செவ்வாய், 26 டிசம்பர், 2017

நீதிபதி ஓ பி சைனி ஏன் 2G ஒதுக்கீடு ஊழலே இல்லை என்கிறார்??

ஆ. ராசா முடிவுப்படி விற்றதை விட ஆடிட்டர் வினோத் ராய் முடிவுப்படி ஏலம் விட்டதில் அரசுக்கு இழப்பு 1365 கோடி ரூபாய். சரி இப்ப எது ஊழல்??
Sivasankaran Saravanan  : நீதிபதி ஓ பி சைனி ஏன் 2G ஒதுக்கீடு ஊழலே இல்லை என்கிறார்??
ரொம்ப சிம்பிள்.
ஆ ராசா தனது அமைச்சரைவயான தொலைதொடர்புத்துறை TRAI விதிமுறையின்படி முதலில் வருபவர்க்கு முன்னுரிமை (FCFS) என்ற அடிப்படையில் 2G அலைக்கற்றையை ரூ 10772 கோடிக்கு விற்கிறார்.
வினோத் ராய் என்ற ஆடிட்டர் ஆ ராசா அப்படி செய்ததால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு என்கிறார். இதை ஏலம் விட்டிருக்கவேண்டும் என்கிறார். எனவே உச்சநீதிமன்றம் ராசா தந்த உரிமங்களை ரத்து செய்கிறது.
பிறகு அதே 2G அலைக்கற்றையை அரசு ஏலம் விடுகிறது. ஏலத்தில் 9407 கோடிக்கு விற்பனை செய்கிறது. அது ராசா விற்பனை செய்ததை விட 1365 கோடி ரூபாய் குறைவு.
வினோத்ராய் சொன்னது போல ஏலம் விட்ட தொகையைவிட FCFS விதிப்படி ஆ ராசா தந்த உரிமங்களே அதிக விலைக்குத்தான் விற்றுள்ளன. ஆக நீங்கள் என்றைக்கு இதை ஏலம் விட்டீர்களோ அன்றைக்கே இது ஊழல் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது என்கிறார். ஒருவேளை ராசா தந்த உரிமங்களை விட அதிக விலைக்கு விற்றிருந்தாலாவது இதில் தவறு நடந்துள்ளது எனக் கருதமுடியும். ஆனால் அதைவிட குறைவாகத்தானே ஏலம் போயிருக்கிறது? இதை எப்படி நீங்கள் ஊழல் என்று சொல்கிறீர்கள் என்பது தான் நீதிபதியின் கேள்வி!

சரி இப்ப நம் சாமானியர்களின் கேள்வி :
ஆ. ராசா முடிவுப்படி விற்றதை விட ஆடிட்டர் வினோத் ராய் முடிவுப்படி ஏலம் விட்டதில் அரசுக்கு இழப்பு 1365 கோடி ரூபாய். சரி இப்ப எது ஊழல்??

கருத்துகள் இல்லை: