வெள்ளி, 22 ஜனவரி, 2016

செம்பரம்பாக்கம் ஏரி பிரச்னை எதிர்க்கட்சிகள் சொல்வதெல்லாம் சுத்த பொய்! இதயதெய்வம்........பன்னீர்செல்வம்!

இந்த உண்மைகளை சொல்ல இத்தனை நாட்களா? அடுத்த நாளே சொல்ல வேண்டாமா?சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த,
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, சட்டசபையில் நேற்று, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.கற்பனை குற்றச்சாட்டு: அப்போது, அவர் கூறியதாவது:
'செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. திடீரென, 2015 டிச., 1ம் தேதி இரவு, மிக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான், அடையாறில் பெருவெள்ளம் ஏற்பட்டு, சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் திறப்பது தொடர்பாக, முதல்வரின் உத்தரவு கிடைக்க தாமதம் ஏற்பட்டது' என, பல்வேறு கற்பனை குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.    மழை ஆரம்பிக்கிற முன்னாடி சைதை துரைசாமி, 500 கோடியில மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது நு சொன்னாரு, இப்ப பன்னீர் செல்வம் சட்ட சபையில 29000 கன அடி நீர் தான் திறந்து விட பட்டது னு சொல்றாரு. 500 கோடி செலவு செய்தும் இவ்வளவு உயிர் சேதம் ஆகி இருக்கு னா, அப்ப என்ன வேலை செய்திருக்கிறார்கள் னு தெரியல, ஆக 500 கோடி தேர்தல் செலவுக்கு


செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்தும், வெள்ளம் குறித்தும், அரசு மீது, டிச., 9ம் தேதி வரை யாரும் குற்றச்சாட்டு சொல்லவில்லை.ஏனெனில், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழை காரணமாக, அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது என்பது, எல்லாருக்கும் தெரிந்த உண்மை . என்பதால் தான், எந்த குற்றச்சாட்டையும், யாரும் வைக்கவில்லை
டிச., 9ம் தேதி, ஒரு ஆங்கில நாளிதழில், பரபரப்பு செய்திக்காக, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டது குறித்து, ஒரு அவதுாறான செய்தி வெளியிடப்பட்டது. எனவேதான், அந்த நாளிதழ் மீது, அவதுாறு வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த செய்தியை பார்த்து, அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க.,வினரும், இதர எதிர்க்கட்சிகளும், இது குறித்து பேசத் துவங்கினர்.

யாரும் உத்தரவிடுவதில்லை: செம்பரம்பாக்கம் ஏரி, நீர்ப்பாசன ஏரி அல்ல; குடிநீர் ஏரி. அதை திறக்க, எந்த உத்தரவும் யாரும் இடுவதில்லை. அதேபோல், பொது மக்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்க வில்லை என்பதும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப் படவில்லை என்பதும், தவறான கருத்து

.'பெருமழைக்கு முன்னரே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீரை வெளியேற்றி, நீர் இருப்பை, 75 சதவீதமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தான் வெள்ளம் ஏற்பட்டது' என்றும், தவறான குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்
.'சைதாப்பேட்டை தொகுதியில் ஓட்டு கேட்டு, அ.தி.மு.க.,வினர் நுழைய முடியுமா' என, சட்டசபையில், தி.மு.க.,வைச் சேர்ந்த துரைமுருகன் வீரவசனம் பேசிய பிறகும், அமைச்சர் பன்னீர், இந்த விளக்கத்தை தராமல் இருப்பாரா என்ன... 'விரைவில், சட்டசபை தேர்தல் வரப்போகுது, 'சீட்' வாங்கணும், அமைச்சராகணும் என்பது அவருக்கு தெரியாதா' என, கிண்டலடித்தனர், கம்யூ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர். >பெரும் உடைப்புக்கு வழி வகுத்தனர்'
பன்னீர் செல்வம் மேலும் கூறியதாவது: கடந்த, 1999ல், தி.மு.க., ஆட்சியில், புழல் ஏரி உடையக்கூடிய நிலையில் இருந்த போது, எவ்வாறு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது என, கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், 1999 மார்ச்சில் எவ்வித மழையும் பெய்ய வில்லை. சிறு கசிவு ஏற்பட்டபோது, ஒரு மாதம் நடவடிக்கை எடுக்காமல், பெரும் உடைப்பிற்கு அவர்கள் வழி வகுத்தனர். அதற்கான காரணத்தை, இப்போதாவது கருணாநிதியும், ஸ்டாலினும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: