சனி, 18 ஜூலை, 2015

நாஜி வணக்கம் செலுத்திய இங்கிலாந்து ராணியின் போட்டோ வெளியானது!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், சிறு வயதில் அவரது சகோதரி மற்றும் தாயாருடன் சேர்ந்து நாஜி வணக்கம் செலுத்திய புகைப்படத்தை இங்கிலாந்தில் இயங்கி வரும் த சன் பத்திரிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பால்மோர் கேசலில் கடந்த 1933-ஆம் ஆண்டு வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கசிந்தது ராணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணி 6 வயது கூட நிரம்பாதபோது எடுக்கப்பட்ட அந்த படத்தை வைத்து இப்போது தவறாக பேசக்கூடாது. நாஜிக்களை பற்றிய உண்மை வெகுகாலம் கழித்துதான் இந்த உலகின் பார்வைக்கு வந்தது.
அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குதான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியும் என இங்கிலாந்து மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

மேலும், ராணி எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார். அவையெல்லாம் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் எலிசபெத் உடன் இருந்த மன்னர் எட்டாம் எட்வர்ட் ஹிட்லரின் ஆதரவாளர் என கருதப்பட்டது. எனவே அவர், ராணிக்கு சல்யூட் செய்ய சொல்லித் தந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

எண்பது ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கும் இந்த வீடியோ ராணியைப் பற்றி எல்லோர் மனதிலும் ஏகப்பட்ட குழப்பத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது maalaimalar.com

கருத்துகள் இல்லை: