திங்கள், 22 மே, 2017

தங்கம் ஜெயித்த தமிழச்சி,, ஆசிய பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

R. Vaishali was at her best in the Blitz event and won seven games and
தங்கம் ஜெயித்த தமிழச்சி: பிரதமர் மோடி வியப்பு!
சென்னையைச் சேர்ந்த ஆர்.வைசாலி, ஆசிய பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் நடந்த ஒன்பது சுற்றுகளில், எட்டு புள்ளிகளைக் கைப்பற்றி, சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.
மொத்தம் நடந்த ஒன்பது சுற்றுகளில், ஏழு சுற்றில் வெற்றி பெற்றும், இரண்டு சுற்றுகளைச் சமன்செய்தும், எட்டு புள்ளிகளை எட்டினார்,ஆர்.வைசாலி. மேலும் அவர் இறுதி சுற்றில் மங்கோலியாவைச்சேர்ந்த உர்ட்சைக் யூரிந்த்யுயாவை எதிர்கொண்டு போட்டியை சமன் செய்தார். ஒட்டுமொத்தத்தில் களத்தில் இருந்த ஈரான் போட்டியாளரை விட, அரைப் புள்ளி அதிகம் பெற்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 'பிலிட்ஸ்' பிரிவில், இந்தியாவுக்காக தங்கம் வென்றிருக்கிறார்,வைசாலி. இதே பிரிவில், பத்மினி ரூட் ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவருக்கு வெண்கலம் கிடைத்தது.
அதேபோல் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட செளம்யா சுவாமிநாதன் 5.5 புள்ளிகளைப் பெற்று 12ஆவது இடத்தையும், மேரி ஆன் கோம்ஸ் கிளாஸிக்கல் செஸ் பிரிவில் 16ஆவது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் ஆடவர் பிரிவில் ஏழுபுள்ளிகளுடன் நான்காவது இடத்தைக் கைப்பற்றினார்.
உலக அரங்கில் இந்தியாவின் பெயரை தங்கம் ஜெயித்து நிலைநாட்டியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த வைசாலி. இதனால், பிரதமர் மோடி வைசாலியின் வெற்றியை ட்விட்டரில் வெகுவாக வியந்து பாராட்டியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: