ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கு... கடும் வரட்சி ...


ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் சுமார் 2000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக ஒகேனக்கல் பாலைவனமாக காட்சியளிக்கிறது, பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளால் ஓடைகளில் ஓடும் தண்ணீரைத் தடுத்து கூட்டுக் குடிநீர் எடுக்கும் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பத்து நாளைக்கு நீர் எடுக்க முடியும். அதன்பிறகு தண்ணீர் எடுக்க வழியில்லை. கர்நாடகவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும், கபினி அணையிலும் சுத்தமாக நீர்மட்டம் குறைந்துவிட்டது. மழைக்கும் வாய்ப்புகள் இல்லை. ஆகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்ட மக்களுக்கு குடிக்கவும், குளிக்கவும், தண்ணீர் சப்ளை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், மூன்று மாவட்ட அதிகாரிகள் பலவிதமான ஆலோசனையில் இருந்து வருகிறார்கள்.

.சென்னையில் வெயில் காலம் வரும் முன்பே சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் ஓர் ஆண்டுக்கான சராசரி மழையின் அளவு 1,200 மில்லி மீட்டர் ஆகும். ஆண்டுதோறும் மழைக்கேற்ப நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
இந்நிலையில், 2015 முதல் 2016 டிசம்பர் மாதங்களில் உள்ள நீரின் அளவை ஒப்பிடும்போது சென்னையிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை குறைந்துள்ளது. இதனால் சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வருவதால் சென்னைவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: