வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பணத்தாசையால் சிலைதிருட்டில் ஈடுபட்டேன்! இயக்குனர் சேகர் வாக்கு மூலம்

பிரபல சினிமா பட இயக்குனர் வி.சேகர் பஞ்சலோக சாமி சிலைகள் கடத்தல் தொழிலில் இறங்கியது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக் உள்ளிட்டோர் நடித்த 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் வி.சேகர். 'திருவள்ளுவர் கலைக்கூடம்' என்ற பெயரில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி 'குடும்ப இயக்குனர்' என்ற தகுதியை பெற்றிருந்தார்.அவர் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தியாக போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவருடன் சிலை கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி என்பவர் போலீசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்:  விபூதி குங்கும வேஷத்தில ஒன்னும் குறைச்சலில்லை.. கலாசாரம் பேணும் படங்களை எடுப்பவர்கள் திருடர்களாக இருப்பது அதிசயமா?..ம்ம்ஹூம் 


என் சகோதரர் கருணாகரன் சென்னையில் அரசு அச்சக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சினிமா துறையில் நண்பர்கள் அதிகம். சினிமா படப்பிடிப்புகளில் 'லைட்மேன்' உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட ஜெயக்குமார் பட தயாரிப்பு மேலாளர் தனலிங்கம் மற்றும் சபரீசன் தமீம் சண்முகம் விஞ்ஞானி ஜாய்சன் முஸ்தபா ஆகியோர் என் சகோதரரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் சென்னை கே.கே.நகரில் 'திருவள்ளுவர் கலைக்கூடம்' என்ற பெயரில் சினிமா படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த இயக்குனர் வி.சேகருடன் நண்பர்களாக இருந்தனர்.அதில் ஜெயக்குமாருக்கு சிலை கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. சிலைகளை கடத்தினால் கோடிகளை குவிக்கலாம் என வி.சேகரிடம் ஆசை காட்ட அவரும் பண கஷ்டத்தில் இருந்ததால் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தி மும்பையில் உள்ள வியாபாரிகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த வி.சேகர் முடிவு செய்தார்.

அதற்காக மும்பை வியாபாரிகள் சென்னையில் போட்ட ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார்; கடத்தலுக்கான சதி திட்டத்தையும் தீட்டி கொடுத்தார். சர்வதேச சந்தையில் சோழர் கால சிலைக்கு 'கிராக்கி' அதிகம். அதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோழர் கால சிலைகளை தேடி அலைந்தோம்.

ஒருநாள் என் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோவில் பஞ்சலோக சிலைகளின் படங்களை பார்த்தார். உற்சாகம் அடைந்த அவர் என்னையும் என் சகோதரர் கருணாகரன், மாரிஸ்வரன், விஜயராகவன், சண்முகம், சபரீசன் ஆகியோரையும் அந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதுபோல் அழைத்து சென்றார்.

நான் பூஜாரியிடம் பேச்சு கொடுக்க சிலைகளை அவர்கள் நோட்டமிட்டனர். அதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் பையூர் வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் அதே ஊரில் உள்ள ஆதி
கேசவ பெருமாள் கோவில் சிலைகளை நோட்டமிட்டு அதை படம் எடுத்து வந்து இயக்குனர் வி.சேகரிடம் காட்டினோம். அவரும் 'ஓகே' செய்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 6 மற்றும் 10ம் தேதிகளில் நானும் கருணாகரனும் காரில் உட்கார்ந்து கொள்ள சண்முகம் விஜயராகவன் மாரிஸ்வரன் ஆகியோர் இரவு 11:30 மணியளவில் கையுறை இரும்பு கட்டர் உதவியுடன் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் பார்வதி, ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு பெருமாள் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட எட்டு சிலைகளை கடத்தி வந்தனர்.

அதற்காக வி.சேகர் மூலம் ஜெயக்குமார் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை சண்முகம் உள்ளிட்டோருக்கு கூலியாக கொடுத்தேன். தங்கக்காசு, வெள்ளிப் பொருட்களை அவர்கள் பிரித்துக்கொண்டனர். சிலைகளை திருவண்ணாமலையில் உள்ள என் வீட்டிற்கு காரில் கடத்தி வந்தோம். சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நான் 'பத்திரிகை நிருபர்' அடையாள அட்டையை காட்டி செய்தியாளர் சந்திப்புக்கு சென்று வருவதாக கூறி தப்பினோம். அப்போது போலீசார் சோதனையிட்டு இருந்தால் அன்றைக்கே மாட்டி இருப்போம்.

அதன்பின் சிலைகளை சென்னைக்கு கொண்டு வந்து இயக்குனர் வி.சேகரிடம் ஒப்படைத்தோம்; 'வெரிகுட்' என்றார். ஒரு மாதம் அந்த சிலைகள் திருவள்ளுவர் கலைக்கூட அலுவலகத்திலேயே வைத்து வியாபாரம் பேசினார்.பேசியபடி சிலைகளை வி.சேகரால் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் சிலைகளை ஜெயக்குமார் மேற்கு மாம்பலத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவன அதிபர் ஒருவரிடம் ஒப்படைத்தார். அவராலும் சிலைகளை விற்க முடியவில்லை.

இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள தனலிங்கம் வீட்டிற்கு ஆட்டோவில் சிலைகளை எடுத்த சென்றபோது தான் போலீசில் தனலிங்கம் மாட்டிக்கொண்டான்.அவன் ஜாமினில் வெளிவந்த பின் அவனை ஜெயக்குமார் மற்றும் வி.சேகர் ரகசிய இடத்தில் சந்தித்து பணம் கொடுத்து தங்களை காட்டி கொடுத்துவிட வேண்டாம் என தெரிவித்தனர்.

ஆனால் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் எங்களை பற்றி அவன் போட்டு கொடுத்ததால் போலீசார் எங்களை நெருங்கினர். நான் அப்ரூவராக மாறினேன். வி.சேகர் தனலிங்கம் கருணாகரன் தவிர ஜெயக்குமார் உள்ளிட்டோர்தலைமறைவாகி விட்டனர்.இவ்வாறு மாலதி தெரிவித்துள்ளார்.

இ.ஓ.க்கள் அலட்சியம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோவிலில் சிவன் பார்வதி சிலைகள் திருடுபோன பின் பிப்ரவரி 17ம் தேதி நடந்த சிவராத்திரி விழாவிற்கு 10 நாட்கள் முன் 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட சிவன் மற்றும் பார்வதி உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஆனால் காணாமல் போன சிலைகளின் படமோ ஆவணமோ கோவில் செயல் அலுவலரிடம் இல்லை. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என செயல் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தபோதிலும் செயல் அதிகாரிகளான இ.ஓ.க்கள் சிலைகளை ஆவணப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சிலை கடத்தப்பட்ட சமயத்தில் செயல் அலுவலராக இருந்த கருப்பையா கூறுகையில் ''நான் மதுராந்தகம் வட்டத்தின் செயலர் அலுவலர். ஆறு மாதங்களாக ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தின் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தேன். அதனால் கோவில் சிலைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முடியவில்லை'' என்றார்.

'பணத்தாசையால் சீரழிந்துவிட்டேன்':சினிமா பட இயக்குனர் வி.சேகர் போலீசாரிடம் அளித்த
வாக்குமூலம்:சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதன்படியே ஆபாச வசனமின்றி குத்துப்பாட்டு இல்லாமல் 17 படங்கள் எடுத்தேன். சினிமா தயாரிப்பில் இறங்கி கடனில் மாட்டிக்கொண்டேன்.மேலும் கூடா நட்பின் காரணமாக பணத்தாசை ஏற்பட்டு சீரழிந்துவிட்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளா தினமலர்.com 

கருத்துகள் இல்லை: