வெள்ளி, 11 ஜனவரி, 2019

கந்துவட்டி.. ஒரு லட்சத்துக்கு 10 லட்சம் கண்டுகொள்ளாத போலீசார்... சாவின் விளிம்பில் பெண்....!!

தினகரன்:  திருப்புவனம்: வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் கதறி அழுதபடி கூறும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ‘‘கந்துவட்டிக்காரர்களின் கொடுமை, மிரட்டலுக்கு பயந்து நான்  தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்குப்பின் கணவரையும், மகன்,  மகள்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்’’ என அப்பெண் பேசுகிறார். இதுகுறித்த விசாரித்த போது, வீடியோவில் பேசிய பெண் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்த மாரீஸ்வரி (48) எனத் ெதரிய வந்தது.

இவரது கணவர் செந்தில்குமார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை ெசய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்து திருப்புவனத்தில் வசிக்கிறார். மற்ெறாரு மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். கந்துவட்டிக்காரர்களின்  மிரட்டலுக்கு பயந்து ஜன. 6ம் தேதி மாரீஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சென்றுள்ளனர். 5 நாளாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இதையடுத்து, மதுரை ஐஜி அலுவலகத்தில் நேற்று முன்தினம்  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்புவனம் பன்னீர்செல்வம், லாடனேந்தலைச் சேர்ந்த கீதா, பானுமதி, மதுரை சதீஷ்குமார் ஆகியோர் 1 லட்சம் கடன் கொடுத்துவிட்டு 6 லட்சம் வரை வட்டி வசூலித்துள்ளனர். இன்னும் 4 லட்சம் பாக்கி இருப்பதாகக் கூறி வட்டிப்பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என  கூறப்பட்டுள்ளது.

‘கவர்னர் வருவதால் பிஸி’டிஎஸ்பி தகவல்
மானாமதுரை டிஎஸ்பி சுகுமாரனிடம் கேட்டபோது, ‘‘ 11ம் தேதி (இன்று) சிவகங்கைக்கு கவர்னர் வருவதால் அந்த வேலைகளில் உள்ளோம். மதுரை மருத்துவமனையில் உள்ள மாரீஸ்வரியை சந்தித்து அவர் கூறுவது உண்மையா என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
nakkheeran.in - nagendran : "வட்டி மேல் வட்டியும், அசலையும் சேர்த்து செலுத்தியும், இன்னும் வேண்டும் எனக் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் தொந்தரவு செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை." என புகார் கொடுத்து, காவல்துறையினர் உதாசீனப்படுத்த நிலையில், அந்தப் பெண் விஷத்தைக் குடித்துத் தற்கொலை முயற்சி செய்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது.







suicide
suicide
suicide
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலை சேர்ந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்யும் செந்தில்குமாரின் மனைவி மாரீஸ்வரி. இவர் வீடு கட்டுவதற்காக திருப்புவனம் பன்னீர்செல்வம், லாடனேந்தலை சேர்ந்த கீதா, பானுமதி மற்றும் மதுரை சதீஷ்குமார் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.1 லட்சத்தைப் பெற்று, வட்டிக்கு மேல் வட்டி என்ற நிலையில், அசலும் வட்டியுமாக சேர்ந்தி ரூ.6 லட்சத்தினை திரும்ப செலுத்தியிருக்கின்றார். இந்நிலையில், " அனைத்துப் பணமும் செலுத்திய நிலையில் இன்னும் ரூ.4 லட்சம் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். உயிரை விடுவதைத் தவிர வேறுவழியில்லை." என வீடியோவில் பேசி வாட்ஸ் அப்பில் வைரலாக்கி விஷத்தைக் குடித்து  மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்துள்ளார் மாரீஸ்வரி. அதே வேளையில், "தற்கொலை முயற்சி செய்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் முன்னரே புகார் கொடுத்தும், காவல் நிலையத்தார் மெத்தனமாக இருந்ததாலே இந்த முடிவு எடுத்ததாகவும் தகவல்" வெளியானது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

கருத்துகள் இல்லை: