வெள்ளி, 11 ஜனவரி, 2019

2 கோடி கழிப்பறை திட்டத்துக்கு 10 கோடி டன் பிளாஸ்டிக் தேவைப்படுகிறது: ‘பிளாஸ்டிக் மனிதர்’ பேராசிரியர் ஆர்.வாசுதேவன்

பிளாஸ்டோன் கழிப்பறையுடன் ஆர்.வாசுதேவன்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி tamil.thehindu.com இந்தியாவில் 46 லட்சம் கிமீ நீளத்துக்கு உள்ள சாலைகளை பிளாஸ்டிக் சாலைகளாக மாற்ற லாம், மத்திய அரசு திட்டத்தில் 2 கோடி கழிப்பறைகள் கட்ட பிளாஸ் டோன் கற்களை பயன்படுத்தலாம் என்று பிளாஸ்டிக் மனிதர் என்ற ழைக்கப்படும் பேராசிரியர் ஆர்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜன.1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத் தப்படும் 14 வகையான பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பல ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்குகள் தினசரி பறிமுதல் செய்யப்படுகிறது. இவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் தகவல் மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பிளாஸ் டிக் மனிதர் ஆர்.வாசுதேவன் கூறியது: பிளாஸ்டிக் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. பற்பசை டியூப் முதல், பேனா, செல்போன், வீட்டு உபயோக பொருட்களில் இருந்து செருப்பு வரை அனைத்துமே பிளாஸ்டிக்கி னால் உருவானதே. பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக்கை சாலை அமைப்பது, கழிவறை கட்டு வதன் மூலம் எளிதாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் சாலைகள்
சாலை அமைக்க பயன்படுத்தப் படும் ஜல்லி கற்களை 170 டிகிரி வெப்பத்தில் சூடேற்ற வேண்டும். தாரை 160 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். சாதாரண சாலைக்கு 1 கிலோ கல்லுக்கு 50 கிராம் தார் தேவை. பிளாஸ்டிக் சாலைக்கு 5 கிராம் பிளாஸ்டிக், 45 கிராம் தார் போதுமானது.
சூடான கல்லுடன் பிளாஸ்டிக்கை சேர்த்ததும், கல் லின் மேற்பரப்பில் பெயிண்ட் அடித் ததுபோல் பிளாஸ்டிக் ஒட்டிக்கொள் ளும். இந்த கல்லை தாரில் போட்டு கலக்கும்போது, நன்றாக கலந்து விடுகிறது. கல்லின் வலிமை அதிகரிப்பதுடன், தாருடன் பிரிக்க முடியாத அளவுக்கு நன்றாக பிணைந்து கொள்கிறது. சாதாரண மாக 1 கிமீ நீளத்தில், 10 அடி அகல சாலை அமைக்க 10 டன் தார் தேவை. பிளாஸ்டிக் தார் சாலைக்கு 9 டன் தார், 1 டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. 1 டன் தார் குறைவதால் இதற்கான செலவு ரூ.60 ஆயிரம் குறைகிறது.
பிளாஸ்டிக் சாலைகளில் தண் ணீர் கீழே ஊடுருவாது. இதனால் குழிகள் ஏற்படாது என்பதால் 10 ஆண்டுகளுக்கும் குறையாமல் சாலை தரமாக இருக்கும். 2002-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் சாலை களை மதுரை, கோவில்பட்டி உள் ளிட்ட பல இடங்களில் அமைத்து வருகிறோம். இதுவரை சாலைக ளில் குழிகள் ஏற்படவில்லை. இந்தியாவில் 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ சாலை அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் 500 கிமீ அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல வழிச்சாலை கள் 46 லட்சம் கிமீ நீளத்துக்கு உள்ளன. இதை பிளாஸ்டிக் சாலை களாக மாற்ற 100 லட்சம் டன் பிளாஸ்டிக் தேவை. 15 ஆண்டு களுக்கு பராமரிப்பு தேவைப்படாது. இந்தியாவில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மொத்தத்தில் 10 லட்சம் டன் கூட இல்லை. பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தை செயல் படுத்த திட்டமிட்டால் தூக்கி எறியப்படும் ஒட்டுமொத்த பிளாஸ் டிக்கைப்போல் இன்னும் 10 மடங்கு தேவை உள்ளது.
பிளாஸ்டோனில் கழிப்பறை
பிளாஸ்டோன் என்ற பெயரில் டைல்ஸ் கற்களை பிளாஸ்டிக்கால் உருவாக்கியுள்ளோம். ரூ.50 விலை யில் ஒரு கல் தயாரிக்க முடியும். நடைபாதைகள், கழிப்பறைகள் அமைக்க இதை பயன்படுத்தலாம். மத்திய அரசு 2 கோடி கழிப்பறை களை 2018-19-ம் ஆண்டில் கட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு கழிப்பறை அமைக்க பிளாஸ்டோன் அரை டன் தேவை. 2 கோடி கழிப் பறைக்கு 1 கோடி டன் பிளாஸ்டிக் தேவை. ரயில்வே தண்டவாளங் களுக்கு அடியில் அமைக்கப்படும் சிலிப்பர் கட்டைகளை தயாரிக்க பிளாஸ்டோன்களை பயன்படுத்த லாம்.
நிறுவனங்களுக்கு அறிவுரை
பயன்படுத்தப்பட்ட பிளாஸ் டிக்கை மீண்டும் சேகரிப்பதில் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பங்குண்டு. மக்கள் தூக்கி எறியும் பிளாஸ் டிக்கை, மீண்டும் சேகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்துஸ்தான் லீவர், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது குறித்து விவாதித்துள்ளோம். சுய உதவிக்குழுவினரை முழுமையாக ஈடுபடுத்தலாம். இவ்வாறு வாசுதேவன் கூறினார்.
கல்லூரிக்கு காப்புரிமை தந்தவர்
வாசுதேவன் மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரியில் பிளாஸ்டிக் ஆய்வகம் வைத்து உள்ளார். பிளாஸ்டோன் தயாரிப்பு இயந்திரங்கள் வைத்துள்ளார். சாலை அமைக்கும் தொழில் நுட்பத்தை கேட்டு வருவோருக் கெல்லாம் வழங்குகிறார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தனது ஆய்வுக்கான காப்புரி மையை தான் பணியாற்றிய தியாக ராஜர் கல்லூரிக்கு அளித்துள்ளார். இவர் 2003-ல் ஓய்வு பெற்றும் தொடர்ந்து கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்

கருத்துகள் இல்லை: