அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்
காளைகளின் வாலை பிடிக்கக் கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் போட்டியில்
இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ்
எச்சரித்துள்ளார்.
அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களிடம் கலெக்டர் மேலும் கூறியதாவது: மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை என அனைவருக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ், 5 தீயணைப்பு வாகனங்கள் அவசரகால உதவிக்காக வைக்கப்பட்டுள்ளன.
காலையில் 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் பங்கேற்க 919 மாடுகள் பதிவு செய்யப்பட்டது. 470 மாடுகள் கட்டவிழ்த்துவிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. அதிக பட்சமாக இன்று மாலை 4 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாநகர கமிஷனர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்ஈடி டிவிக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்ட வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கால்நடைக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதிப்பில்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்று கலெக்டர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாட்டின் வாலைப் பிடித்தவர்கள், கொம்பைப் பிடித்தவர்கள் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக