ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

குரங்கின் கையிலிருந்து தவறி குளத்தில் விழுந்த குழந்தை! வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தை....ராஜஸ்தான்

குரங்கு தொல்லைக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற ஒரு குரங்கு, கைதவறி தண்ணீர் தொட்டிக்குள் அதை நழுவவிட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நீருக்குள் மூழ்கிய அந்த குழந்தை மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தது. இங்குள்ள டவுசா மாவட்டத்தில் உள்ள ரசீத்புரா கிராமத்தில் உள்ள வீட்டின் உள்ளே நேற்று நுழைந்த ஒரு குரங்கு, கட்டிலின் மீது தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரி என்ற இரண்டு மாத கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடியது.


இதைக் கண்டு பதறிப்போன குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் அதை விரட்டிக் கொண்டு ஓடினர். அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் மீது விறுவிறுவென ஏறிய குரங்கு, குழந்தையை தனது வயிற்றின் அடிப்பகுதியில் வைத்து, இருகைகளால் அணைத்தபடி மரத்துக்கு மரம் தாவிக்குதித்து ஓடியது.

ஓரிடத்தில் குரங்கின் பிடியில் இருந்து நழுவி, கீழே விழுந்த யோகேஸ்வரி அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. நீரில் மூழ்கி மூச்சுத்திணறால் திண்டாடியது. அதற்குள் அங்கு வந்து சேர்ந்த கிராம மக்கள், குழந்தையை தூக்கிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த துயர சம்பவ, ரசீத்புரா கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள maalaimalar.com

கருத்துகள் இல்லை: