திங்கள், 6 பிப்ரவரி, 2017

நடராஜன் அனுமதியும்... ரிச்சர்ட் பெயில் பேட்டியும் - நடந்தது இதுதான்!


viaktan :ஜெயலலிதாவிற்கு நாங்கள் அளித்தது உயர்தர சிகிச்சைதான். அவருடைய கால்கள் ஏதும் எடுக்கப்படவில்லை” என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயில் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்து அறுபது நாட்கள் கடந்த நிலையில், திடீரென அவருக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பெயில், தமிழகம் வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாட்களுக்குப் பின்னால் லண்டன் டாக்டரின் பேட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபட்டது ஏன்? என்பன போன்ற பல்வேற கேள்விகளும், சந்தேகங்களும் உலவுகின்றன. சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நேரத்தில், பெயில் வருகையும், அவரது பேட்டியும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் கணவர் நடராஜன், பிப்ரவரி 5-ம் தேதி அன்று இரவு சென்னை கிரிம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். சசிகலாவை அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்த பின்னர் திடீரென்று நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அவர் அப்போலோவில் அட்மிட் செய்யபட்டதும் அப்போலோவின் முக்கிய மருத்துவக் குழுவினர்தான் நடராஜனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில்தான் சென்னைக்கு ரிச்சர்ட் பெயில் வந்து இருக்கும் தகவலை நடராஜனிடம் சொல்லியுள்ளனர். அவர் மூலம் போயஸ்கார்டனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடராஜனின் சாணக்கிய மூளையைப் பயன்படுத்தி, பெயில்-யை வைத்தே பேட்டி கொடுக்கச் செய்தால், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும் என்று கணக்கு போட்டார் நடராஜன். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா பல உண்மைகளை மறைப்பதாக, தமிழகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சசிகலாவும் இதுகுறித்து எதுவும் வாய் திறக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என கணக்கு போட்டுத்தான் நடராஜன், இந்த ஐடியாவை பிரதாப் ரெட்டி காதுக்கு கொண்டுசென்றார். பிரதாப் ரெட்டியும், ரிச்சர்டு பெயில்-விடம் இதுகுறித்துப் பேச “நோ ப்ராப்ளம். நான் ரெடி” என்று பீலே தெரிவித்த தகவல், நடராஜனுக்கு  தெரிவிக்கபட்டது.
தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலர் அவசரமாக அப்போலோவிற்கு வருகை தந்தார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு ஆலோசனையில் இறங்கினார்கள். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் இருந்துள்ளார்கள். அதன் பிறகு பத்துபேர் கொண்ட மருத்துவக் குழுவோடு ரிச்சர்ட் பெயிலுடன் சந்திப்பு நடைபெற்றது. அரசுத் துறை சார்பில் இந்தப் பேட்டி கொடுக்கப்படுவதால், அனைத்து ஊடகங்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கபட்டது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன், பெயிலிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன பேசவேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? போன்ற விவரங்களை வகுப்பாக எடுத்துள்ளார்கள்.  மருத்துவர் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் உடன் இருப்பார் என்றும் தெரிவிக்கபட்டது. இந்த மீட்டிங் விவரங்கள் அனைத்தும் நடராஜனுக்கு உடனடியாகத் தெரிவிக்கபட்டது.
ஜெயலலிதா மரணம் அடைந்த விவகாரத்தில், சசிகலா மீதான மக்களின் இமேஜ் அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டு இருப்பதால் அதனைத் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நல்வாய்ப்பாக பெயில் வருகை இருந்ததால் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார் நடராஜன்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டாக்டர் பெயில், “ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகி்ச்சைதான் அளிக்கபட்டது. அவர் என்னோடு பேசினார். எனது குடும்பத்தைப் பற்றி கேட்டறிந்தார். அவருக்கு இதயத்தில் முடக்கம் ஏற்பட்டதால்தான் மரணம் சம்பவித்தது. டிசம்பர் 5-ம் தேதி அன்றுதான் ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா கால்கள் ஏதும் அகற்றப்படவில்லை. 'எம்பார்மிங்' செய்யபட்டது உண்மைதான். ஜெயலலிதாவின் மருத்துவ செலவு 5.5 கோடி ரூபாய் ஆனது" என்று தமிழக அரசு எதிர்பார்த்தது போன்றே பேசினார்.
பெயிலிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்  பாலாஜிதான் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தார். பல கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்களே குறுக்கிட்டுப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இந்தப் பேட்டியால் சசிகலாவின் இமேஜ் உயர்ந்து விடும் என்று அவரது உறவினர்கள் நினைக்கிறார்கள். பழி சொல்லில் இருந்து தப்பிக்கத் தான் இந்தப் பேட்டி

கருத்துகள் இல்லை: