செவ்வாய், 26 டிசம்பர், 2017

பெரியபாண்டியனை முனிசேகர் சுட்டதாக பரவும் தகவல்:

ஆய்வாளர் பெரியபாண்டியனை சக ஆய்வாளரான முனிசேகர்தான் தவறுதலாக சுட்டுள்ளார் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பெரியபாண்டியனை சுட்டது யார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலில் காவல் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டு விட்டு தப்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து, கொள்ளையர்கள் தாக்குதலில் இருந்து தப்பியபோது, பெரிய பாண்டியனின் துப்பாக்கி தவறி விழுந்ததாகவும், அதை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் எடுத்து சுட்டதாகவும் கூறப்பட்டது. கொள்ளையர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியபோது, தவறுதலாக பெரிய பாண்டியன் மீது குண்டு பட்டதாகவும் ராஜஸ்தான் போலீசார் உறுதியாக கூறினர்.
இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனைக் காப்பாற்ற முயற்சித்தபோது, மற்றொரு ஆய்வாளரான முனிசேகர்தான் அவரை தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளதாக சென்னைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும், ராஜஸ்தான் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்தநிலையில் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரியபாண்

கருத்துகள் இல்லை: