புதன், 11 மே, 2016

பிரேமலதா தொடர்ந்து வைகோவை புறக்கணிக்கிறார்--------- இருக்காதா?

தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ மீது தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோபமாக இருப்பதால் திருச்சி மாநாட்டை புறக்கணித்துள்ளார்.வைகோ தேர்தலில் போட்டியிடாமல் கடைசி நேரத்தில் பின்வாங்கியது கூட்டணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என விஜயகாந்த் கூறினார். ஆனால் விஜயகாந்தின் கோரிக்கையை வைகோ நிராகரித்தார் இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக மக்கள் நல கூட்டணியில் நீடித்து வருகிறது. பல கட்சிகள் தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவமாய் தவம் இருந்தது. ஆனால் வைகோவின் பேச்சை கேட்டு கட்சியினரின் எதிர்ப்பையும் சம்பாதித்து இந்த கூட்டணிக்கு வந்தார் விஜயகாந்த். ஆனால் விஜயகாந்தின் பேச்சை வைகோ இந்த விஷயத்தில் கேட்காமல் போனது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது


இதனால் விஜயகாந்த் வைகோ மீது அதிருப்தியில் இருந்தார். விஜயகாந்தை சமாதானப்படுத்தவே வைகோ திருச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜயகாந்த் கூட்டணி கட்சி தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக இந்த மாநாட்டுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார்.">ஆனால் பிரேமலதா இந்த மாநாட்டை தற்போது புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் இந்த மாநாட்டுக்கு வந்தாலும், வைகோ மீதானா அதிருப்தி மாறவில்லை என்பதை பிரதிபலிப்பதாகவே பிரேமலதாவின் இந்த புறக்கணிப்பு உள்ளது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: