புதன், 22 ஜூலை, 2015

கலைஞரின் பூரண மதுவிலக்க்கிற்கு அமோக வரவேற்பு! ஆதி தமிழர் பேரவை அறிக்கை!

மது விலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கலைஞர் அறிவிப்பிற்கு ஆதரவாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை அமல்படுத்தி அதை நடைமுறைபடுத்த  நடவடிக்கை எடுக்கப்படும், என தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு எதிராகவும், கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த காலங்களில் பல போரட்டங்களையும், ஒன்றியம், மாவட்டம் வாரியாக "மதுஒழிப்பு" மாநாடுகளையும் ஆதித்தமிழர் பேரவை நடத்தியுள்ளது, இப்போதும் நடத்திவருகின்றது. இதேபோன்று பல அரசியல்  கட்சிகளும் இயக்கங்களும்  போரடிவருகின்றது, இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது
.

  குறிப்பாக அருந்ததிய பெண்கள் மத்தியில் கலைஞர் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய 3 % சதவித அருந்ததியர் இட ஒதுக்கிட்டின் பயனாக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் தற்போதுதான் அருந்ததியர் மக்கள் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகின்றனர், இதற்கு தடையாக இந்த மது இருந்து விடுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைத்து கொண்டிருந்த  சூழலில் கலைஞரின் இந்த அறிவிப்பால் அது விலகியுள்ளது, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  எனவே தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தி அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூடி சீரழிவில் சென்று கொண்டிருக்கும் தமிழகத்தையும், மக்களை காப்பாற்ற  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமென ஆளும் அதிமுக அரசை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

  இதேபோன்று மத்தியில் ஆளும் பாஜக அரசு பூரண மதுவிலக்கு கொள்கையை இந்திய அளவில் உருவாக்கி அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய  அரசை கேட்டுகொள்கிறது.

  தலைவர் கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பு  அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒரு சிலர்  விமர்சித்து அறிக்கை விடுகின்றனர்,  இருந்த போதும். கடந்த காலங்களில் கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும்  படிப்படியாக நடைமுறைப்படுத்தியுள்ளார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு "சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்" என்ற கொள்கை கொண்ட கலைஞர் அறிவிப்புக்கு வழுசேர்க்கின்ற வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

  மதுவிலக்கை அமல்படுத்த திமுக எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தந்து துணை நிற்கும் என இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார் nakkheeran,in 

கருத்துகள் இல்லை: