உ.பி.யில் தொகுதி மக்களின் குறைகளை கேட்கச் சென்ற எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்குள்ள முகல்சாராய் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாபன் சிங் சவுகான். பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேந்த சவுகான், தனது தொகுதியில் உள்ள மூன்றாவது வார்டுக்கு மக்களின் குறைகளை கேட்டறிய சென்றுள்ளார். அவருடன் அப்பகுதி கவுன்சிலரும் உடன் இருந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலரை கட்டிப்போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களின் பிடியில் இருந்து எம்.எல்.ஏ சவுகான் மற்றும் கவுன்சிலரை மீட்டனர்.
வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததே மக்களின் சிறைபிடிப்பு போராட்டத்திற்கு காரணம் என்பது பின்னர் தெரியவந்தது maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக