வெள்ளி, 11 மார்ச், 2016

பிரதமர் மோடி ஸ்ரீ ஸ்ரீ ரவியின் நிகழ்ச்சிக்கு வருகை...மழை அட்டகாசம் PM Modi arrives at Sri Sri Ravi Shankar's WCF despite rain threatening to dampen ..

உலக கலாச்சார விழா இன்று மாலை தொடங்கியது. துவக்க உரை நிகழ்த்துவதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஆனால் தற்போது அங்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளதால் தொடக்க விழா பாதிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் பாலித்தீன் கவர்களால் தங்களை மூடியப்படி மைதானத்தில் அமர்ந்துள்ளனர்.   டெல்லியில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாச்சார விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டுள்ளார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் இன்று முதல் 13–ந் தேதிவரை, ‘உலக கலாச்சார திருவிழா’ நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தில் திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்காக, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ‘யமுனை நதியை காப்போம்’ என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, திருவிழாவுக்கு தடை விதிக்க மறுத்தது. அதே சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, விழா தொடங்குவதற்கு முன்பு, ரூ.5 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


ஆனால், ஒருபைசா கூட அபராதம் செலுத்த மாடோம் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அபராத தொகை ரூ.5 கோடியை செலுத்த பசுமை தீர்ப்பாயத்திடம் 4 வாரம் அவகாசம் கேட்டது வாழும் கலை அமைப்பு. பின்னர் ரூ.25 லட்சத்தை இன்றே செலுத்திவிட்டு, மீதி தொகையை 3 வாரங்களுக்குள் செலுத்தும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தொகையை செலுத்துவதாக வாழும் கலை அமைப்பின் வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உலக கலாச்சார விழா இன்று மாலை தொடங்கியது. துவக்க உரை நிகழ்த்துவதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஆனால் தற்போது அங்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளதால் தொடக்க விழா பாதிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் பாலித்தீன் கவர்களால் தங்களை மூடியப்படி மைதானத்தில் அமர்ந்துள்ளனர்.

இந்த விழாவிற்காக டெல்லி அரசு சிறப்பு மெட்ரோ ரெயில்கள், பேருந்து வசதிகள் செய்துள்ளது. மேலும் 6000 போலீசார், 1500 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.   maalaimalar.com

கருத்துகள் இல்லை: