மங்கையற்கரசி லண்டனில் மறைவு :
கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள இரங்கல்:
’’தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.
கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.
தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் nakkheeran.in வியாழன், 10 மார்ச், 2016
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் மறைவு...கலைஞர் இரங்கல்...
மங்கையற்கரசி லண்டனில் மறைவு :
கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள இரங்கல்:
’’தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.
கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.
தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் nakkheeran.in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக