புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு
வழக்கில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., பொதுச் செயலர்
அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மனு சமர்ப்பிக்கப்பட்டதற்கான
காரணங்களை குறிப்பிட்டார்.அம்மனு தாக்கல் செய்ததற்கான காரணங்கள் அடங்கிய மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.b>அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகா ஐகோர்ட், அத்தீர்ப்பை ரத்து செய்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டிய அம்சங்கள்:
* குற்றம் சாட்டப்பட்ட நால்வரும், கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் மீது, கர்நாடகா அரசைபிரதிவாதியாக சேர்க்காமல் முடிவு செய்யலாமா?
* குற்றம்சாட்டப்பட்டவர் பெற்ற, 13.5 கோடி ரூபாய் கடனை, கர்நாடகா ஐகோர்ட் தவறாக கணக்கிட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார்; அந்த உத்தரவு நிலைக்கத்தக்கதா?
* கணக்கில் உள்ள தவறுகளை சரிசெய்தால், வருவாய்க்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி ரூபாய். * இது, வருவாயை விட, 76.70 சதவீதம் அதிகம்.
* ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 77 லட்சம் ரூபாய் தொடர்பான, சி.பி.ஐ.,யின் வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த தொகையை, வருவாயாக கருதலாமா?
* இக்காரணங்களால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு, சிறப்பு கோர்ட் அளித்த, நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை விதிக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக