புதன், 22 ஜூலை, 2015

தேவயானி கோப்ரகாடே, வெளியுறவுத் துறையின் விதிகளை மீறியுள்ளார்!

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாகப் பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தெரியாமல் அரசின் விதிகளை வேண்டுமென்றே மீறி அவருடைய இரண்டு மகள்களுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளார். இதனால் அவருடைய நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த தேவயாணி கொப்பரடே ஒரு டிபிகல் வெளியுறவுத்துறை ஊழல் பெருச்சாளி . ஆனால் என்ன இவர் ஒரு தலித் . எனிவே தினமணி போன்ற பத்திரிகைகள் டமாரம் அடிக்கின்றன 
தேவயானியின் குழந்தகளுக்கான இந்திய பாஸ்போர்ட்கள் செல்லாதென, கடந்த டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தேவயானி குழந்தைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பது தேவயானியின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவருடைய குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கும் தகவலை வெளியுறவுத் துறையிடம் அவர் மறைத்திருக்கிறார். இத்தகைய செயல்களால் இந்திய அரசை தேவயானி ஏமாற்றி விட்டார். இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான நடத்தை மற்றும் ஒழுங்கு விதிகளையும் மீறியுள்ளார். என பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. dinamani.com 

கருத்துகள் இல்லை: