கற்பனாவாதங்களும் , திராவிட எதிர்ப்பரசியல் என்கிற விஷமும் மெல்ல மெல்ல இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது )
எனக்குத் தெரிந்து எந்த அரசியல் கூட்டத்திலும் இப்படி ஓர் அபத்தமான பேச்சை தொண்டர்கள் கண்ணை மூடிக் கொண்டு ரசிப்பதில்லை . சுவிஷேஷக் கூட்டங்களை விட பயங்கரமான கற்பனாவாதம் இது.
தொடர்ந்து சீமானின் பேச்சைக் கேட்கும் போது எனக்குத் தோன்றியது இதுதான். அவர் தெரியாமல் எல்லாம் பேசவில்லை. தெரிந்தே இளைஞர்களை முட்டாளாக்குகிறார் . ( மத்திய உளவுத்துறையின் இரகசிய ஆதரவு அவருக்குக் கண்டிப்பாக இருக்கிறது என்பதே என் ஊகம்)ஆளும் வர்க்கத்திற்கு எதிரான நியாயமான
கோபங்களை இந்த மாதிரி கற்பனாவாதங்களை பேசி மடைமாற்றுகிறார் . அவருடைய நோக்கம் இரண்டுதான்.
1.மக்களின் கோபங்கள் புரட்சியாக மாறி விடக்கூடாது. தேர்தல் அரசியலில் ஒரு வார்டிலாவது வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் துளியளவும் இல்லாமல், ' அண்ணன் வந்தால் எல்லாம் மாறிடும் ' என்கிற போலி நம்பிக்கையை பல ஆண்டுகளாக விதைத்து விதைத்து அவர்களை மந்தைகளாக்கி அலைய விடுகிறார்.
2. இந்து பாசிசத்தையும் , திராவிட இயக்கங்களின் நடைமுறை பிரச்சினைகளையும் ஒரே தட்டில் வைத்து தமிழகத்தின் நிகழ்கால கால அரசியல் களத்தை திராவிட எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்க நினைக்கிறார். அது வெறும் ஸ்டாலின் தொடர்பான பிரச்சினை இல்லை. நூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் நிலைபெற்றிருக்கும் சமூகநீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பொருளாதார நலத்திட்டங்கள், மதச்சார்பின்மை ஆகிய சித்தாந்தங்களை ஒதுக்கி விட்டு ஒரு இனவாத அரசியலை உருவாக்க நினைக்கிற விஷமமான திட்டம் .
அவரைக் குறைத்து எடைபோட வேண்டாம் . டார்ச் லைட்டை விட இது ஆபத்தானது . இமயமலையிலிருந்து 'ஆன்மீக ஜோதி ' வந்தால் டார்ச்லைட்டில் பேட்டரி தீர்ந்து விடும். ஏனென்றால் அது வெறும் ஆர்வக்கோளாறு . இது அரசியல் என்கிற பெயரில் பரவி வரும் விஷம் .இளைஞர்கள் மிக அதிகமாக அவர் வீடியோக்களைப் பார்க்கிறார்கள் . பகிர்கிறார்கள் . சிலர் மட்டுமே கிண்டல் செய்ய ,பலர் அவரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள் . அவர் அரசியலில் ஜெயிப்பதாலோ , ஸ்டாலின் தோற்பதாலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால், அவரை வைத்து உருவாக்கப்படும் இளைஞர்களின் அரசியல் நீக்கம் எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து . அதற்காகவே நான் கவலைப்படுகிறேன்.
இணையத்தில் இயங்கும் திராவிட சிந்தனையாளர்கள் இன்றைய இளைஞர்களிடம் பொறுப்போடும் , பல்வேறு உத்திகளோடும் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது. மிக முக்கியமாக கண்ணை மூடிக் கொண்டு கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்காமல் திராவிட, இடதுசாரி, அம்பேத்கரிய, காந்திய , நேருவிய, இடதுசாரி தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் பிஜேபி எதிர்ப்பைப் போலவே சீமான் விஷயத்திலும் ஒன்றுபட்டு அவருடைய பொய்களையும் , போலி தமிழ் தேசியத்தையும் தக்க தரவுகளுடன் அம்பலப்படுத்துவதும், இளைஞர்களுக்கு முறையான அரசியலை அறிமுகம் செய்வதும் காலத்தின் தேவை .
தன் அரசியலைப் வெளிப்படையாக பேசும் எதிரிகளை விட , நம் அரசியலை திரிபுவாதம் செய்யும் நபர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். அந்த ஆமை நடுவீட்டுக்கு வந்து நம் புத்தக அலமாரியை சத்தமிலலாமல் தின்று கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக