திங்கள், 20 ஜூலை, 2015

தங்கத்தின் விலை வீழ்ச்சி ! இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில்!

இந்தியாவில் தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்தது. சீனா, அதிக அளவில் தங்கத்தை விற்றதால், அங்கு ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மற்ற நாடுகளை விட, இந்தியர்கள் தான் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா இருக்கிறது.திடீர் சரிவு: இந்நிலையில் இன்று காலை சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை திடீரென சரிந்தது. சீனாவில் தங்கம் வைத்திருப்போர் தங்களிடம் இருந்த இருப்பை விற்கத் துவங்கினர். இதனால் ஷாங்காய் தங்கம் மார்க்கெட்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,088.05 டாலராக வீழ்ந்தது. இது அங்கு ஐந்து ஆண்டுகளில் காணப்படாத வீழ்ச்சி. சிறிது நேரத்தில் விலை கொஞ்சம் நிமிர்ந்து, ஒரு அவுன்ஸ் 1100 டாலராக விற்றது.


இந்தியாவிலும் எதிரொலிப்பு: இந்த வீழ்ச்சி இந்தியாவில் எதிரொலித்தது. இன்று காலை 10 கிராம் தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு கீழே இறங்கியது. அதாவது, இருபத்து நான்காயிரத்து 970 ரூபாய்க்கு விற்றது. இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: