செவ்வாய், 8 மார்ச், 2016

நாசிக் சிவன்கோவிலில் பெண்கள் நுழைவு போராட்டம்....திரியம்பக தீஸ்வரர்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பாகேஸ்வரர் கோயில் கருவறை சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரி பெண்கள் அமைப்பினர் இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர் . இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாசிக்கில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற திரிம்பாகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் பல நாட்களாக பெண்கள் அனுமதி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர் . இன்று சிவராத்திரி நடக்கவிருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில் இந்த கோயிலில் நுழைய அனுமதி வேண்டும் என பெண்கள் இன்று பேரணியாக கோயில் நோக்கி புறப்படவுள்ளனர். இது குறித்து பெண்கள் அமைப்பு நிர்வாகியான டுருப்தி தேசாய் கூறுகையில்; அரசியலமைப்புக்கு எதிரான செயல்களில் நாங்கள் ஈடுபடவில்லை. பெண்களின் உரிமையைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம் .
சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில் இது போன்ற நிலை கவலை அளிக்கிறது என்றார்.

கடந்த ஜனவரி மாதம் சிங்னாபூரில் உள்ள சனி பகவான் கோயிலில் பெண் பக்தர்கள் நுழைய முயன்றபோது பதட்டம் நிலவியது. இது போல் இன்றும் ஏதும் வன்முறை ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: