வியாழன், 12 மே, 2016

மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு... 15 வயது சிறுவன் சாதனை


மெக்சிகோசிட்டி, அமெரிக்க கண்டங்களில் மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அதிலும் மாயன் இன மக்கள் மிகுந்த நாகரீகத்துடன் இருந்து வந்தனர். கட்டிட கலைகளிலும் அவர்கள் சிறப்புற்று இருந்தார்கள். பழங்குடியின மக்கள் பெரும்பாலானோரை அழித்துவிட்டுதான் அங்கு ஐரோப்பியர்கள் குடியேறினார்கள்..15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின 
மாயன் காலத்து மக்கள் நகரங்கள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் அவர்களின் 5 பெரிய நகரங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காடு உள்ளது. அங்கு மாயன் காலத்து நகரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் 80 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமீடு, 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இதை 15 வயது சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான். இந்த சிறுவனது பெயர் வில்லியம் காதுரி. கனடாவில் கியூபெக் நகரை சேர்ந்தவன்.

மாயன் மக்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொண்ட அவன், அவர்களது நகரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கூகுல் உலக புகைப்படம் மற்றும் கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து இந்த நகரத்தை அவன் கண்டுபிடித்துள்ளான். மாயன் காலத்து மக்கள் கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900-ம் ஆண்டு வரை சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள் கூறுகின்றன.

மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு மாயன்கள் நிர்மானணித்தனர் .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின

கருத்துகள் இல்லை: