சனி, 23 ஜனவரி, 2016

அரியானாவில் சீனா 6750 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்..குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்

அரியானா மாநிலத்தில் 6750 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு சீனாவைச் குறிப்பாக, வாண்டா குழுமம், சீனா லேண்ட் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், செட்.டி.இ உள்ளிட்ட பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியாவின் அரியானா மாநிலம் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையிலான குழு சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்துள்ளது. ஷாங்காயில் தொழிலதிபர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில், பேசிய முதலமைச்சர் கத்தார், அரியானாவில் தற்போது தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டி, முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜவுளி, ஜெனரல் என்ஜினீயரிங், வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர சீன நிறுவனங்கள் அரியானா மாநிலத்தில் சுமார் ஒரு பில்லியன் டாலர்களை (சுமார் 6750 கோடி ரூபாய்) முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

வரும் மார்ச் மாதம் குர்கானில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

சீனாவின் முன்னணி நிறுவனங்கள் பல அரியானாவில் தொழிற்பூங்காக்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்கவும் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாக அரசு தெரிவித்துள்ளது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: